சீக்கிரமே உனக்கு நல்ல வழி பிறக்கும்!

Image

 

அப்பா தனது இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்தார். ஒருவன் பள்ளிக்கு ஒழுங்காகச்சென்று படித்தான். மற்றவன் விளையாட்டாகப் பொழுது போக்கி நாளடைவில் பள்ளிக்குப்போவதையே  நிறுத்திவிட்டான்.

பள்ளி செல்வதை நிறுத்தி தந்தையின் பேச்சைக் கேட்காமல் தன் விருப்பத்திற்கு நடந்தான். படிக்கிற மகனோ, தந்தையின் சொல்லை மதித்துவந்தான்.

அப்பா, படிக்கிற மகனை சின்னச் சின்ன தவறுகளுக்காகவும் அடிப்பதும், திட்டுவதுமாக இருந்தார். கட்டுப்பாடுகளை நிறைய விதித்தார். அடிக்கடி நிந்தித்தார். பள்ளியிலும் கெடுபிடிகள் அதிகம். பாடச் சுமை வேறு. இந்நிலையில் அப்பாவின் செயல்களும் இவனை நெருக்க, இந்த நிந்தனையை சகிக்க முடியவில்லை. ஒரு நாள் அப்பாவை எதிர்த்துக் கேள்வி கேட்டு விடுவது எனத் தீர்மானித்தான்.

அவனது கொந்தளிப்பை உணர்ந்த அப்பா சொன்னார், “மகனே! உனது சகோதரனை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவனது எதிர்காலம் அவனாலேயே தீர்மானிக்கப் பட்டுவிட்டது. ஆனால், உனது எதிர்காலம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.  இந்த வயதில், படிக்கிற இந்தக்காலத்தில் எவ்வளவு சுமைகளை சுமக்கிறாயோ அவ்வளவுக்குப்பின்னாளில் நன்றாக இருப்பாய். சுமாராகப் படித்தால் சின்ன வேலைக்குப் போவாய், நன்றாகப் படித்தால் பெரிய பதவிக்குப்போவாய். கசப்பான அனுபவங்களைப் பழகிக்கொண்டால், பின்னாளில் உனக்காக ஒதுக்கப்படும் துறைக்குத் தலைவனாக மாறுவாய்.. ஆகவே உன்னை உருவாக்குவதற்கு உனக்குக்கடுமையான சோதனைகளைத்தருகிறேன். படிக்கிறவனுக்குத்தான் தேர்வு, படிக்காதவனுக்கு அந்தக் கவலையில்லை. தேர்வுகள் ஒருவனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். உன் சகோதரனை நான் கண்டுகொள்ளாமல் விடுவது என்பது அவனுக்கு நான் வழங்குகிற தண்டனை. இது அவனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்..” என்றார்.

மகன் அப்பாவின் பேச்சிலுள்ள உண்மையை உணர்ந்தான்..தன்னை சீர்படுத்திக் கொண்டான்.

இப்படித்தான் குழந்தாய்!

 உனக்கு வரும் சோதனைகள் அனைத்தும் என்னால், நல்ல –  நேர்மை தவறாத  – சத்தியத்தை, விரும்புகிற குழந்தையாகிய உனக்குத் தரப்படுகிறது. பிற்காலத்தில் இது உனக்கு நன்மையாக மாறும்.

குழந்தை நன்றாக நடக்கப் பயிற்சி தரப்படுவதைப் போலத்தான் ஒவ்வொரு நபருக்கும் பயிற்சி தரப் படுகிறது. நீயும் இப்போது அந்தப் பயிற்சிக் கட்டத்தில் இருக்கிறாய். நான் உன்னைப் பழக்குவிக்கிறேன். சீக்கிரமே உனக்கு நல்ல வழி பிறக்கும்-

 

சத்தியத்திற்கு மட்டுமே சோதனை. அநீதிக்கு தண்டனை வழங்கப்படும். தண்டிக்கப்பட்டவன் பழைய குற்றவாளி எனப்படுவான். கண்டிக்கப்படுகிறவனோ, அப்படி அழைக்கப்பட மாட்டான்.

