உபயோகமான குறிப்புகள்

உபயோகமான குறிப்புகள்
பலவகை குளியல்கள்
பிரம்மசாரியாக இருப்பவன் காலையில் நீராடவேண்டும்
குடும்பஸ்தன் காலை, மதியம் இருவேளை நீராடவேண்டும்
துறவி மூன்று வேளையும் நீராடவேண்டும்
குளிக்க போகும் போது ஒரு சில கடைப்பிடிக்கவேண்டிய விஷயங்கள்:
எந்த நீரில் குளித்தாலும் அந்த நீர் பகவான் பாதத்தில் இருந்து வரும் கங்கையாக கருத வேண்டும்.
குளிக்க நீர் கிடைக்காத போது இறைவன் நாமத்தினை மனதிற்க்குள் சொல்லிக்கொள்ளவேண்டும்.  இது மானசீகக் குளியலாகும்.
குருவினை தரிசித்து அவரது பாத நீரினை தலையில் தெளித்துக் கொள்வது தீர்த்தக் குளியலாகும்.
விரதம், சிரார்த்தம், விருக்தி சடங்கு, துக்க சடங்கு உள்ளபோது வெந்நீரில் குளிக்கக்கூடாது.
மங்களகரமான திருமணம் மற்றும் பிற கொண்டாட்டங்களின் போது குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது.
ஓடும் நதி நீரில் நீரோட்டத்தின் எதிரிலும், குளம் முதலியவைகளில் கிழக்கு நோக்கி நின்று நீராடவேண்டும்.
Advertisements

வருக 2013!

ஓம் சாயி நமோ நம!
ஸ்ரீ சாயி நமோ நம!
ஓம் சாயி நமோ நம!
ஸ்ரீ ஜய சாயி நமோ நம!
ஓம் சாயி நமோ நம!
ஸ்ரீ ஜய ஜய சாயி நமோ நம!
அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்
சாயியின் பாதம் தொழுவோம்
சகல நன்மைகளையும் பெறுவோம்

உபயோகமான குறிப்புகள்

உபயோகமான குறிப்புகள்
எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கும் நாட்களின் பலன்கள்
ஞாயிறு:    வியாதி
திங்கள்:     சக்தி இழப்பு
செவ்வாய்:  விரைவில் மரணம்
புதன்:       லட்சுமி கடாட்சம்
வியாழன்
மற்றும்      சந்தான நாசம், ஆபத்து
வெள்ளி: 
சனி:        சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
            சரீரத்திற்க்கு ஆரோக்கியம் கிடைக்கும்
எண்ணெய்க்குளியல் செய்த அன்று விபூதி தரிக்கக்கூடாது
மேற்காணும் பலன் ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும்.
குறிப்பினை படித்த பின்பாவது பாதகமான நாட்களையும்,
தவிர்க்க வேண்டிய விஷயங்களையும் தவிர்க்கலாமே!

ஆன்மீக குறிப்புகள்

ஆன்மீக குறிப்புகள்
மாலை நேரத்தில் விளக்கேற்றும் போது
பெண்கள் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி வைத்தபிறகு, தீபத்திடம்,
தீபஜோதியே,
 நீ சுபம் மற்றும் மங்களத்தினை தருகிறாய். 
ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் தருகிறாய்.
எதிரிகளின் புத்திகளை நாசம் செய்கிறாய்.
இத்தகைய நன்மை செய்யும் உன்னை வணங்குகிறேன்
என்று கூறி வணங்குகிறேன். அதற்கான சுலோகம்.
“சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன ஸ்ம்பதா
 சத்ரு புத்திர் விநாசாய தீப ஜோதி நமோஸ்திதே

