சாயி பிரேரணா முழுதும்

சாயி பிரேரணா 
(Translated into Tamil by Santhipriya)

பாகம் – 1 
என் வழியில் நீ வந்தால், உனக்கு எல்லா வழியையும் திறந்து விடுவேன்
எனக்காக நீ சிறிது நேரத்தை ஒதுக்கினால்,  உனக்கு குபேரனுடைய பொக்கிஷத்தைப் போன்றதை தருவேன் 
என்னால் நீ பழிச்சொல்லை ஏற்றால்,  உனக்கு பூரண அருள் கிடைக்கும்
நீ என்னிடம் வந்தால், உன்னை நான் பாதுகாப்பேன்
என்னைப் பற்றி நீ மற்றவர்களிடம் கூறிக்கொண்டே இருந்தால், உன்னை விலை மதிப்பற்றவனாக்கி விடுவேன்
நீ என்னைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தால், உன்னை ரத்னம் போன்று ஜொலிக்கும் ஆன்மீக ஞானம் உள்ளவனாக மாற்றுவேன்
என் உதவியை நாடி வந்து என்னையே ஏற்றால், உன்னை அடிமைத்தனத்தில் இருந்து மீட்பேன்
எனக்காக உன்னை எந்த விதத்திலாவது நீ தந்துவிட்டால், உன்னை விலை மதிப்பற்றவனாக்கி விடுவேன்
என் வழியில் நீ நடந்தால்,  நீ பெரும் புகழ் பெறுவாய் .
என்னைப்பற்றி பாடிக்கொண்டே இருந்தால்,  ந்த உலகையே நீ மறந்துவிடுவாய் .
நீ என்னுடையவன் என ஆகிவிட்டால், அனைவரும் உன்னுடயவர்களாகி விடுவார்கள்


பாகம் – 2

ஒரு கோவிலிற்க்கோ , குருத்வாராவிற்க்கோ அல்லது மசூதிக்கோசெல்லும்போது அங்கெல்லாம் என்னையே நீ நினைத்து கொண்டு இருந்தால்,  உனக்கு அனைத்து இடத்திலும் தரிசனம் தருவேன்
ஒவ்வொரு கணமும் நீ என்னையே நினைத்துக் கொண்டு இருந்தால், அந்த ஒவ்வொரு கணமும் நான் உன்னை காப்பாற்றுவேன்
எனக்காக சிறிது கஷ்டத்தை நீ ஏற்றுக் கொண்டால், உனக்கு வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து கஷ்டத்தையும் விலக்குவேன் .
என்னுடைய புனிதத்தலத்திற்கு (ஷீரடி ) வந்து நீ நடந்தால், நீ செய்த அனைத்து பாபங்களையும் ஒழிப்பேன்
உன் கையால் நீ எனக்கு பிரசாதம் படைத்தால்,  உன் வீட்டிலே உணவுப் பொருட்கள் நிறைந்தே இருக்கும்
என்னுடைய புனிதப் புத்தகத்தை படித்தால்,  நீ வாழ்வில் பெரும் வெற்றி அடைவாய்
என்னுடைய பக்தர்களைக் காணும்பொழுது அவர்களில் நீ என்னையே பார்த்தால்,  உன்னை ஜொலிக்க வைப்பேன்
என் நாமத்தை ஒரு மணி மாலை அளவில் உருட்டி ஜபித்தால்,  உன்னை சாதுக்களைப் போன்ற ஞானம் உள்ளவனாக்குவேன் .
இதயப் பூர்வமாக ஓம் சாயிராம் என ஜபித்தால், உன்னுடைய அனைத்து வேண்டுகோளையும் நான் கேட்பேன்
என் மீதே தியானம் வைத்திருந்தால்,  நீ கவர்ச்சி உள்ளவனாக மாறிவிடுவாய்
எனக்காக நீ மௌனம் காத்தால்,  உனக்கு அமைதி கிடைக்கும்
நீ என் எதிரிலேயே அமர்ந்து இருந்தால்,  நான் எப்போதும் உன்னுடனேயே இருப்பேன்
சாந்திலால்,  நீ என்னுடைய துதியை தூய மனதுடன் செய்ததினால் , உன்னுடைய வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக மாற்றுவேன்           

