சாயி – ஷிர்டி பாபாவின் புனித சரிதம்-7


சாயி  – ஷிர்டி பாபாவின் புனித சரிதம் – குங்குமம் இதழில் தொடராக வந்து கொண்டுள்ளது. அற்புத நடை. சரிதத்தின் மொழி பெயர்ப்பு நம்மை மெய் சிலிர்க்கவைக்கும் ஒன்று.

இதன்   பகுதி 7  னை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisements

சாயி – ஷிர்டி பாபாவின் புனித சரிதம்-6


சாயி  – ஷிர்டி பாபாவின் புனித சரிதம் – குங்குமம் இதழில் தொடராக வந்து கொண்டுள்ளது. அற்புத நடை. சரிதத்தின் மொழி பெயர்ப்பு நம்மை மெய் சிலிர்க்கவைக்கும் ஒன்று.

இதன்   பகுதி 6  னை படிக்க  இங்கே கிளிக் செய்யவும்

உனக்குப் புதுவாழ்வு தருவேன்-2
கிழக்காசியாவில் ராணுவ மருத்துவமனையில் பணி செய்து, சம்பாதித்த
அனைத்தையும் இழந்து, நோயினால் ஒரு காலும் துண்டிக்கப்பட்டு,
நிராதரவான நிலையில் நின்ற ஒரு பக்தருக்கு சாயி எப்படி அனுக்கிரகம்
செய்தார் என்பதை அவரது வாய் மொழியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
நேற்றைய தொடர்ச்சி…..
முந்தைய பகுதியினை படிக்க இங்கு செல்லவும்
என் தங்கை மகன் ஒரு சிறிய பாபா போட்டோவை தந்து, ’மாமா, பயப்படாதே, இவர் உங்களை முழுமையாகக் காப்பாற்றுவார்’, என்றான்.
இதுதான் பாபாவுடன் எனது முதல் அறிமுகம். அறுவை சிகிச்சை நடந்தபோது, வலி தாங்க முடியாமல் ’பாபா’ எனக் கத்தினேன்.  அப்போது, ஒரு விசாலமான காட்சியை என்னால் காண முடிந்தது. அக்கம் பக்கம் எதுவுமே இல்லாத நிலையில் மிகப்பெரிய ஒளிப்பிழம்பும் அதன் நடுவே, ஆசீர்வதிக்கும் கரங்களோடு சீரடி பாபாவும் தோன்றியதைக் கண்டேன். பொறுமையாக இரு என்பதைப்போல பாபாவின் கரங்கள் எனக்குத் தெரிந்தன.
பாபா என நான் கத்தியதைக் கவனித்த டாக்டர்கள், ’நீங்கள் பாபா பக்தரா? பாபாவைப் பற்றி தெரியுமா?’, எனக் கேட்டார்கள்.
’தெரியாது. இப்போது தான். அவரது போட்டோவைக் கொடுத்தார்கள்’  என்றேன் .  அதன் பிறகு வாழ்வில் படிப்படியாக சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன.
இந்த நிலையில் பாபா மாஸ்டர் அருணாச்சலம் ஐயா அவர்களை தரிசிக்க லாஸ் பேட்டை சென்றேன். எனக்காகப் பிரார்த்தனை செய்து, ஆசீர்வதித்ததோடு, சாயி தரிசனம் என்ற புத்தகத்தைக் கொடுத்து, அதன் ஆசிரியருக்குப் போன் போட்டு என்னைப் பேசுமாறு கூறினார். சாயி வரதராஜன் எனக்காகப் பிரார்த்தனை செய்வதாகச் சொன்னார். பாபா மாஸ்டர் கொடுத்த அந்தப் புத்தகத்தை படுக்கை அருகில் வைத்துக்கொண்டேன். உறக்கம் வராததால் புரண்டு புரண்டு படுத்தேன். அப்போது மணி பதினொன்னே முக்கால் இருக்கும், உறக்கம் வராத நிலையில் அந்தப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன்.
