என் வாக்குகள் பொய்யாவதில்லை

என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

என்னிடம் உள்ளத்தையும் உயிரையும் ஒப்புவித்த அடியார்கள் என் லீலைகளைக் கேட்டதும் இயற்கையிலேயே மகிழ்வெய்துவர்.

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்.

ஜெய் சாய்ராம்
Advertisements

என் வாக்குகள் பொய்யாவதில்லை

என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

என் வாழ்க்கையையும் செயல்களையும் ஊக்கமுடன் இசையாகப் பாடுவானாயின் அவனுக்கு முன்னும் பின்னும் எல்லா திக்குகளிலும் சூழ்ந்திருப்பேன்.

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்.

ஜெய் சாய்ராம்

என் வாக்குகள் பொய்யாவதில்லை

என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

என்னுடைய லீலைகளின் ஆழத்தில் ஒருவன் முழுகுவானானால் அவன் ஞானமென்னும் விலை மதிப்பில்லாத முத்துக்களை பெறுவான். 

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்

ஜெய் சாய்ராம்

என் வாக்குகள் பொய்யாவதில்லை

என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

என்னுடைய லீலைகள் கவனத்துடனும், பக்தியுடனும் கேட்கப்படுமாதலால் இவ்வுலக வாழ்க்கையின் உணர்வு தணிந்து பக்தி, அன்பு ஆகியவற்றின் வலிமையுடன் அலைகள் மேல் எழும்பும்

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்

ஜெய் சாய்ராம்

பாபாவிற்க்கு ரதம் கொடுத்த பக்தர்

தர்ம தேவனான பாபாவின் உபதேசங்கள் சகலருக்கும் பொருந்தும்,  ஆகையால் அவரை தரிசிக்க உலகின் பல பாகங்களில் இருந்தும் ஜாதி மத பேதமில்லாமல் வந்து செல்கிறார்கள்.  பாபா யாரை எப்போது தன் பக்கம் இழுக்கிறார் என்பது யாருடைய புத்திக்கும் எட்டாதது.

     கர்னாடக மாநிலம் பெல்லாரியில் வசிக்கும் முகம்மது ரபீக் என்ற பக்தரை சாயி எப்படி தன் பக்கம் இழுத்தார் என்பதைப் பார்ப்போம்.

     பாபா மீதுள்ள பக்தியின் காரணமாக இருபது ஆண்டுகளாக சீரடிக்குப் பலமுறை வந்திருப்பவர் முகம்மது ரபீக். கடந்த வருடம் சீரடியில் லெண்டி பாக் அருகேயுள்ள நந்தா தீப் அருகே பெங்களூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரைச் சந்தித்தார்.  இருவரும் ஆரத்தி நேரத்தில் பாபாவை தரிசிக்கச் சென்றனர்.  பாபாவைத் தரிசித்துப் பக்திப் பரவசத்தில் மூழ்கிய ரபீக், பாபாவிற்க்கு எதையேனும் செய்ய வேண்டும் என விருப்பம் கொண்டுவிட்டார்.

     என்ன செய்யலாம் என யோசித்து பாபாவுக்கு பூக்கூடை ஒன்றை வாங்கித் தர முடிவு செய்து 28 கிலோ எடையுள்ள பூக்கூடையை வெள்ளியில் தயார் செய்து கொடுத்தார்.  அவர் வீடு திரும்பியதும் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.   மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.  இது பாபாவின் மகிமை என உணர்ந்து மேலும் பாபா மீது பக்தியுள்ளவரானார்.

     தலைவராகப் பொறுப்பேற்றதும் சன்ஸ்தானுக்கு மீண்டும் ஏதாவது காணிக்கை தரவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.  அதை சீரடி சன்ஸ்தான் உறுப்பினரான ஏக்நாத் கோந்த்கர் என்பவரிடம் தெரிவித்தார்.  அவர், வெள்ளியிலான ரதம் ஒன்றினை காணிக்கையாகத் தரலாம் என்றார். ஏக்நாத் மற்றும் சீரடி விஸ்வஸ்த மண்டலியின் அறிவுரைப்படி ரபீக் வெள்ளியிலான ரதம் ஒன்றை தயார் செய்தார்.

