பாபா கடவுளா?


பாபா கடவுளா?
பாபாவை ஒரு ஞானி என்று சொல்லலாமே தவிர, கடவுள் என்று சொல்வது தகுமா? இறந்தவரை வழிபடுவதைப் போலத்தானே அவரை வழிபடுகிறோம்?

          கே.பிரகதி, தஞ்சை.

        நமது உணர்வுகளுக்கும், உண்ர்ந்திருப்பதற்க்கு ஏற்பவும் மட்டுமே நாம் பிறரை எடைபோடுகிறோம். ஞானிகள் விஷயத்திலும் இப்படித்தான் நினைக்கிறோம்.

ஜ்ஞானி து ஆத்மைவ மே மதம்

என்று கீதையில் சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்துப் படியுங்கள். இதில் ஞானியானவன் நானே என்று பகவான் சொல்லியிருக்கிறார். உங்கள் கருத்துப்படி பார்த்தால் சிவனைத் தவிர பிற தெய்வ மூர்த்தங்கள் அனைத்துமே இறந்தவர் கணக்குத்தான். அப்படியிருந்தபோதும் நீங்கள் ஏன் சிவனை மட்டுமே உபாசிக்கவில்லை?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

             தெய்வத்துள் வைக்கப்படும்

என்று வள்ளுவர் கூறியதை அறிவீர்களா?  ஞானி மட்டுமில்லை, பகவானையும் மற்ற உயிர்கள் அனைத்தையும் வேற்றுமையின்றி யார் அன்பு காட்டி நேசிக்கிறாரோ அவரே கடவுள். அப்படி அன்பு காட்டி நேசித்த பாபா கடவுள்.

         கடவுளும் ஞானியும் ஒரு சேர தோன்றினால் குருவே அதாவது ஞானியே வணங்கத்தக்கவர். அவரே இறைவன் கோட்பாடுகளை எடுத்துக்கூறி நம்மை வழிநடத்துகிறார். அவர் கடவுளை விடவும் மேலானவர்.

         பாபாவை ருசித்துப் பார்த்தால் பாபா கடவுளா? செத்தவரா? என்பது தெரியும். அவர் பரமாத்மா, பரப்பிரம்மம், அந்தர்யாமி, ஆதி அந்தம் இல்லாத வேத முதல்வன். இப்படி நிறைய உணர்ந்து கொள்ள முடியும். காலம் உங்களுக்கு கற்றுத்தரும். 

                                                      சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து
Advertisements

தொடர் கஷ்டம் ஏன்?


தொடர் கஷ்டம் ஏன்?
எவ்வளவு தூரம் கடவுளை வழிபட்டாலும் கஷ்டம் போவதில்லையே ஏன்?

          ஆர் கோகிலா, சென்னை 14

            அழுதாலும் பிள்ளையை அவள்தான் பெறவேண்டும் என்று இருப்பதால்!  கடவுளைப் பிடித்துக்கொள் என உபாயமாகச் சொன்னாலும் எப்போதும் கவலையையே பிடித்துக்கொண்டிருப்பதால்!  கடவுளை வழிபட்டுக்கொண்டு கஷ்டத்தையே தியானித்துக்கொண்டு இருப்பதால் கஷ்டம் போகாமல் நிலையாக இருக்கும்.

                                                      சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

சிஷ்யனாக இருக்க


சிஷ்யனாக இருக்க
குருவை உபாசிக்கவும் சிஷ்யனாக இருக்கவும் என்னென்ன தகுதிகள் தேவை?

          எம்.ஸ்ரீதரன், சின்ன காஞ்சிபுரம்

         சிஷ்யன் கர்வம் இல்லாதவனாகவும், பொறாமை இல்லாதவனாகவும், மமதை இல்லாதவனாவும், குறை பட்டுக்கொள்ளும் இயல்பு இல்லாதவனாவும் இருக்கவேண்டும்.  வீண் பேச்சு பேசாதவனாகவும், சாமர்த்தியம், திடமான அன்பு உள்ளவனாகவும் இருக்கவேண்டும். அவசரப்படாதவனாக இருக்கவும் வேண்டும்.

         எந்நேரமும் குரு சேவை செய்வதிலேயே கண்ணாக இருப்பவர். குருவின் ஆணைக்குக் கீழ்படிபவர். இஷ்டமான செயலா, இஷ்டமற்ற செயலா என்பது பற்ரி ஆராய்ச்சிகள் செய்யாதவர். கவலைகளை எல்லாம் குருவின் தலைச்சுமைக்கு விட்டுவிடுகிறவரே சிஷ்யராக இருப்பதற்க்கு தகுதியானவர்.

         குருவின் ஆணைக்கு அவர் அடிமை. சுதந்திரமான கருத்து என்பது அவருக்கு இல்லை. குருவின் வசனத்தை எந்நேரமும் பரிபாலனம் செய்யும் ஆர்வத்தில் நல்லதா கெட்டதா என்ற ஆராய்ச்சியும் அங்கில்லை.