அதில் சாயியின் குரல் என்ற தலைப்பிலான ’நான் இன்று உன்னை சந்திக்க வந்திருக்கிறேன்’ என்ற கட்டுரை இருந்தது.  2012 செப்டம்பர் மாத இதழ், தலைப்பை பார்த்தபோது, இது உளவியல் ரீதியாக ஒரு வரை அணுகும் கட்டுரையாக இருக்கும் என நினைத்து, வாசித்தேன்.  என் வாழ்வில் நிகழ்ந்த பல வியங்கள் அதில் இருந்தன..
நிச்சயமாக இது உளவியல் சார்ந்த கட்டுரைதான் எனத் தீர்மானம் செய்துகொண்டு படுத்துவிட்டேன். மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போது என்னை அறியாமல், இதுவரையில்லாத புத்துணர்வு எனக்குள் இருந்தது. அன்று காலையே, ரேன் கார்டுக்கான சரிபார்ப்பு செய்தார்கள்.  மூன்று சக்கர வாகனத்திற்காக நான் அனுப்பிய விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாகக் கடிதம் வந்தது.
இப்படியே அன்று நிறைய வியங்கள் நடந்தன. அப்போதுதான் நான், இது உளவியல் ரீதியான கட்டுரையல்ல, கடவுளின் வார்த்தை என்பதை மனப்பூர்வமாக உணர்ந்தேன். பாபா தன் பக்தருக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது பூரிப்பாக இருந்தது.
ஒருநாள் பெருங்களத்தூருக்குப் போன் செய்து எனது பிரச்சினைக்காக சாயி வரதராஜனிடம் பிரார்த்தனை செய்யச் சொன்னேன். அவர் செய்ததாக தெரியவில்லை, எனக்குத் திருப்தியில்லை.
‘அவர் எனக்காகப் பிரார்த்தனை செய்வதை உடனிருந்து பார்க்கவேண்டும்’ எனக் கூறினேன்.
சில நாட்கள் கழித்து பெருங்களத்தூர் பாபா ஆலயம் சென்று இருந்தேன். நீண்ட நேரத்திற்குப்பிறகு சாயி வரதராஜனும் மலேசியாவில் இருந்து வந்திருந்த சத்திய சீலன் என்ற மனோதத்துவ மருத்துவரும் ஒருவர் பின் ஒருவராக வந்தனர்.
நாங்கள் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தோம். பக்தர்கள் வர ஆரம்பித்த பிறகு, பிரார்த்தனை நடைபெற்றது.. எனக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. பிரார்த்தனை முடிந்த பிறகு, சாயி, ’ஒரு பெரியவர், சாயி வரதராஜன் எனக்காகப்பிரார்த்தனை செய்வதை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று ஒரு நாள் போன் செய்தார், அவர் பார்த்திருப்பார் என நம்புகிறேன்’, என்றார். பார்த்தாகிவிட்டது என நான் தலையசைத்தேன்.
’திருப்தியா?’,  என்றார்.
முழுமையான திருப்திஎன்றேன் நான்.
பாண்டிச்சேரி மிக உன்னதமான பூமி. வேதபுரி என்றே அழைக்கப்பட்ட பகுதி அது. அங்கு சித்தர் பெருமக்களும், ரிஷிகளும் இன்னமும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். பாபா மாஸ்டர் அருணாசலம், கிருஷ்ணன் உன்னி போன்ற சாயி பக்தர்கள் பிறருக்காக பிரார்த்தனை செய்வதை வாழ்வாக வைத்திருக்கிறார்கள்.  ஆகவே, பயப்படாதீர்கள்’,  என்று கூறி அனுப்பினார்..
பாபா எனக்கு வேறு எதையும் செய்யத்தேவையில்லை. வயதான இந்தக் காலத்தில் உயிர்உள்ளவரை வாழ்வதற்குத் தேவையான ஆதாரத்தை பூர்த்தி செய்தால் போதும். எனக்கு யாரும் தர்மம் செய்ய வேண்டாம், டிரஸ்ஸிங் செய்யத் தெரியும், மருத்துவ உதவி தெரியும். இதைச் செய்ய வாய்ப்பும், அதற்குரிய ஊதியமும் கொடுத்தால் போதும் என்பதே எனது பிரார்த்தனை.
 அது விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு நான் பெருங்களத்தூரிலுள்ள ஆத்ம சாயியை கும்பிட்டு பாண்டிச்சேரியை நோக்கிக் கிளம்பினேன்.