இப்போது உனக்கு தெம்பும், வயதுமிருக்கிறது, உடம்பும் உன் பேச்சைக் கேட்கிறது. எனவே, இக்காலத்தில் என்னால் தரப்படுகிற சோதனையை தாங்கிக்கொள்ள உன்னால் முடியும்.

எனது சோதனைகள் உன்னை அழிப்பதற்காக அல்ல, நடைமுறை வாழ்க்கையை நீ நன்றாக உணர்வதற்காக. இந்த உணர்ந்துகொள்ளுதல் எப்போதும் உள்ளத்தில் இருந்தால், பிற்காலத்தில் இத்தகைய நிலையை நீ சந்திக்க நேர்ந்தால் எச்சரிக்கையாக இருப்பாய். அதற்காக உனக்கு தேர்வுகளை முன்னதாகவே நான் வழங்குகிறேன்.

நான் குரு என்பதை நீ உணர்ந்து இருக்கிறாயா?

குருவின் வேலை மாணாக்கனுக்கு உணவூட்டி, உறங்க வைப்பதா? இல்லையே- அவனுக்கு பல வழிகளில் பயிற்சி தருவதுதானே ஒரு தாய் இளம் குழந்தையை கைப் பிடித்து நடக்கப்பழகுவாள். குழந்தை நடக்கும்போது பிஞ்சுக் கால் எலும்பு உடைந்து விடும் என பயந்தால், அந்தக் குழந்தை நடக்குமா? நடந்தால் வலிக்கிறது என குழந்தை நினைத்து நடக்காமல் இருந்துவிட்டால் அந்தக் குழந்தை என்னவாகும்?

குழந்தை நன்றாக நடக்கப் பயிற்சியளிக்கப்படுவதைப் போலத்தான் ஒவ்வொரு நபருக்கும் பயிற்சி தரப்படுகிறது. நீயும் இப்போது அந்தப் பயிற்சிக் கட்டத்தில் இருக்கிறாய். நான் உன்னைப்பழக்குவிக்கிறேன். உனது கழுத்தில் நுகத்தைப் பூட்டுகிறேன்.. அது வலியைத் தரத்தான் செய்யும்.

கழுத்து பாரத்தாலும், உராய்வாலும் புண்ணாகும். இதற்கு மருந்து போட்டுக்கொண்டும், இதை சகித்து பாரத்தைச் சுமக்கக் கற்றுக்கொண்டால் எல்லாம் சரியாகும். குழந்தை தானே நடக்க முயற்சிப்பது போல, நீயும் கஷ்டத்தில் கலங்கி சோர்ந்துவிடாது, அதிலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்யவேண்டும்.

துவக்கத்தில் இது கஷ்டமாகத் தெரியும். பின்னாளில் கஷ்டமும் பழகிவிடும், பெரிய இன்பம் வந்தாலும் மமதை வராது.

எதற்காகவும் வருத்தப்படாமல் வாழ்ந்த உனக்கு, இதோ எத்தனைத் தொல்லைகள்.. அடுக்கடுக்காக என் உயிரைக் கூட எடுத்துக் கொள். என்னால் வாழ முடியவில்லை, எனக்கு வாழப் பிடிக்கவில்லை எனப்புலம்புவது ஏன்? கோழையைப் போல சோர்ந்து போவது ஏன்?