அன்னதானம் – 3

அன்னதானம் – 3
அன்னதானம் பகுதி இரண்டின் தொடர்ச்சி……
(பகுதி ஒன்றினை படிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்யவும்)
(பகுதி இரண்டினை படிக்காதவர்கள் இங்கேகிளிக் செய்யவும்)
அன்னதானத்தின் மகிமை பற்றி ஒரு கதை உண்டு. அதனை இப்போது காண்போம்.
தேவலோக அதிபதியான இந்திரன் தனது தூதர்களாக உலகை சுற்றித் திரிபவர்களிடம் ‘தானத்தில் பெரியது எது? சிறந்த தானவான் யார்? எனக் கேட்டான்.
எல்லோரும் ஒவ்வொரு பெயரை கூறினார்கள். இந்திரன் திருப்தியடையவில்லை. கடைசியாக ஒருவன் வந்தான் அவனிடம், ‘தானத்தில் பெரியது எது? சிறந்த தானவான் யார்? எனக் கேட்டான்.
உடனே அந்த தூதன், இந்திரனை வணங்கி, ‘பிரபோ!, பூமியில் சஞ்சாரம் செய்தபோது, பசியால் உயிர் போகும் நிலையில் இருந்த ஒரு பிச்சைக்காரனை பார்த்தேன். ஒரு கவளம் உணவு கிடைத்தாலும் உயிர் பிழைத்துவிடலாம் என்ற பரிதாப நிலையில் நம்பிக்கையுடன் இருந்தான்.
அவனது நிலையினை பார்த்து பரிதாபப்பட்ட சிலர்  அவனுக்கு சிறிது உணவு அளித்தார்கள்.  அவன் உணவு உண்ண எத்தனிக்கையில், அவனைப்போலவே பசியால் துடித்து உயிரை விட்டுக்கொண்டிருந்த நாய் ஒன்று தன் பக்கத்தில் இருந்ததைப் பார்த்து, மனம் இரங்கி தனக்கு கிடைத்த உணவினை அந்த நாய்க்கு அளித்துவிட்டு தனது உயிரை விட்டு விட்டான்.
எனக்குத் தெரிந்து அவனே மிகப் பெரிய வள்ளல். அவன் அளித்த அன்னதானமே உயரிய தானம்! என்றான்.
இதைக்கேட்ட இந்திரன் ,‘சபாஷ், இதுதான் சரியான தகவல். வாருங்கள், அந்த பிச்சைக்காரனை நமது இந்திரபுரிக்கு அழைத்து உபசரிப்போம்என்று கூறி, பிச்சைக்காரனை எதிர் கொண்டழைக்க புறப்பட்டான் என்று ஒரு கதையுண்டு.
பசியால் துடிப்பவர்களுக்கு உணவு அளிப்பதே மிக உயரிய தானம்.  இதை ஏதோ சடங்காகச் செய்வது கூடாது.  பாபா பிச்சையெடுத்த உணைவினை நாய், பூனை, காக்கை, ஏழை பக்தர்கள் ஆகியோர்களுடன் பகிர்ந்து கொண்டார் என்று பாபாவின் சத்சரித்திரத்தில் படிக்கிறோம். இதுதான் பெரிய தானம்.
சென்னை குரோம்பேட்டையில் ஒரு அன்பர் வீட்டிம் ஒரு பகுதியை ஒதுக்கி, அதில் ஆதரவற்ற நாய்களை வைத்து வளர்த்து தினமும் வேளை தவறாமல் உணவளிப்பதுடன், அவைகட்கு மருத்துவச் சிகிச்சைகளையும் செய்கிறார். அவைகளுக்காக தனது வாழ்க்கையினையே அர்ப்பணித்துள்ளார். இதுதான் அன்னதானம், அதிதி உபசரிப்பு.
நியூடெக் என்னும் நிறுவனத்தினை நடத்தி வரும் ராஜேந்திரன் என்ற அன்பர், தன் காரில் எப்போதும் பிஸ்கெட் பண்டல்களை வைத்திருப்பார். காரில் செல்லும்போது வழியில் வறியவர், பசியால் வாடுவோர் என எவரையேனும் பார்க்க நேர்ந்தால் தவறாது அவர்கள் அருகே இறங்கி, அன்போடு அதைக் கொடுத்து சாப்பிடச் செய்துவிட்டு செல்வார். இதற்குப் பெயர்தான் அன்னதானம்.  பாபா இதனை ஆசிர்வதிப்பார்.
அன்னதானம் என்பது பெரிய விஷயமல்ல.  பசித்தவருக்கு உணவு கொடுப்பது! இதை மனிதர்க்கு மட்டுமல்ல காக்கை, குருவி என்று அனைத்து உயிரிகட்கும் அளிக்கலாம். குறைந்தது வீட்டின் மாடியில் ஒரு ஓரத்தில் பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு சாதம் அல்லது நீராவது வைக்கலாம்.
எச்சில் கையால் ஈ ஓட்டாதவர்கள் கூட இதை கொஞ்சம் மெனக்கெட்டு செய்தால் அவர்களைத் தேடி புண்ணியம் வரும். தேவ தேவர்கள் வருவார்கள்.  வாழ்க்கையில் மேலும் வளங்கள் வந்து சேரும்.
உங்களுக்கும், உங்களது சந்ததிக்கும் எதிர்காலத்துக்கு புண்ணியம் தேடுங்கள். அதை விளம்பரமாக்க வேண்டாம்.  வேறு வழியில் விளம்பரம் தாமாக வரும்.
வாழ்க நீங்கள்!
(அன்னதானம் தொடர் நிறைவடைந்தது)
ஜெய் சாயிராம்!