ஜெய் சாய் ராம்.
பால சுப்பிரமணியம்
எண் 7. பதிமூன்றாவது  குறுக்குத் தெரு,
கிருஷ்ணா நகர், புதுச்சேரி8
போன் 9790411743

உனக்குப் புதுவாழ்வு தருவேன் – 1கிழக்காசியாவில் ராணுவ மருத்துவமனையில் பணி செய்து, சம்பாதித்த
அனைத்தையும் இழந்து, நோயினால் ஒரு காலும் துண்டிக்கப்பட்டு,
நிராதரவான நிலையில் நின்ற ஒரு பக்தருக்கு சாயி எப்படி அனுக்கிரகம்
செய்தார் என்பதை அவரது வாய் மொழியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
கடந்த 2012 ம்  ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவு. மனதை இனம் புரியாத ஒரு பாரம் அழுத்திக்கொண்டு இருந்தது. உறக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தேன்.  கடந்த காலங்களை திரும்பிப் பார்த்தபடி படுக்கையில் படுத்திருந்தேன். அறுபது வயதைத்தாண்டிய இத்தனை காலமும் துன்பங்களையே அனுபவித்திருக்கிறேன்.   என்னால் பலனடைந்த, வேண்டாத உறவுகள் மற்றும் தகாத நண்பர்களால் ஏமாற்றப்பட்டு அனைத்தையும் இழந்து விட்டேன்.
அவையெல்லாம் போனால் போகட்டும். ஆனால்,  போனால் திரும்பி வராத, எனது குழந்தையை இழந்தது பெரிய இழப்பு. போதாக்குறைக்கு ஓடி ஆடி பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் தளர்ந்து போகும் வகையில் இப்போது ஒரு காலையும் இழந்து இனி என்ன செய்யப் போகிறேன், எப்படி வாழப் போகிறேன் என்ற கவலை என்னைத்துரத்த ஆரம்பித்து, ஓட முடியாமல் படுக்கையில் முடங்கிக் கிடந்தேன்.
எனது வாழ்க்கையை மருத்துவ உதவியாளராக ஆரம்பித்தேன். திடீரென மாரடைப்பு வருகிறவர்களுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துவருதல், விபத்தின்போது முதலுதவி தருதல், தேசியப் பேரிடர் மற்றும் வன்முறைகளின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை பெறச் செய்தல் போன்ற  சேவைகளை மனம் உவந்து செய்துகொண்டிருந்தேன்.
பூனாவில் உள்ள எக்ஸைடு பேட்டரிகளைத் தயாரிக்கும் குளோரைடு நிறுவனத்தில் கம்பவுண்டர் பணி கிடைத்து அங்கு பணி செய்துவந்தேன். அங்கிருந்தபடி வெளிநாட்டில் வேலைக்கும் முயற்சி செய்தேன். மஸ்கட்டிலுள்ள பிரிட்டிஷ் மருத்துவமனையில் கம்பவுண்டர் பணிக்கு தேர்வு பெற்று, மஸ்கட் சென்று முப்பத்தோறு ஆண்டுகள் ராணுவ மருத்துவமனை யில் பணி செய்தேன். நோய் வாய்ப்பட்ட அல்லது காயம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை உதவிகளைச் செய்வது என் பணி. கை நிறைய சம்பளம் தந்தார்கள். அதில் என் மூன்று பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்ததுதான் நான் அடைந்த பலன். மற்றபடி, உறவுகள் என்று சொல்லிக்கொண்ட சிலரும், நண்பர்கள் என சேர்ந்து கொண்ட சிலரும் என்னை முழுவதுமாக ஏமாற்றி என் சம்பாத்தியத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள்.
முப்பத்தோறு ஆண்டுகள் கழித்து நான் இந்தியா வந்த பிறகு, அனைத்தையும் இழந்து, என் கடைசி மகளின் திருமணத்திற்காக இருந்த ஒரு வீட்டையும் விற்கவேண்டியிருந்தது. இப்போது எதுவும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டு, ஏதாவது வேலை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறேன்.  சம்பாதித்த அனைத்தையும் இழந்த போதிலும் தன்னம்பிக்கை இழந்ததில்லை. பாண்டிச்சேரியில் குடியேறிய பிறகு, எனக்குத்தெரிந்த மருத்துவ உதவியாளர் சேவையை தொடர்கிறேன்.