  பாகம் – 3 

நீ என்னிடம் வந்தால் உன் துயர் நீக்குவேன் , துன்பத்தைக் களைவேன்
நீ என்னுடைய புனித பூமியான ஷீரடியில் வாழ்ந்தால் , உன் வீட்டையும் புனித இடமாக்குவேன்
என் பிரசாதங்களை நீ பக்தியுடன் ஏற்றால்,  உன் நினைவுகளைத் தூய்மை ஆக்குவேன்
நீ என்னை பக்திபூர்வமாக வணங்கிவந்தால்,  உன்னை கர்மயோகியாக மாற்றுவேன்
எனக்கு நடக்கும் ஆரத்தியில் நீ சேர்ந்து பாடினால்,  உன் நாவில் சரஸ்வதியை வாசம் செய்ய வைப்பேன் .
என் வழியில் நீ நடந்தால் உனக்கு முன் நடந்து வழி காட்டுவேன்
எனக்காக நீ துன்பமுற்றோர்க்கு உதவினால்,  உன் இதயத்தில் ஆனந்தத்தையும்,  அமைதியையும் தருவேன்
என்னை உன் வீட்டில் நீ வைத்திருந்தால்,  உன் வீடு சொர்க்கம் போல ஆகும்
என்னுடைய உதி எனும் விபூதியை நீ நெற்றியில் தடவிக்கொண்டால்,  உன் முகமே தெய்வீகக் களை பெறும்
என்மீது நீ பூக்கள் பொழிந்தால்,  உன்னுள் நல்ல நினைவுகள் தோன்ற அருள் புரிவேன்
என் பாதங்களைத் தொட்டு வணங்கினால், உன்னை அனைவரும் விரும்புவனாக ஆக்குவேன்
என் பாதங்களைத் தொட்டு வணங்கினால், நான் உன்னுள் முழுமையாக வியாபித்து இருப்பேன்
சந்தனத்தை என் நெற்றியில் பொட்டாக வைத்தால், உன்னை அதிர்ஷ்டசாலியாக்குவேன்