எல்லா இடத்திலும் சோதனை என நொந்து கொள்ளாதே. அந்த சோதனை அனைத்தையும் எப்படி தாங்குகிறாய் என நான்தான் உன்னை சோதிக்கிறேன். என்னைத் தேடி எனது ஆலயம் வந்த போது, யாரோ ஒருவர்.. உனக்கு எந்த விதத்திலும் சமமில்லாதவர் உன்னைத் தடை செய்தபோது நீ திகைத்தாயே- என்னப்பா.. இது..? நீ என்னை விரட்டுகிறாயா? என்று கேட்டாயே எல்லாம் எனது நேரம் என நொந்து கொண்டாயே- இது காலமல்ல குழந்தாய்- கோலம்- இவர்களை அனுப்பி, உன் கெட்ட நேரத்தைத் தீர்த்து உனக்கு அனுக்கிரகம் செய்கிறேன் என்பதை இத்தகைய நிகழ்வுகளில் இருந்து நீ உணர்ந்துகொள்.

எல்லோரும் சென்றுவிடுவார்கள்.. நானும் நீயும் மட்டும்தான் வீட்டில் இருப்போம்.. அப்போது  நீ என்னிடம் என்னவெல்லாம் புலம்புவாய்.. இதை அப்பாவின் காதுகள் கேட்கவில்லை. அப்பா நடுவீட்டில் கல்லாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறாயா?

என்னைப் போற்றிப்பாடும் பஜனைகளுக்கும், நிகழ்வுகளுக்கும் எவ்வளவு துரிதமாக ஓடுகிறாய்.. ஆர்வமாக என்னைத் தேடுகிறாய்.. எத்தனை மகான்களை நாடி அவர்கள் மூலமாக எனது அருளை நாட முற்படுகிறாய். உன் அப்பாவுக்கு மனம் இல்லை என நினைக்கிறாயா?

இல்லை.. அனுதினமும் உன்னோடு இருக்கிற என்னை உணர்ந்து கொள்ளாமலும், துன்ப நிலைகள் மூலம் உன் துன்பத்தைத் தேய்த்து இன்பத்தை சேர்த்துக் கொண்டிருக்கும் என்னை கண்டுகொள்ளாமலும் இருக்கிறாயேநான் இருக்கும் இடத்தை விட்டு, நான் இல்லாத இடம் தேடி ஓடுவது ஏன்? நான் பட்டினி கிடக்க, பிறருக்கு அளித்து பெயர் சேர்த்துக் கொள்ளவும், அவர்களது அன்பைப் பெறவும் முயல்வது ஏன்?

நான் இல்லாமல்,நான் விரும்பாமல், நான் செய்யாமல் பிறர் மூலம் உனக்கு என்ன நன்மை கிடைத்துவிட முடியும்?

ஆவதும் என்னாலே, அழிவதும் என்னாலே என்பதை ஏன் அறியாமல் இருக்கிறாய்? சர்வ சக்தியுள்ள என்னை உனக்குள் வைத்துக் கொண்டு, புத்தியில்லாமல் ஏன் பிதற்றுகிறாய்? சர்வ சக்தியுள்ள நீ என்னோடு இருக்கும்போது, எனக்கு ஏன் இந்த சோதனை என்கிறாயா?

என் குழந்தாய்- மானிடப் பிறப்பு எடுக்கும்போது உனக்கு என ஒரு கணமான பாத்திரத்தைத் தந்திருக்கிறேன். அதில் நடிக்கிறாய். அவ்வளவு தான். சோகமும்,கோபமும், இன்பமும் துன்பமும் வெறும் நடிப்பு. எதுவும் நிலையானது அல்ல.. இதை அரங்கேற்றிக் கொண்டிருப்பது நான்.

என்னை முழுவதுமாக நம்பு. அப்போது உனக்கு இளைப்பாறுதல் செய்வேன். என்னிடம் முழு மனதோடு கேள். என்னிடமுள்ள அனைத்தை யும் நான் உனக்குத் தருவேன்..

சோதனையும் வேதனையும் உன்னை சோர்ந்து போகச் செய்வதற்கு வருவதில்லை. போதனை செய்வதற்காகவே வருகின்றன. போதனையை உணர்ந்தால் உனக்குச் சாதனையாக மாறும்.