வயதான முதியவர்கள் பாத்ரூம் போன்ற இடங்களில் வழுக்கி விழுந்து அடிபட நேர்ந்தால் இடுப்பு எலும்பு முறிந்துவிடும். அப்படிப்பட்ட நிலையில் படுத்தப் படுக்கையாகி விடுவார்கள். படுக்கைப்புண் வந்து, உடலெல்லாம் புண்ணாகும்.  சரியான முறையில் கவனிக்காவிட்டால், புண் நாற்றமெடுத்து சுகாதாரக் கேடும், உயிர் போகும் ஆபத்தும் ஏற்படும்.  இதைத் தடுக்க, உரிய முறையில் டிரஸ்ஸிங் செய்யவேண்டும். இந்த சேவையில் நான் தனிப் பயிற்சி பெற்று இருந்ததால் என்னை தெரிந்தவர்கள் அழைத்துச் செல்வார்கள். அவர்கள் மூலம் ஓரளவுக்கு வருவாய் வந்துகொண்டிருந்தது.
சமீபத்தில்கூட படுக்கைப் புண் வந்து பாதிக்கப்பட்ட வயோதிகர் ஒருவருக்கு டிரஸ்ஸிங் செய்யச்சென்றேன். இனி பிழைக்கமாட்டார் என்ற அளவுக்கு பாதிப்பு இருந்தது. அவருக்கு பதிமூன்று முறை டிரஸ்ஸிங் செய்தேன். ஒரு டிரஸ்ஸிங் விலை 350 ரூபாய். அவர் படுப்பதற்காக புதிய வித படுக்கை ஒன்றை சிபாரிசு செய்தேன். அதையும் அவரது குடும்பத்தார் வாங்கிக் கொடுத்தார்கள். அந்த முதியவர் இப்போது நலமாக இருக்கிறார்.
இப்படியொரு நிறைவான சேவை செய்து கொண்டு காலம் கழிக்கலாம் என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் எனக்கு நோய் ஒரு எதிரியாக வந்தது. தொடையிலிருந்து காலுக்குச் செல்லும் இரத்தக் குழாயில் ஐந்து இடங்களில் அடைப்பு ஏற்பட்டது. காலுக்குச் செல்லவேண்டிய இரத்த ஓட்டம் தடைப்பட்டதால், கால் அழுக ஆரம்பித்தது. பாதிக்கப்பட்ட பகுதியை நீக்காவிட்டால் முழு உறுப்பையும் எடுக்கவேண்டியிருக்கும் என மருத்துவர்கள் கை விரித்துவிட்டனர். வேறு வழியில்லாமல் பாதிக்கப்பட்ட காலை எடுத்துவிட சம்மதித்தேன்.
ஒரு கை போயிருந்தாலும், கால்களால் நடந்து சென்று ஏதேனும் வேலை செய்திருப்பேன்.  கால் போய்விட்டதால் நடக்க முடியாத நிலைக்குத்தள்ளப் பட்டுவிட்டேன். இனி வாழ்க்கையை எப்படி நகர்த்துவது என தடுமாற்றம்!
முன்னாள் ராணுவத்தினருக்கு அரசாங்கம் மூன்று சக்கர வாகனங்கள் வழங்குவது வழக்கம். எனக்கும் இதை அளித்தால் அதன் உதவியோடு நடமாடலாம் என அதற்காக விண்ணப்பித்திருந்தேன். வருவாய் இல்லாததால் என் ரேன் கார்டை ஏழைகளுக்கான கார்டாக மாற்றவும் விண்ணப்பித்து இருந்தேன்.
இன்னும் தேவைகள் பல இருந்தன. எல்லாவற்றையும் சுருக்கிக்கொண்டு நானும் என் மனைவியும் வாழவேண்டியிருந்ததால் அதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தோம். வயதான இந்தக் காலத்தில் உதவுமாறு பாபாவை வேண்டிக்கொள்ள ஆரம்பித்தேன்.