பாகம் – 4 
நீ என்னுடைய கல்போன்ற கிரீடத்தின் முன் தலை குனிந்து நின்றால், உன்னுடைய பல்லாயிரக்கணக்கான பாபங்களை விலக்குவேன்
நீ சாயி பக்தன் ஆனால்,  பக்தி மார்கத்தின் பல வெள்ளங்களில் உன்னை மூழ்கடிப்பேன்
நீ என்னுடைய படத்தை உன் உடலில் அணிந்து இருந்தால் உன் உடல் முழுவதும் நான் வியாபித்து இருப்பேன்
நீ என்னைப்பற்றி புத்தகம் எழுதினால் அதை பிரபலமானதாக ஆக்குவேன்
சீரடியில் வந்து நின்று என் புகழ் பாடினால் உனக்கு அனைத்து நற்குணங்களும் நிறையும்
நீ பலமணி நேரம் நின்றுகொண்டு இருந்தபடி என்னை தரிசித்தால் , உன்னை அனைத்து புண்ணிய தீர்த்தங்களுக்கும் செல்ல வழி வகுப்பேன் அல்லது அனைத்து புண்ணிய தீர்த்த மகிமைகளை உனக்கு நான் அளிப்பேன்
நீ என் பாதுகைகளை வணங்கினால், உன்னை என்னுடைய முழு பக்தனாக ஏற்றுக்கொள்வேன்
நீ எனக்கு முன்னால் விளக்கு ஏற்றினால்,  உன் வாழ்வும் ஓளி மிக்கதாக ஆகும்
நீ என்னுடைய வழிபாட்டு தலத்திற்கு வந்து என்னை வணங்கினால், பல பக்தர்கள் அங்கு வந்து வணங்கியதற்கு சமம் ஆக்குவேன்
என்னை உன் வீட்டில் வைத்து வழிபட்டால் , உன்னுடைய அனைத்து வழிபாட்டிலும் என்னை நீ காணலாம் .
உனக்கு சீரடிக்கு வர மனது இருந்தால், மீண்டும் மீண்டும் ஷீரடிக்கு வர வழிப்பேன்
நீ என்மீது தூய பக்தி கொண்டு அன்பு செலுத்தினால், என்னுடைய முழு அன்பும் உனக்கு கிடைக்கும்
நீ என்னை உன்னுடையவனாக நினைத்தால் , என்னை உன்னுள் நீயே காண முடியும்
பாகம் – 5 
உன்னுடைய வாழ்க்கை எனும் ஓடத்தை என்னிடம் தந்துவிட்டால்,  இந்த வாழ்வெனும் கடலைக் கடக்க நான் உதவி செய்வேன்
நீ துனியில் இருந்து வரும் புகையை சுவாசித்தால், உன் உடலில் உள்ள அனைத்து நோயும் நீங்கிவிடும்
துவாகாமாயி மற்றும் என் சமாதியின் பெருமையும் நீ உணர்ந்து கொண்டால், என்னை நீ பார்க்க முடியும்
உன்னுடைய வாழ்க்கையையே என்னிடம் தந்து விட்டால்,  உன்னுடைய வாழ்வின் ஒரு அங்கமாக நான் இருப்பேன்
என் மீது நம்பிக்கை வைத்து என்மீது உன் மனதை செலுத்தி வந்தால், அனைவரும் உன் மீது நம்பிக்கை வைப்பார்கள்
வியாழன் அன்று தரப்படும் என்னுடைய பிரசாதத்தை நீ பணிவுடன் ஏற்றுக்கொண்டால், அன்றைய தினத்தின் அனைத்து நன்மைகளும் உனக்கு கிடைக்கும்
என்னையே நீ நினைத்துக் கொண்டு இருந்தால், அனைவரும் உன்னையே நினைத்துக் கொள்வார்கள்
என்னையே நீ வேண்டிக்கொண்டால், உன்னுடைய அனைத்து வேண்டுகோளின் போதும், நான் வந்து உனக்கு வழி காட்டுவேன்
என்னை தூய கண்களுடன் நீ தரிசித்தால், அனைத்து மதத்தினரையும் அன்புடன் பார்க்க வைப்பேன்
என்னை ஊதுபத்தி புகையில் இருந்து வெளிவருவதாக கருதிப் பார்த்தாயானால்,  எந்த இடத்தில் இருந்து வரும் புகையிலும் என்னை நினைக்க வைப்பேன்
சாயி ஆலயத்தில் ஏதாவது வேலையில் நான் உதவிக்கொண்டு இருப்பவனைப் போல இருப்பதாக நீ உணர்ந்தால்,  உன்னுடைய அனைத்து காரியத்திலும் நான் உதவுவேன்
என்முன் நீ கைகூப்பி நின்றால், உன் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடங்கல்களையும் தடுத்து நிறுத்துவேன்
பாகம் – 6 
என்னுடைய பாதயாத்திரையின்போது என் பக்கத்திலேயே நீ நடந்து வந்தால், அனைத்து பாதயாத்திரையிலும் உன்னை நான் அழைத்துக் கொள்வேன்
என் பாதயாத்திரையில் கலந்து கொள்பவர்களுக்கு நீ சேவை செய்தால், உன்னுடைய அனைத்து சேவையிலும் நானும் பங்கேற்பேன்
சீரடிக்கு நடைப் பயணமாக நீ வந்தால்,  அனைத்து புண்ணிய இடங்களுக்கும் செல்ல உதவுவேன்
ஒருமுறை என் பாதயாத்திரையில் நீ கலந்து கொண்டால், உன்னுடன் எழுபத்தி ஓர் ஜென்மம் நான் பயணிப்பேன்
என் பாதயாத்திரையில் ஒன்பது நாள் பயணத்தில் நீ பங்கேற்றால்,  உன் உயிர் மூச்சாக நான் இருப்பேன்
என் சமாதியில் நீ துணியை போட்டு வணங்கினால்,வ்வொரு இழையின் அளவுக்கு நான் உனக்கு நன்மையை திருப்பித் தருவேன்
பாதயாத்திரையில் என் பல்லக்கை நீ சுமந்து கொண்டு சென்றால், அதன் சுமையை பூப்போல மாற்றுவேன் .
பாதயாத்திரையில் என் பாடத்தை மனதில் நினைத்திருந்தபடி ஸ்ரீ சாயி ஸ்ரீ சாயி என கூவிக்கொண்டே சென்றால், நடக்கும் வலியை உன் கால்கள் உணரவே உணராதது
எனக்காக நீ சுயநலம் இன்றி வேலை செய்தால், உன் கைகள் நல்லவற்றையே செய்யும்
என்னுடைய சமாதியில் மிகுந்த பணிவோடு முன் தலையால் தொட்டு வணங்கினால்,  அங்கு என்னையே நீ காணலாம்
என் சமாதிக்கு முன் வேண்டுவது கிடைக்கும்
என் சமாதி முன் உன் இரு கைகளையும் நீட்டியபடி வேண்டும் பொழுது, அந்த கைககள் நிறையும் அளவு அனைத்தும் நான் தருவேன்
என்னை உன்னால் பார்க்க முடியாத பொழுது அழுதால், அந்த கண்ணீரிலேயே இறைவனின் ஓளி கிடைக்கும்
பாகம் – 7 
ஷீரடிக்கு வந்து என்னுடைய ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நீ என்னுடைய பிரசாதத்தை உண்டால், உனக்கு வரும் அனைத்து தொல்லைகளும் விலகி தீமை ஒழியும்
காகாட் ஆரத்தியில் நீ கலந்து கொண்டால், அங்கு உனக்கு என் தரிசனத்தைத் தருவேன்
நீ அங்கு வந்து எனக்கு தேங்காயைத் தந்தால், உன்னை ஒரு யோகி போல மாற்றுவேன்
என்னுடைய ஆரத்தியில் கலந்துகொள்ள உன் நேரத்தை ஒதுக்கினால், உனக்கு வரும் அனைத்து தடைகளையும் விலக்குவேன்
என் ஆலயத்தில் உள்ள கொடியை நீ பக்திபூர்வமாகப் பார்த்தால், என்னுடைய சச்சிதானந்த ஸ்வரூபத்தைக் அதில் காண முடியும்
சீரடி மண்ணின் தூசியை உன் நெற்றியில் இட்டுக் கொண்டால், உன் அனைத்து வேலைகளிலும் நான் உதவுவேன்
நீ ஆரத்தியில் ஏழும் மணி ஓசையைக் கேட்கும்போது, அந்த ஓளி உன் காதில் சாயி , சாயி என ஒலிப்பதைக் காணமுடியும்
என்னை நீ ஒரு வெள்ளி இருக்கை மீது அமர வைத்திருந்தால் , உனக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்
இந்த பிரேரணாவை ( மன நிலையை ) என் ஆலயத்தில் வைக்கும் பொழுது, உன்னை நான் என்றும் பாதுகாத்து நிற்பேன்
இந்த பிரேரணாவை நீ தினமும் காலையிலும் மாலையிலும் படிக்கும்போது, என்னை பற்றி எழுதும் எழுத்தாளனாக உன்னை மாற்றுவேன்
இந்த பிரேரணாவில் நீ என்னுடைய உணர்வுகளை உணர முடிந்தால்,  உன்னை நான் ஆத்ம உணர்வு கொண்ட மனிதனக்குவேன் .
இந்த பிரேரணாவின் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால்,  உன்னை தினமும் என்னை வணங்க வழி செய்வேன்
என்னுடைய இந்த புனித இடத்தில்,  தூய்மையுடன் நீ இருந்தால் உன்னையும் கங்கையைப் போல தூய்மையானவனாக ஆக்குவேன் .
பாகம் –8 
 •
என்னைப்பற்றிய அனைத்தையும் நீ எடுத்துக் கூறி வந்தால், உன்னுடைய பேச்சுக்களில் நல்லவை , தீயவை பற்றி எடுத்துக் கூறும் திறமை வரும்
நீ என் வேலைகளை செய்து வந்தால்,  நான் உன் வேலைகளை செய்வேன்
நீ என்னை பகவான் ராமராகப் பார்த்தால்,  உன்னால் மாயையை வெல்ல முடியும்
நீ எனக்கு அணிகலன்களை அணிவித்தால், உன்னை மிக அழகுள்ளவனாக மாற்றுவேன்
என்னையே நீ உன்னுடைய பாதுகாவலனாக நினைத்தால் , உன்னை நான் நிச்சயமாகப் பாதுகாப்பேன்
என் முன் அமர்ந்துகொண்டு ராம நாமம் ஜெபித்தாயானால் , தர்மம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்ள வழி செய்வேன்
என்னை நீ ராமனாகவும் , ரஹீமாகவும் பார்த்தால், உனக்கு தர்மம் என்ன என்பதை புரிய வைப்பேன்
என்னை இந்த உலகைக் காப்பவனாகவும் , அனைத்தையும் கொடுப்பவனாகவும் எண்ணிப் பார்த்தால், உனக்கும் அனைத்தையும் தந்து உன்னை காப்பேன்
என்னை சீரடியின் மகானாகப் பார்த்தால், என்னிடம் நீ அடைக்கலம் ஆகிவிட்டவனாகக் கருதுவேன்
என்னிடம் எப்போதும் பக்திபூர்வமாக இருந்தால், உனக்கு பிறப்பில் இருந்தும் மரணத்தில் இருந்தும் விடுதலைத் தருவேன்
ஷீரடியை நீ புனிதத் தலமாகக் கருதினால், நீயே என்னுடைய பக்தனாவாய்