     அந்த ரதமானது புகழ் பெற்ற ப்ரவீண் மற்றும் இருபது பேர் கொண்ட குழுவினரால் செய்யப்பட்டது.  திருப்பதி, காளஹஸ்தி மற்றும் பெல்லாரி துர்கை அம்மன் கோயில்களுக்கு ரதம் செய்து தந்து சிறப்புப் பெற்றவர் ப்ரவீண்.  இவரது உருவாக்கத்தில் 230 கிலோ வெள்ளியில் 40 லட்ச ரூபாய் செலவில் இந்த ரதம் உருவானது.  இதைப் பார்த்த ரபீக்கின் நண்பர் விஜயகுமார் அவர்கள் மனதில் இதற்க்கு தங்க முலாம் பூசலாமே என்று சிந்தித்தார்.  தனது நண்பர் அஜய் குப்தாவுடன் சேர்ந்து எட்டு லட்ச ரூபாய் செலவில் தங்க முலாம் பூசச் செய்தார்.

     இப்படி வெள்ளியிலான ரதம் தங்கப் பூச்சுடன் சீரடியில் ராமநவமி, கோகுலாஷ்டமி, குரு பூர்ணிமா, ரங்க பஞ்சமி, வருடப் பிறப்பு, தத்த ஜயந்தி, விஜயதசமி போன்ற விசேஷ நாட்களில் வலம் வருகிறது.

     இந்த ரதத்தில் பாபாவின் பாதுகைகள், சட்கா, பாபாவின் மூல உருவப்படம் ஆகியவை வைக்கப்பட்டு பெல்லாரியிலிருந்து ஊர்வலமாக 2010 ம் ஆண்டு குரு பூர்ணிமா தினத்தில் சீரடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

     முஸ்லிம் இனத்தவரால் கொடுக்கப்பட்ட இந்த காணிக்கையானது சீரடி சன்ஸ்தானின் வரலாற்றில் இதுவே பெரியதாகும். இந்த முஸ்லிம் பக்தன் செய்த சேவையை மகாராஷ்டிர மாநிலத்தின் மந்திரி ராதா கிருஷ்ண வி கே பாடீல், தலைவர் ஜயந்த சாசணெ, உப தலைவர் கிசோர் மோரே, உதவி எக்ஸிகியீட்டிவ் அலுவலர் யஷ்வந்த்ராவ் மானே ஆகியோர் பாராட்டி நன்றி கூறினார்கள்.

நன்றி:  சாயிலீலா
தமிழில்:  வெங்கட்ராயன், ஊத்துக்கோட்டை

வள்ளலார் நிகழ்த்திய அருள் அற்புதம்

மழையில் தழைப்பது பயிர்கள் – இறைவன் அருளில் தழைக்குது உயிர்கள்

     ஆம். இறைவனுடைய அருளின்றி ஓர் அணுவும் அசையாது.  இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களிடத்தே அன்பு எனும் நீர் பாய்ச்சி கருணை எனும் உரமிட்டு அருள் எனும் ஞானப்பயிரை வளர்த்தவர் வள்ளற்பெருமான் ஆவார்.  உயிர் இரக்கமே, என் உயிர் என்றும் மண்ணுயிர் எல்லாம் கடவுள் வடிவம் என்றும் அவர் நினைத்து வாழ்ந்த காரணத்தினாலேயே சுத்த தேகம், ஞான தேகம், பிராண தேகம் என்னும் முத்தேக சித்தி பெற்றார்.  இறையருளால் தம் உடலை பொன்னுடலாகவும், ஒளியுடலாகவும் பெற்றுக்கொண்டார். அதோடு அட்ட சித்திகளையும் கைவரப் பெற்றார்.  இறந்தாரை  எழுப்புவித்தல் என்னும் சித்தாடலைத் தவிர ஏனைய சித்தாடல்கள் வள்ளற்பெருமான் அவர்களால் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன.

     கூடலூரில் பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார்.  செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் என்னும் முதுமொழிக்கு இணங்க ஈந்து இசைப்பட வாழாது கருமி என்ற பட்டத்தோடு அவர் வாழ்ந்து வந்தார்.