சரியாகச் சொன்னால் கடந்த ஓராண்டாகத் தான் பாபாவைத் தெரியும். அதுவும் அறுவை சிகிச்சை செய்து காலை நீக்க, ஆபரேன் தியேட்டருக்குள் போகும்போது, என்னுடன் வந்த என் தங்கையும் தங்கை மகனும் பாபாவை முழுமையாக நம்பு என்று சொன்னார்கள்.
இதன் தொடர்ச்சி நாளை……..

அகங்காரம் அறவே அழிக்கப்படும்


   நாம் வெற்றிபெறவும் நமது காரியங்கள் சித்தியாகவும் முதலில் அகங்காரத்தை  நமதுசத்குருவின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.அகங்காரத்தை ஒழித்தால்தான் வெற்றி சத்குருவால்உறுதி அளிக்கப்படுகிறது.
சாயி பாபாவை வணங்குவதால் இகபர சௌபாக்கியங்கள் இரண்டுமே கிடைக்கின்றன.நம்உண்மையான இயற்கையில் நிலையாக்கப்பட்டுஅமைதியும் மகிழ்ச்சியும் அடைகிறோம். எனவேஎவரொருவர் அவரது சுபீட்சத்தைப் பெற விரும்புகிறாரோ அவர் சாயி பாபாவின் லீலைகளையும் கதைகளையும் பயபக்தியுடன் கேட்டு அவைகளைதியானம் செய்யவேண்டும். இவைகளை அவர்செய்வாரேயானால் தமது வாழ்க்கையின் இலட்சியத்தை சுலபமாக அடைந்து பேரானந்தம்பெறுவார்.
    நம்மில் பலர், நான் பாபாவிடம் சரணடைந்து விட்டேன், பாபாவின் கதைகளையும் லீலைகளையும் தினமும் படிக்கிறேன், கேட்கிறேன், தியானமும் செய்கிறேன். ஆனாலும் எனக்கு வந்த கஷ்டங்கள் இன்னும் தொடருகின்றன. எப்போது பிரச்சினை முடியும்என்று தெரியவில்லை. அவர் எப்போது எனக்கு கலங்கரை விளக்காக இருக்கப் போகிறார்? எனப்புலம்புவார்கள்.
      இது போன்றவர்கள் புலம்பும்போதும் கண்ணீர் விட்டுக் கதறும்போதும், சத்குருவே இவர்களுக்கு உடனடியாகத் தீர்வை தாருங்கள் என நம் மனம்கேட்டுக் கொண்டாலும், அவர்களுக்குள்யே உள்ள நம்பகத் தன்மை, அகங்காரம், எதிர்பார்ப்பு இவைகளால் தாமதம் ஏற்படுகிறது.
     எதிர்பார்த்து சரணடைவதும், நம்பகத் தன்மையோடு பிரார்த்தனை செய்வதும் அகங்காரத்தோடுசெயல்பட்டு நிந்திப்பதும், சரியான தீர்வு கிடைக்காமல் போகிறது, அல்லது கால தாமதம் ஆகிறது.
இதைப் பற்றி சத்சரித்திரம் 24ம் அத்தியாயம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. தியானம், பக்தி, நம்பிக்கை, பொறுமை இவற்றை தெளிவாக உணர்ந்து அவற்றை கடைப்பிடித்து அகங்காரத்தைசத்குருவின் காலடியில் சமர்ப்பித்தால் வெற்றி உறுதிஎனக் கூறுவதோடு, உண்ணும் முன் அவரை நினைவில் நிறுத்த வேண்டும் என்றும், சத்குரு எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்றும்தெளிவாகக் குறிப்பிடுகிறது.
        சாமா, வாமன்ராவ் மற்றும் ஹேமத் பந்த் மூலம் தானியங்களைப் பற்றி குறிப்பிட்டு அதன் மூலம் நீதியினை போதிக்கிறார். நமது புலன்கள், தேவைகளை அடையும் முன்னதாகவே மனமும், அறிவும் புலன்களை அனுபவித்துவிடுகின்றன.முதலில் பாபாவை நினை. அதுவே, உன் மனதில்நிலைகொண்டுள்ள பாபாவுக்கு நிவேதனம்செய்யும்முறையாகும்.