ஒவ்வொரு நிலையை நினைத்தும் வேதனைப்படுகிறாய். பிள்ளை நலனை நினைத்து வேதனை. இழந்து போனதை நினைத்து வேதனை.. நோகச்செய்பவர்களை நினைத்து வேதனை.. இப்படி வேதனை மேல் வேதனைப்பட்டு எதைச் சாதிக்கப் போகிறாய்? உனது கவலையால் எதையேனும் சாதிக்கமுடிந்தால் சொல்லேன்..

கவலை என்பது உன் மனதை என்பால் திரும்பாமல் கட்டி வைக்கிற வலை. முதலில் இந்த வலைக்குள் இருந்து வெளியே வா.. அப்போது எனது அனுக்கிரகம் உனக்குக் கிடைக்கும். எனது அனுக்கிரகத்தாலேயே உனது கிரகம் சரியாகும்.

சீ என்ன வாழ்க்கை இது? என நொந்துக்கொள்ளாதே. நீ வாழ்கிற வாழ்க்கையும் வாழ வேண்டும் என்று நினைத்துக் கொள். ஒவ்வொரு நொடியையும் நான் உனக்குத் தருகிற வரமாக நினைத்து அதை இன்பமாக்கிக் கொள்ளப் பழக்கு.

கடமைக்காக வாழ முயற்சி செய்யாதே. சிறப்பாக,  இனிமையாக,  மென்மையாக, எல்லோருக்கும் நன்மை தரத்தக்க வகையில் வாழ்வதைக் கடமையாக நினைத்து அதன்படி வாழ முயற்சி செய். பகைக்கிறவர்களை பகைக்காதே, வெறுக்கிறவர்களை வெறுக்காதே. தீமை செய்கிறவர்களுக்கு தீமை செய்யாதே. கொடுமைப்படுத்துகிறவர் களை ஒடுக்க, கோள் சொல்வதையும், பின்னால் பழிப்பது போன்ற வற்றையும் செய்யாதே.

உலகத்து மக்கள் அனைவரும் இதைத்தான் செய்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்த வரை நீ இவர்கள் எல்லோரை விடவும் மேம்பட்ட நபர்.

உயர்ந்தவர். வித்தியாசமானவர். நீ சாயி பக்தக்குழந்தை. உனக்கும் மற்றவர்களுக்கும் இடையில் வித்தியாசத்தைக் காட்ட வேண்டாமா? அதன் படி நடக்க வேண்டாமா? நடந்து காட்டு. முதலில் உன்னை நான் விரும்புகிற வழியில் மாற்றிக்கொள்.

நான் பாபாவைத்தான் கும்பிடுகிறேன், ஆனால் கஷ்டங்கள் போகவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாமா என நினைக்கிறேன் என்று ஒரு போதும் சொல்லாதே

என்னைக் கும்பிடுகிறவர்கள், நான் தரும் அற்புதங்களை அனுபவிக்கிறவர்களாக மட்டும் இருக்கக்கூடாது. என்னால் அனுமதிக்கப்படுகிற சோதனையான கஷ்டத்தையும் சகிக்கிறவர்களாக மாறவேண்டும்.

எவ்வளவு தாங்குகிறாயோ, அந்த அளவுக்கு உயர்வு உனக்குக் காத்திருக்கிறது. எல்லா இன்னல்களுக்கும் ஒரு முடிவு உண்டு. அந்த முடிவு உனக்கு சுபமாக மாறவேண்டும் என்றால், இன்றைக்கு இந்த நிலையை சகித்துக் கொண்டிரு.

சீக்கிரமே உனக்கு நல்ல வழி பிறக்கும். அது வரை பொறுமையோடு காத்திரு.