     அவர் வள்ளற்பெருமானைக் காண அவ்வப்போது வடலூர் வந்து செல்வதுண்டு.  ஒரு நாள் வள்ளற்பெருமானைக் காண வந்த போது, கூட்டத்தின் இடையே எழுந்து தன்னை பிறர் மதிக்கவேண்டும் என்று நினைத்து ஐயா அவர்களைப் பார்த்து ’சுவாமி, தாங்கள் ஒரு முறை எனது இல்லத்திற்க்கு எழுந்தருள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். இதைப் போன்று அவர் பலமுறை கேட்டதுண்டு. அன்றைய தினம் வள்ளற்பெருமான் அவரை உற்றுப் பார்த்துவிட்டு “பல நாட்களாக நீங்களும் அழைக்கிறீர்கள், சரி, நாளை வருகிறேன்” என்றார்.  செல்வந்தருக்கோ உதறல் ஏற்பட்டது.  ஐயா இப்படிச் சொல்வார் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  ஐயா அவர்கள் வந்தால் வீண்செலவு ஆகுமே என்ற அச்சம் வேறு ஏற்பட்டது.

     அடுத்த நாள், வள்ளற்பெருமான் செல்வந்தருடைய வீட்டிற்க்கு சென்றார். அவர் வருவதை தூரத்தில் இருந்தே பார்த்த அவர், அவரது மனைவியிடம், ’வடலூர் சாமி வருகிறார், அவர் வந்தால் என் கணவர் வீட்டில் இல்லை வெளியூர் சென்றுவிட்டார் என்று சொல்லிவிடு’ என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்று மறைந்துகொண்டார். வள்ளற்பெருமான் வீட்டில் அடியெடுத்து வைத்ததும் அவரது மனைவி பெருமானிடம் தனது கணவர் சொன்னபடியே நடந்து கொண்டார். முக்காலமும் உணர்ந்தவர் அல்லவா! நம் பெருமான், இதை அறியாதவரா, என்ன?, நல்லது நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
     வள்ளற்பெருமான் சென்றபின் கணவனும் மனைவியும் நிம்மதிப் பெருமூச்சுடன் கூடத்திற்க்கு வந்தனர். அப்போது ஓர் அதிசயக் காட்சியினை கண்டனர்.  ஐயா அவர்கள் நடந்து வந்த பாதையில் அவர் காலடி பதித்த தடங்களில் எல்லாம் பொன் துகள்கள் பரவிக்கிடந்தன.

தூக்கம் கெடுத்துச் சுகம் கொடுத்தான் எந்தனக்கே
ஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் ஏக்கமெலாம்
நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன் வடிவம்
தாங்கினேன் சத்தியமாகத்தான்.

     வள்ளற்பெருமான் பொன் வடிவம் தாங்கிய செய்தியினை இப்பாடலே மெய்பிக்கும்.  பொன் வடிவம் பெற்ற ஐயா அவர்களின் பொன்னடிகளில் பொன் துகள்கள் தானே பரவிக்கிடக்கும்!

     பொன் துகள்களை கண்ட செல்வந்தரின் மனைவி வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்து ஒரு பெரிய தாம்பாளத்தினை எடுத்து வந்து அந்த பொன் துகள்களை திரட்ட முற்பட்டார். என்ன ஆச்சரியம்! அனைத்தும் மாயமாய் மறைந்து விட்டன.  கணவனும் மனைவியும் மெய்விதிர்க்க தங்களது தவறான செயலை நினைத்து வருந்தினர்.  ஒரு மகானிடம் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டோ, அறிவிழந்துவிட்டோமே, அளவற்ற செல்வம் இருந்தும் என்ன பயன்? எஞ்ஞான்றும் அழியாத பொன்வடிவம் பெற்ற பேரருளாளர் என்பதை உணராமல் எப்படிப்பட்ட பாவச்செயலினை செய்துவிட்டோம் என்று நினைத்து வருந்தினர்.

     இதைப் போன்று வள்ளற்பெருமானின் திருவருளால் திருந்தி நல்வழிச் சென்றோர் பலருண்டு.  வள்ளற்பெருமானைப் பார்த்தாலும், அவரை நினைத்தாலும் அவர் அருளிய திருவருட்பாவினைப் படித்தாலும், பிறர் படிக்க பக்கம் நின்று கேட்டாலும், மனத்துள் உணர்ந்தாலும் நம்மிடம் உள்ள தீவினைகள் துள்ளி ஓடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
வாழ்க வையகம்!                                வளர்க சன்மார்க்க நெறி!
கட்டுரை ஆசிரியர் திருக்குறள் சுப.வீரபத்திரன், எம்.ஏ., பி.எட்.,
திருவண்ணாமலை
நன்றி: கருணீகமித்திரன் மாத இதழ், டிசம்பர் 2012