ஸ்ரீ சாயி பாடல்கள்

சாயி ஸ்மரணை
ac821-sridisaibaba
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
பக்தர் உம்மை அழைக்கின்றோம்!
விருப்பம் ஈடேற வேண்டும்!
பக்தி பலமுற வேண்டும்!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

(மேலும் தொடர)

ஷீரடி ஸாயிநாதர் கவசம்

5788d-shirdi-sai-baba-wallpaper-eye-sai

ஷீரடி ஸாயிநாதர் கவசம்நவமணி மாலை போன்று நன்கமைந்துள்ள ஸ்ரீ ஸாயிநாதர் கவசத்தை நாள்தோறும் காலை, மாலை ஒன்பது தடவைகள் அன்பர்கள் ஓதிவரின் எவ்விடத்திலும் என் நேரத்திலும் எதனாலும் எவ்வித இடையூறும் நேராவண்ணம் ஸாயிபாபா முன்னின்று காத்து முழு அனுக்ரஹம் புரிவார் என்பது திண்ணம்.

ஷீரடி ஸாயி திருக்கவசம் யான் பாடக்
கார்மேனி ஐங்கரனே காப்பு

  1. திருவளரும் சீரடிவாழ் ஸ்ரீ ஸாயி
    நாதனவன் சிரசைக் காக்க
    அருள்வளரும் ஸ்ரீஸாயி அமலனவன்
    நெற்றியினை அமர்ந்து காக்க
    பொருள் வளரும் ஸ்ரீஸாயி புனிதனவன்
    வதனமதைப் பொலிந்து காக்க
    தெருள்வளரும் ஸ்ரீஸாயி தேவனவன்
    கண்ணிரண்டும் தினமும் காக்க
  2. புவியிறைஞ்சும் ஸ்ரீஸாயி புருவங்கள்
    இரண்டினையும் புகழ்ந்து காக்க
    செவியிரண்டும் ஸ்ரீஸாயி சேவகன்தான்
    எந்நாளும் சேர்ந்து காக்க
    தவமுனிவன் ஸ்ரீஸாயி பாபாஎன்
    தலைமயிரைத் தழைந்து காக்க
    நவமணியான் ஸ்ரீஸாயி பாபாஎன்
    நாசியினை நயந்து காக்க

(மேலும் தொடர)

ஷீர்டி ஸாயிபாபாவின் மூல மந்திரம்

ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி

சாயிபாபா பாமாலை

5006f-so_162924000000

ஷீர்டியே உலகின் அழகிய புனிதத்தலம்
ஸ்ரீ சாயிபாபா அவதரித்து அருளிய தலம்
கல்பதருவினும் பேறு பெற்ற வேப்ப மரம்
அதன் மடியில் அமர்ந்தாரே இறைவனின் வரம்

பதினாறு வயதே நிரம்பிய பாலகனாம்
பல சூரிய சந்திரர் சேர்ந்த ஒளிப்பிழம்பாம்
ஞானம், அழகு நிறைந்த ஆண்டவர் மகனாம்
நீர் அமர்ந்ததும் கசப்பு வேம்பும் இனிப்பானதாம்

திருவே அமர்ந்தாள் உன் நெற்றியில் திலகமாய்
தேஜஸ், ஸெளம்யம் நிறைந்த உருவமாய்
வெயில், மழை பாராமல் தவமும் செய்தாய்
பாலகன் ரூபத்திலே உலகில் தோன்றினாய்

(மேலும் தொடர)

சாயி பாவனி

5788d-shirdi-sai-baba-wallpaper-eye-sai

  1. ஜய ஈஷ்வர் ஜய சாயிதயாளா
    நீயே ஜகத்தின் பாதுகாப்பாளர்
  • தத்த திகம்பர ப்ரபூ அவதாரம்
    இவ்வுலகமே உந்தன் கைவசம்

  • ப்ரஹ்மாச்யுத சங்கர அவதாரம்
    சரணடைந்தோரின் பிராணாதாரம்

  • தரிசனம் தாரீர் ஓ! என் பிரபுவே
    போதும் இந்த பிறவிப்பிணியுமே

  • வேப்ப மரத்தினடியில் தோன்றினாய்
    கிழிந்த கப்னியே பொன்னாடையாய்

  • (மேலும் தொடர)

    ஓம் ஸ்ரீ ஷீர்டி சாயி அஷ்டோத்திரம்

    12c55-shirdiblink

    1. ஓம் ஸ்ரீ சாயி கணேஷாய நம:
    2. ஓம் சத்குரு சாயிநாதாய நம:
    3. ஓம் ஸ்ரீ ஜகத்குரு சாயிநாதாய நம:
    4. ஓம் பரமகுரு சாயிநாதாய நம:
    5. ஓம் தேவகுரு சாயிநாதாய நம:
    6. ஓம் சாயி சிவசக்த்யை நம:
    7. ஓம் சாயி சர்வ சக்திமானாய நம:
    8. ஓம் சாயி சர்வ வ்யாபங்காய நம:
    9. ஓம் சாயி சர்வ ஆத்மாய நம:
    10. ஓம் சாயி அலக் நிரஞ்சனாய நம:
    11. ஓம் சாயி சர்வ சாட்சியாய நம:
    12. ஓம் சாயி அந்தர்யாமியாய நம:
    13. ஓம் சாயி பரிபூரஜாத நம:
    14. ஓம் சாயி ஆதிசக்தியை நம:
    15. ஓம் சாயி அனாதி சக்த்யை நம:
    16. ஓம் சாயி ராமாய நம:
    17. ஓம் சாயி த்ரிலோகி நாதாய நம:
    18. ஓம் சாயி த்ரைகால தர்ஷியாய நம:
    19. ஓம் சாயி கோவிந்தாய நம:
    20. ஓம் சாயி சச்சிதானந்த ஸ்வரூபாய நம:
    21. ஓம் சாயி பக்த ரக்ஷகாய நம:

    (மேலும் தொடர)

     

    ஸ்ரீ சாய்நாத மூல பீஜ மந்திராட்சர ஸ்தோத்திரம்

    sai-guide-us

    சாய் பக்தை அன்புச்சகோதரி கீதா அவர்கள் மின்னஞ்சலில் சாய் பீஜ மந்திராவினை அனுப்பி வைத்திருந்தார்.  இங்கு வெளியிடப்பட்டுள்ள இம்மந்திரம்  ஆங்கிலத்தில் உள்ளது. இதனை தமிழில் விரைவில் வெளியிட முயற்சிக்கிறோம்.

    இம்மந்திரம் குறித்து சகோதரி கீதா அவர்கள் தெரிவித்துள்ளது:

    சாய் பீஜ மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும். இரண்டு ஆண்டுகட்கு முன்பு இம்மந்திரம் மூலமாக ஒரு நல்ல வேலை எனக்கு கிடைத்தது. இம்மந்திரம் நிச்சயமாக சாயி பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும். முழு மன ஒருமைப்பாட்டுடன் இதனை வியாழக்கிழமை தோறும் 1, 3, 5, 7, 9 முறை படித்தால் சாயி பக்தர்கள் தங்களது எண்ணம் ஈடேறுவது என்பது உறுதி என்று தெரிவித்து இதனை நமது வலைதளத்தில் பதிவேற்ற கேட்டுள்ளார்.

     

    (மேலும் தொடர)

    Leave a comment