அன்னதானம் – 2

அன்னதானம் – 2
அன்னதானம் பகுதி ஒன்றின் தொடர்ச்சி……
(பகுதி ஒன்றினை படிக்காதவர்கள்
இங்கே கிளிக் செய்யவும்)
அன்னதானம் பாபாவிற்க்குப் பிடித்தமானது என்பதால் இதை சாயி பக்தர்களாகிய நாம் விரிவாகச் செய்கிறோம். நம்மால் முடியாதபோது, நம்மால் இயன்றதை கோயிலகளுக்குக் கொடையாக அளித்துவிட்டு வருகிறோம்.  ஏழைகளுக்கு இரங்குகிறவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான் என பழமொழி உண்டு. நம் கர்மாவை கடவுள் அதிதி வடிவிலோ, அன்னத்தை உண்பவர் வடிவிலோ எடுத்துக்கொண்டு நமக்கு புண்ணியத்தைச் சேர்க்கவே இந்த அன்னதானம் என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
அன்ன தானத்தை ஒரு கடன் என்றே நமது முன்னோர்கள் கூறுகிறார்கள்.  தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன், பூதக்கடன், அதிதி கடன் ஆகிய இந்தக் கடன்களை அடைத்த பிறகே ஒருவன் உண்ணவேண்டும்.  ஒவ்வொரு வேளை உணவின்போதும் இவர்களுக்கு அன்னதானம் அர்ப்பணம் செய்யவேண்டும்.
சாப்பிடும் முன் தேவர்களுக்கு, ரிஷிகளுக்கு, பித்ருக்களுக்கு, மூதாதையர் தேவர்களுக்கு, பூதங்களுக்கு நமது உணவினை அர்ப்பணம் செய்யவேண்டும். பிறகு யாரேனும் விருந்தாளி வந்தால் அவர்களுக்கும் தரவேண்டும்.  எறும்பு, பறவைகள், பூனை, நாய் போன்றவையும் அதிதி என்கிறார் பாபா. அவைகளை அதிதிகளாகப் போற்றி உணவிட்டு அதன் பிறகே நாம் உண்ண வேண்டும்.
அந்தக் காலத்தில் சாப்பிடும் முன் மாவால் ஒரு சதுரம் வரைந்து, அந்த சதுரத்தின் மூலைகளில் உணவுப் பருக்கைகளில் சிலவற்றை வைத்துவிட்டு சாப்பிடுவார்கள்.  சித்ரகுப்தனுக்கு, கடவுளுக்கு, பிறருக்கு என அந்த மூலையில் இடப்பட்ட பருக்கைகள் அர்ப்பணிக்கப்படும். இந்த வழக்கம் இப்போது மாறிவிட்டது.
யாருக்கேனும் ஒரு கவளம் உணவு அளித்தால் ஒரு மலையளவு அளித்த புண்ணியம் கிடைக்கும். ஒரு தம்ளர் நீர் அளித்தால் கடலளவு நீரை தானம் செய்த பலன் கிடைக்கும் என முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளார்கள்.
பாபாவும், ‘யார் ஒருவன் எனக்கு அர்ப்பணம் செய்யாமல் சாப்பிடுவதில்லையோ, அந்த பரம பக்தனுக்கு நான் அடிமைஎன்று கூறியிருக்கிறார்.  இப்படிச் செய்கையில் தேவார்ப்பணம் முடிந்து விடுகிறது.  இப்படியே நாம் ஒவ்வொருவரும் அன்னத்தை அர்ப்பணிக்கவேண்டும்.  முடிந்த போதெல்லாம் பிறருக்கு அன்னமளிக்க வேண்டும்.
அன்னதானத்தின் மகிமை பற்றி ஒரு கதை உண்டு.
அதனை நாளை பார்ப்போம்!