பாகம் –9
என்னுடைய பாதங்களை நீ வணங்கினால், அதில் திருவேணி எனப்படும் பிரயாக் நதியைக் காட்டுவேன்
என்னுடைய சிலை உனக்கு ஆறுதலைத் தருவதுபோல நீ உணர்ந்தால், உனக்கு முடிவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் நான் தருவேன்
என்னை நீ தொடர்ந்து வணங்கி வந்தால், ஒழுக்கமான முறையில் வணங்குவதை உனக்கு நான் கற்றுத் தருவேன்
உன்னைக் காப்பவனாக என்னை நினைத்து, நீ அபிஷேகம் செய்தால், ஒவ்வொரு அபிஷேகத்தின் பொழுதும் உன்னுடைய பாதுகாவலனாக நான் மாறுவேன்
என்னையே நீ அனைத்து கடவுளாக எண்ணிப் பார்த்தால், நான் உனக்கு அனைத்துக் கடவுளுமான ஒரே கடவுளாக நான் மாறுவேன்
சாயி மந்திரத்தை சிரத்தையாக செய்தால், மந்திரத்தின் பொருளை உனக்கு உணர்த்துவேன்
நீ என்னை பற்றிய அனைத்து விஷயங்களையும் படித்து தெரிந்து கொண்டால், உன்னை ஞானம் உள்ளவனாக்குவேன்
நீ என்னிடம் அன்பு செலுத்தினால், உன்னை என் நிழலில் வைத்திருந்து பாதுகாப்பேன்
என்னை உன் குருவாகக் கருதினால், உனக்கு குரு மந்திரத்தை உபதேசிப்பேன்
என்னை ஒரு யோகியாகப் பார்த்தால், உன்னால் இந்த அழிவற்ற உலகின் தெய்வீகத்தை பார்க்க முடியும்
தி எனும் விபூதியை நீ மருந்தாகப் பார்த்தால் , உன்னுடைய அனைத்து நோய்களையும் விலக்குவேன்
என்னை ஜோதியாகப் பார்த்தால் , எந்த ஒரு எரியும் விளக்கின் ஒளியிலும் என்னைப் பார்க்க முடியும் .