          சிந்தனையை குருவின் நினைவில் வைத்து அவரது பாதங்களில் நிலை பெற்றும், மனம் அவரது தியானத்திலேயே ஈடுபட்டும், தேகம் முழுதும் குரு சேவைக்கு அர்ப்பணமாகும் நிலை பெற்றவரே சிஷ்யன்.

                                                      சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

புத்திசாலித்தனம்


புத்திசாலித்தனம்
புத்திசாலித்தனத்தை எந்த இடத்தில் பயன்படுத்தலாம்?  காரியம் பெரிதா?  வீரியம் பெரிதா?

          பி.லலிதா, சென்னை 94.

        பிறருக்கு சேவை செய்யும் நோக்கில் இடையூறு ஏதேனும் வந்தால் அந்த இடத்தில் பயன்படுத்தலாம். இடையூறு செய்பவரே போற்றும் அளவுக்கு புத்திசாலித்தனம் இருக்கவேண்டும். இதற்கு உதாரணம் அனுமன்.

        அனுமன் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்த தேவர்கள், அவரை சோதிக்க நாகர்களின் தாயான  சுரஸை என்பவளை அனுப்பி இடையூறு செய் எனச் சொன்னார்கள்.

        அவளும் அனுமன் எதிரே வந்து நின்று, எனக்குப் பசிக்கிறது, வாயை அகலமாகத திறக்கிறேன், அதில் புகுந்துவிடு என்றாள்.

       ராம காரியமாகப் போகிறேன், அது முடிந்ததும் நானே உன் வாயில் புகுந்துவிடுகிறேன் என்றார் அனுமன்.

        “அது முடியாது. முடிந்தால் என் வாய்க்குள் புகுந்து வெளியேறு இல்லையென்றால் உன்னைக் கடித்தே தின்றுவிடுவேன்  என்றாள் சுரஸை.

        “தாயே வாயைத் திற. அதில் புகுந்து வெளியேறுகிறேன்என்றார் அனுமன். வாயை அகலமாகத் திறக்கத் திறக்க அதற்கு இரண்டு மடங்கு அதிகமாக பெரிய உருவத்தை அனுமன் எடுத்தார்.

         ஐம்பது யோஜனை நீளம் வாய் பெரிதானதும், மிகக்குறுகிய உருவத்தை அடைந்து, உடனே வாய்க்குள் போய் வெளியே வந்துவிட்டு, “அம்மையே நமஸ்காரம். உன் வாய்க்குள் புகுந்து வெளியே வந்துவிட்டேன் என்றார்.

             “அறிவில் சிறந்தவனே, நீ எடுத்த காரியம் ஜெயமாகும்என  வாழ்த்தி அனுப்பினாள் சுரஸை.

          இங்கே அனுமன் வீரியத்தைக் காட்டவில்லை. காரியத்தைப் பெரிதாக எடுத்துக் கொண்டார். சீதையைக் கண்டுவிட்டு வந்ததும் “கண்டேன் சீதையைஎன்றார். இவரை கம்பர் “சொல்லின் செல்வர்என்று போற்றுகிறார்.

 

                                                      சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

இதுதான் காரணமா?


இதுதான் காரணமா?
உங்களைப் பார்த்ததும் ஒரு நம்பிக்கை , தைரியம் தானாகவே வந்துவிடுகி
றதே….. இது எப்படி?

          கே.ஜி.பாஸ்கரன், சென்னை 40

         அடச்சீ! இவனைப் பார்த்தால் அப்படியொன்றும் பெரிதாகத் தெரியவில்லை. இவனே இந்தளவுக்குப் பேசுகிறான், நடக்கிறான். இவனுக்கே இவ்வளவு செய்யும் போது, பாபா எனக்குச் செய்யமாட்டாரா என்ன? என்று நீங்கள் உங்கள் மனதி நினைத்துக் கொள்வதால் இருக்கலாம்.

                                                      சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

தேவை பக்தி


தேவை பக்தி
பாபாவிடம் வேண்டியதைப் பெறுவதற்க்கு ஒன்பது வார விரதம், வியாழக்கிழமை விரதம், தேங்காய் மந்திரித்துத் தருதல் போன்றவற்றைச் செய்கிறார்கள். முக்கியமாக இதில் எதைப் பின்பற்றலாம்?

          கே.ராஜா, செங்கல்பட்டு.

        இவை எதனாலும் முழுமையாக பாபாவின் அருளைப் பெற்றுவிடமுடியாது. பிரேமை மிகுந்த பாசகாரப் பக்தி ஒன்றினால் மட்டுமே அவரது அருளினைப் பெற இயலும். விரதமெல்லாம் எதிர்பார்ப்புக்காக செய்வது. பகவானிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பக்தி செய்யும்போது அவன் நமக்கு வேண்டியதை செய்துவிடுவான்.

                                                      சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து