    பொருட்களை அனுபவிக்கும் முன் பாபா அங்கிருப்பதாக நினைத்துக்கொண்டால் அப்பொருள் அவர் அனுபவிக்கத் தக்கதா எனத்தோன்றும். அனுபவிக்கத் தகாதவை என்றால்நம்மால் ஒதுக்கப்பட்டு நமது தீய பண்புகள், செயல்கள், அகங்காரம் நம்மை விட்டு மறைந்துவிடுகின்றன. இவை மறையும்போது ஞானம் துளிர்க்கிறது. ஞானம் துளிரும்போது நம்முள்ளே இருக்கும் அகங்காரங்களான நான், எனது அழிந்துஆன்ம அறிவு கலக்கிறது.
            சாயி பக்தர்கள் அவரவர்களுக்கு தெரிந்த வழியில் பூஜைசெய்வதையும், சேவை செய்வதையும் பாபா ஏற்றுக் கொண்டார். அவர்கள் பூஜை, சேவை செய்வதில் யாரும் குறுக்கீடு செய்யக்கூடாது அதுபாபாவுக்கு அறவே பிடிக்காது என்பதை அண்ணாசிஞ்சனீகர், மௌஷிபாயி ஆகியோரது வாழ்வில் நடந்த சம்பவங்களை சத்சரித்திரம் மூலம் பாபா விளக்கியிருக்கிறார்.
அன்புடனும், பக்தியுடனும் யாரொருவர் எனக்கு ஓர் இலை, மலர், பழம் அல்லது நீர் சமர்ப்பிக்கிறாரோஅந்த அன்புக் காணிக்கையை தாமதமின்றி ஏற்றுக்கொள்வதாக பாபா உறுதியளிக்கிறார். இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதி எதுவும்இல்லை.  தூய்மையான அன்பும் பக்தியும்தான் முக்கியம்.
        அடியவர்கள் பிறர் சேவைகளில் குறுக்கிடக்கூடாது என்றும் தாங்கள் விரும்பிய வண்ணமேபாபாவுக்கு அவர்கள் சேவை செய்ய விட்டுவிடவேண்டும் என்கிற பாடத்தை மௌஷிபாயியின் சேவை மூலம் தெரியப்படுத்துகிறார்.
           எனவே, நாம் பூஜை செய்வதிலும், சேவை செய்வதிலும் பாபாவை நாம் விரும்பிய வண்ணமேமனத்தூய்மையோடும், பக்தியோடும், பரிபூரண நம்பிக்கையோடும், சாஸ்டாங்கமாக நமஸ்கரித்து, நான் எனது என்ற அகங்காரத்தை அடியோடு புறந்தள்ளி, வணங்கினோமேயானால், நமது பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக பாபாவால்உரிய காலத்தில் தீர்க்கப்பட்டு விடும் என்பதுநிதர்சனமான உண்மை.
சாயி கலியன்

பாபா காப்பாற்றுவார்
ஐந்தாண்டுகளாக தீவிரமான சாயி பக்தை.  எங்கள் குடும்பத்தில் பாபா அருளால் பல அற்புதங்கள் நடந்துள்ளன. என் கணவருக்கு ரயில்வேயில் வேலை கிடைக்கமுயற்சித்ததோடு, பாபாவிடமும் வேண்டிக்கொண்டோம். ஒரு வியாழன் அன்று என் கணவர்வேலைக்கான உத்தரவுடன் வந்தார். என்னேபாபாவின் கருணை, ஒரு வியாழன் அன்று பெரம்பூரில் ஒரு வங்கிக்குசென்றுவிட்டு திரும்பும்போது பணமுள்ள பர்ஸ்மற்றும் செல்போனை மறதியாக வங்கியிலேயேவைத்துவிட்டு வந்துவிட்டேன்.  
ஓட்டேரியில் என்அக்கா வீட்டிற்கு வந்து, என் அக்காவிற்க்கு பணம் கொடுக்க தேடிய போதுதான் பர்ஸ் காணாமல் போனது தெரியவந்தது. அங்கிருந்து என் செல்லுக்குபோன் செய்தபோது முதலில் ரிங்க் போய் யாரும்
எடுக்கவில்லை. மறுபடியும் முயன்றபோது ஸ்விட்ச் ஆப் என்றது. ஆனாலும் நான் பாபா கைவிடமாட்டார்என்ற தீவிர நம்பிக்கையில் என் கணவரை போனில்அழைத்து வங்கிக்குப் போய் மேனேஜரைப் பார்த்துக்கேட்கச் சொன்னேன்.