அன்புடன்

அப்பா சாயி பாபா

Advertisements

நிச்சயமாகவே நீ நினைத்தது நடக்கும்!

ac821-sridisaibaba

”பொறு, உனது கவலைகளை தூர எறி. உனது துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டு வேதனைப்பட்டவனாக இருப்பினும், இந்த மசூதியில் கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். இங்கே உள்ள பக்கிரி மிகவும் அன்பானவர். அவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார். எல்லோரையும் அன்புடனும் ஆசையுடனும் பாதுகாப்பார்”

நமக்கு ஏற்றதைத் தருவார் பாபா!

Image

 

என் தாத்தா காலத்திலிருந்து நாங்கள் பாபாவை வணங்கியும் இன்னும் எங்கள் துன்பங்கள் தீரவில்லை. என்ன செய்யலாம்? அவரை எப்படி வணங்கினால் எங்கள் கஷ்டம் போகும்? எனப் பலர் கேட்கிறார்கள்.
இந்த நிலையில் நீங்கள் இருந்தால், உங்களுக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை, மனதில் சந்தேகம் உள்ளது. அதனால்தான் உங்களது துன்பங்கள் உங்களை தொடர்கின்றன என்பேன் நான்.
இல்லை.. நான் தீவிரமாகத்தான் அவரை நம்புகிறேன் என்பார்கள் பலரும்.
அப்படியானால், எதற்காக இன்னும் உங்களது துன்பங்கள் தீரவில்லை என நினைக்கிறீர்கள்? என்ன செய்யலாம்? என எதற்காகக் கேட்கிறீர்கள்? எப்படி வணங்குவது எனக் குழம்புவது ஏன்? என இப்படி கேட்பேன்.
உண்மையான பக்தி என்பது இப்படி கேள்வி எதுவும் கேட்காமல் இறைவனை நம்புவது. அவர் காப்பார், அவர் பார்ப்பார், அவர் சேர்ப்பார், அவர் தருவார்.. என்ற பரிபூரண நம்பிக்கை எதிலும் நமக்கு வரவேண்டும். இந்த நம்பிக்கை பூரணமாகும் போது, சத்குருவின் அருளும் பூரணமாக நமக்குக் கிடைக்கும். அப்போது கஷ்டங்கள் எதுவும் இருக்காது.
சத்குரு என்பவர் பரப்பிரம்மத்தின் இன்னொரு தோற்றம். அவர் தாயை விட மென்மையானவர். பிறந்த குழந்தை தானே நடக்காது என்பதால் எப்போதும் அதைத் தூக்கி வைத்துக்கொண்டிருப்பாள் தாய். அப்படித்தான் நமது சத்குரு நம்மை தூக்கி வைத்துக்கொண்டு இருப்பவர்.
நம்மை தாக்குகிற எல்லா துன்பங்களும் அவரைத்தான் தாக்குகிறதே தவிர, நம்மைத் தாக்குவதில்லை.
குழந்தை நடக்கிற பக்குவத்துக்கு வந்த பிறகு, மண்ணில் இறங்கி ஓட முயலும்போது, தாய் அதைத் தூக்கி வைத்துக்கொள்கிறாள். அப்போது குழந்தை, இந்த அம்மா என்னை முடக்கி வைத்து விட்டாள் என நினைக்கும்.