பாகம் –10 
விளக்குகள் அனைத்தையும் நான் என் கைகளால் எற்றுவதாக நீ கருதினால் , அனைத்து விளக்கிலும் கடவுளைக் காணலாம்
மற்ற மதத்தினருடன் நீ ஒற்றுமையாக வாழ்ந்தால் , அனைவரையும் உன்னுடைய நெருக்கமானவர்களாக மாற்றுவேன்
சாயிராம் என்பதையே நினைத்திருந்தால், நீ செய்யும் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்
நீ எனக்காக அன்னதானம் செய்தால், நீ தந்த ஒவ்வொரு பருக்கைக்கும் உனக்கு நல்லதை தருவேன்
என்னுடைய சமாதியை உன் கரங்களினால் தொட்டு வணங்கினால், உனது விதி ரேகைகளை மாற்றி அமைப்பேன்
என் சமாதியில் சாயி ராம் சாயி ராம் என நீ குரல் எழுப்பினால், என்னுடைய ஆலயத்தின் அனைத்து சுவர்களிலும் சாயி ராம் என்ற உணர்வு ஒலிப்பதை நீ காணலாம்
என்னுடைய சமாதியில் நீ சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினால், நீ என்னால் முழுமையாக ஏற்கப்பட்டு விட்டதாகக் கருதுவேன்
என்னுடைய புனித இடங்களில் நீ தாராளமாகத் தானம் செய்தால், அதை மிகவும் நல்ல செயலாகவே கருதுவேன்
என்னுடைய ஆரத்தியின் பொழுது நீ கைகளை தட்டிக் கொண்டு இருந்தால் , அந்த கைகளின் உள்ளே தெய்வீகத்தை தருவேன்
எனக்கு முன்னால் நீ நடனமாடினால் ,  அந்த நடனத்தின் இசை கருவிகளின் கீதமாக நான் இருப்பேன்
என்னிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டால், உன்னுடைய இதயத்திற்கு வலிமை சேர்ப்பேன்
ராமநவமி பண்டிகையை நீ கொண்டாடினால் நீ கொண்டாடும் அனைத்து பண்டிகைகளிலும் நான் இருப்பேன்
என் ஆலயத்தை சுற்றி நீ நடந்து வந்து வணங்கினால், அது உன்னுடைய அனைத்து கடவுள்களையும் வணங்கியதற்கு சமமாகிவிடும் .
 