என் கணவர் போய் கேட்டபோது, ஒரு அம்மா, ஒருவர் ஒரு பர்சை எடுத்ததை தான் பார்த்ததாகவும்அவரது அடையாளத்தையும் சொன்னார். அவர்வங்கிக்கு அடிக்கடி வரும் வாடிக்கையாளர் என்பதால்மேனேஜர் அவரை வரவழைத்துக் கேட்டார்.
முதலில் மறுத்த அவர், போலீசில் புகார் செய்வோம் என்று மேனேஜர் சொன்ன பிறகு, வீடுபோய் வேறு ஒருவர் மூலம் பர்ஸ் மற்றும் போனை கொடுத்தனுப்பினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வியாழன் அன்றுவெந்நீர் வைக்க உதவுகிற எலக்ட்ரிக் ராடு எடுத்துதண்ணீரில் போட்டு வெந்நீர் வைத்தோம். அதைஅப்படியே ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வெந்நீரைமட்டும் எடுத்துவிட்டேன். எட்டு மணி முதல் பத்துமணி வரை மின்சாரம் இல்லாததால் நாங்கள்ஸ்விட்சை அணைக்காதது தெரியவில்லை.
காஸ் சிலிண்டர் மேல் கோணி வைத்து அதன்மேல் இந்த எலக்டிரிக் ராடை வைத்திருந்தோம்.கணவரை அலுவலகத்திற்கும், மகளை பள்ளிக்கும்அனுப்பி விட்டு எப்போதும் போல வீனஸ் மார்க்கெட்டில் உள்ள சாயி பக்தர் வீட்டுக்குபஜனைக்கு சென்றேன்.
பன்னிரண்டே முக்கால் மணிக்கு ஆரத்திநடக்கும்போது எனக்கு பக்கத்து வீட்டிலிருந்துபோன் வந்தது. ஆரத்தி நேரம் என்பதால் ஸ்விட்ச்ஆப் செய்துவிட்டேன். அவர்கள் என் கணவரைஅழைத்து வீட்டிலிருந்து புகை வருவதாகவும்உடனடியாக வரும்படியும் தகவல் சொல்ல,உடனேஎன் கணவர் வீட்டிற்கு வந்தபோது தெருவில் அக்கம்பக்கத்தில் கூட்டமாக இருந்தது. கதவைத் திறந்துவீட்டிற்குள் சென்றதும் ஒரே புகை மண்டலமாக
இருந்தது.
ராடு தகதகவென்று ஒரே சிகப்பாகவும், கோணிபுகைந்துகொண்டும் இருந்தது. உடனே ஸ்விட்ச்ஆப் செய்துவிட்டு, ராடை தண்ணீரில் எடுத்துப் போட்டு, கோணி, பாய் அனைத்தையும் நீரில் நன்றாக நனைத்தார் என் கணவர்.
காஸ் சிலிண்டர் ஆனில் இருந்தாலும் எந்த ஒருவிபரீதமும் நடக்காமல் பாபா என் வீட்டையும்கணவரையும் காப்பாற்றி அற்புதம் செய்தார்.
எனக்கு நல்ல அன்பான கணவரையும் நல்ல பிள்ளையையும் கொடுத்த பாபாவுக்கு என் அனந்தகோடி நமஸ்காரங்கள். இது நடந்த அடுத்த வியாழன்அன்றே குடும்பத்துடன் சீரடி சென்று பாபாவுக்குஎங்கள் நன்றியைத் தெரிவித்து நல்ல தரிசனமும்செய்துவந்தோம்.
பாபாவை முழு மனதுடன் நம்பினால் இம்மாதிரிஆபத்துக்களில் இருந்து காப்பாற்றி ரட்சிப்பார்என்பதை உறுதியாக உணர்கிறேன்.
         சரஸ்வதி குமார்,
              செம்பியம்,
            பெரம்பூர்,
           சென்னை11