குழந்தை கையில் கிடைத்த அனைத்தையும் வாயில் எடுத்து வைத்துக்கொள்ளும். உடனே அம்மா அதை அக்குழந்தையின் கையிலிருந்து பிடுங்கிப் போட்டுவிட்டு, கையை சுத்தமாகக்கழுவுவாள். உடனே, குழந்தை, இந்த அம்மா நமக்குக் கிடைத்ததையும் பறித்துக்கொண்டு, ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டாள் என அழும்.
படியின் மீது குழந்தை தவழ்ந்து ஏறும்.. உடனே அம்மா… அதைப்பிடித்துக்கொண்டு வந்து தரையில் போடுவாள்.
அவள் வீடு முழுக்க சுற்றி வந்து வேலை செய்து கொண்டிருப்பாள். ஆனால், ஓடுகிற குழந்தையை ஏதாவது ஒன்றில் பிணைத்து வைத்திருப்பாள்.. சில சமயம் நீண்ட கயிறால் குழந்தையின் இடுப்பில் கட்டி வைத்திருப்பாள்.
குழந்தை கயிற்றின் எல்லை வரை மகிழ்ச்சியாக துள்ளி ஓடும்.. பிறகு விழுந்து எழும். இந்தக் குழந்தையின் நிலையைத்தாண்டி, அது பெரிய நிலைக்கு வரும்போது தாய் இப்படி செய்வதில்லை. அந்த நிலைக்கு இந்தக் குழந்தைக்கு என்ன தேவையோ அதைத் தருவதற்கான முயற்சியில் இருப்பாள்..
உணவிலிருந்து, உடையிலிருந்து, கல்வி, அறிவு, பண்பு முதல் அனைத்தையும் பக்குவம் பார்த்து ஊட்டுபவள் தாய். இது உடம்பை வளர்க்க, உலகை ஜெயிக்க, வாழ்வில் சிறக்க நம் தாய் நம்மை தயார்படுத்துகிற செயல்.
பகவான், தாயினும் மேலானவனர். அவர் ஆன்மாவைப் பெற்றவர். அதனுடைய நலனே அவருக்கு முக்கியம். எனவே, உலகை ஜெயிக்க நினைத்து மாய வலையில் சிக்கிக் கொள்கிற ஆன்மாவுக்கு எது நல்லதோ, எது அவசியமோ அதை அவரே பார்த்து நிர்ணயித்து தருவார். மற்றவற்றைத் தரமாட்டார்.
நாம் குழந்தை மாதிரி நம் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கிறோம். கடவுள் நம் தேவைக்கும், நலனுக்கும் ஏற்ப நம்மை நடத்துகிறார். இதுதான் நமக்கு கஷ்டமாகத் தெரிகிறது.
அவரது பலத்த கரங்களுக்குள் நாம் அடங்கி, அவர் செய்வதற்கெல்லாம் உடன்பட்டுக்கொண்டு இருந்தால் எல்லா விசயங்களையும் நமக்கு ஏற்ப அவரே தருவார்.
ஒருமுறை நமக்குத் தந்ததை மீண்டும் அவர் மாற்றமாட்டார்.. தொடர்ந்து நாம் ஜெயித்துக்கொண்டே இருப்போம். எனவே, அவர் விருப்பத்துக்கு நடந்திட உறுதி பூணுவோம். அவர் பாதம் பற்றுவோம்.

ஜெய் சாய்ராம்!

பாபா கைவிட மாட்டார்!

sai-guide-us

சாயிதரிசனம்வாசகர்களுக்குஎன்பெயரைச் சொன்னால்தெரியாது. என்மாமனார்பெயர் தற்போதுசாயிதரிசனம்இதழில்இடம்பெற்று வருகிறது. அதனால்அவரைஎல்லோருக்கும் தெரியும். அவர்பெயர்சி. சண்முகம். பாபாவின் அனுக்கத்தொண்டர்அவர்.

நாங்கள்குடும்பமாகபாபாவைவணங்கி வருகிறோம். எங்களுக்குநிறையஅற்புதங்கள் செய்து, இழந்துபோனவாழ்க்கையைமீட்டுத்தந்துவாழ்க்கையில்உயரத்திற்குக்கொண்டு சென்றவர்பாபா. அதற்காகஅவருக்குமுதலில் எனது நன்றிகள்.

என்வாழ்க்கையில்வந்ததுமுதல்அரியபெரிய செயல்களையெல்லாம்எனக்காகச்செய்துதந்தவர் என்பாபா. அவற்றுள்மிகசமீபத்தில்நடந்த நிகழ்ச்சிஒன்று.

நானும்என்கணவரும்ஏற்றுமதிநிறுவனத்தை நடத்திவருகிறோம். வெளிநாட்டில்எங்கள் தயாரிப்பைவாங்குகிறவர்எங்களுக்குப்பணம் தரவேண்டியிருந்தது. அதுவங்கிமூலமாகத்தான் மாற்றலாகிவரவேண்டும். இந்தநிலையில்அந்தநபர்அனுப்பியஒரு பெரியதொகை, தவறுதலாகவேறுஒருவர் அக்கவுண்டிற்குச்சென்றுவிட்டது. எங்களுக்கு வராதஅந்தத்தொகை, எங்கள்தயாரிப்பை வாங்குகிறநபருக்கும்திரும்பிப்போய்ச்சேரவில்லை.

இந்தத்தகவல்தெரிந்ததும்என்கணவர்இடிந்து போய்விட்டார். நாங்கள்சீரடிக்குச்செல்வதற்காக டிக்கெட்புக்செய்திருந்தோம். இந்தசூழலில் இப்படியொருநிலையாபாபா? எனபாபாவிடம் புலம்பிக்கொண்டிருந்தோம்.  இப்படியொருஇடிஎங்கள் வாழ்க்கையில்வந்துவிட்டதேஎன்றுகண் கலங்கினோம். ஆனால்என்னைச்சார்ந்த அனைவரும், சீரடிசென்றுவாருங்கள், பாபா கைவிடமாட்டார்என்றனர்.

நானும்என்கணவரும்பாபாமீதுஅசைக்க முடியாதநம்பிக்கையுடன், பணம்திரும்பக்கிடைக்கும்என்பதில்உறுதியாகஇருந்தோம்.

நான்புதுப்பெருங்களத்தூர்பாபாவை மனதில்வேண்டினேன். எங்களுக்குஎங்கள் பணம்வந்துகிடைத்துவிட்டால்நாங்கள் இதைஅற்புதச்சாட்சியாகஎழுதுவோம்என வேண்டிக்கொண்டேன்.

இந்தவேண்டுதலோடுசீரடிக்குச்சென்று பாபாவைதரிசித்துவிட்டுவந்தோம். அதிசயம்என்னவென்றால், நாங்கள் சென்றுவந்தஒரேவாரத்தில்எங்கள் தயாரிப்பைவாங்குகிறநபருக்கே, அந்தப் பணம்திரும்பஅனுப்பப்பட்டதாகத்தகவல் வந்தது. அதுமட்டுமல்ல, எங்களுக்குச் சேரவேண்டியதொகையானஅதுமீண்டும் எங்கள்கைக்குக்கிடைத்துவிட்டது.

பெருங்களத்தூரில்வீற்றிருந்துஅரசாட்சி செய்கிறஎங்கள்பாபாவுக்கு, எங்கள் குடும்பத்தின்சார்பாகவும், என்சார்பாகவும் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

சூரியகலாகார்த்திகேயன்

என்னை நம்புங்கள்!

Image

 

 

”நான் உங்களிடத்து இல்லை என்பதாகக் கவலைக் கொள்ளாதீர்கள். எனது எலும்புகள் உங்களது நலத்தைக் குறித்துப் பேசி விவாதிப்பதைக் கேட்பீர்கள். ஆனால் எப்போதும் என்னையே எப்போதும் நினைவு கூறுங்கள். உள்ளம் உயிர் இவற்றால் என்னை நம்புங்கள். அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள்”     –  பாபா

சத் சரித்திரம்: அத்: 25

சாயியின் வாக்குறுதி

Image

”எங்கு சென்றாலும் கண்டிப்பாக வருவேன்.

உனக்கு முன் நான் அங்கு நிற்பேன்,

உன்னை என்றைக்கும் கைவிட மாட்டேன்.

உனது ஒவ்வொரு முயற்சியிலும் நான் உன்னோடு இருக்கிறேன்.”