பாகம் –11 
நான் பேசிய ஒவ்வொரு சொல்லையும், உலகத்துக்கு எடுத்துரைத்தால் என்னுடைய வார்த்தைகள் உனக்கு மன அமைதி தரும்
நீ மனதார , இதயபூர்வமான சிரத்தையுடன் என்னை வணங்கி வந்தால், உனக்கு ஆன்மீக சந்தானத்தை தருவேன்
கங்கை நதிபோன்ற என்னைப் பற்றிய நினைவில் மூழ்கினால், இந்த உலகின் சம்சாரக் கடலில் இருந்து உன்னை கரை ஏற்றுவேன்
குரு மந்திரத்தை என்னுடைய புனித இடத்தில் ஓதி வந்தால், ஒவ்வொரு மந்திரத்திலும் குருவைக் காண முடியும்
நீ கண் உறங்காமல் சீரடியில் என்னை இரவு முழுவதும் பூஜித்தால், அதன் பயனை உனக்கு நான் உணர்த்துவேன்
என் முன் அமர்ந்துகொண்டு உன் துயரத்தைக் கூறினால், உன்னுடைய அனைத்து துயரத்தையும் ஆனந்தமயம் ஆனதாக மாற்றுவேன்
எனக்கு ஒரு மாலை ரோஜாவை அணிவித்தால், உன் வாழ்க்கையை மணமுள்ளதாக மாற்றுவேன்
என்னுடைய புனித இடத்தில் வந்து தீபம் ஏற்றினால், உன் வாழ்விலும் ஒளியை ஏற்றுவேன்
என்னுடைய அனைத்து பக்தர்களுக்கும் நீ பிரசாதம் தந்தால், உன்னை நல்லொழுக்கம் உள்ளவனாக்குவேன்
என்னுடைய புனிதக் கட்டைவிரலை நீ துதித்தால், குருபூர்ணிமா என்ற புனித பண்டிகையின் பலனைத் தருவேன்
என் முன் நின்று ஓம் என்ற மந்திரத்தைக் கூறினால், இந்த உலகின் அனைத்து ஆனந்தத்தையும் உனக்கு நான் தருவேன்

Advertisements

சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்

சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்

எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்ள சிறந்த ஒன்பது வழிகளை இங்கே பார்க்கலாம்:
1. சாயி சத்சரித்திரம் புத்தகத்தில் (அது என்ன மொழி புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை), அதனை ஒரு  அழகான துணியினால் மடித்து, பாபா  புகைப்படம் அல்லது சிலை அருகே (வீட்டில் என்ன வைத்து வழிபடுகிறோமோ அதன் முன்னர்) மிகப் புனிதமாக கருதி வைத்து வழிபட வேண்டும் .
2. வீட்டிலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும், தினசரி இரவு எப்போதும் தூங்க செல்லும் முன்,  ஒவ்வொரு இரவும் சாயி சத்சரித புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை படிக்க வேண்டும் . ஒவ்வொரு பக்தரும் தூங்கச் செல்லும் முன் கடைசியாக சிந்தனை என பாபாவினை மனதில்  வைக்க முயற்சிக்க வேண்டும் .
3. ஏதேனும் சங்கடம் ஏற்படின், ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் , ஒரு வாரம் தீவிரமாக வாசிக்க வேண்டும் முடிந்தவரை வாசிப்பு ஒரு வியாழக்கிழமை அல்லது வேறு சில சிறப்பு நாட்களில் தொடங்க வேண்டும்.  சிறப்பு நாட்கள் என்றால் ராமநவமி , தசரா , குருபூர்ணிமா , ஜன்மாஷ்டமி , மஹாசிவராத்திரி , நவராத்திரி , முதலியன ஆகும். தொடர்ந்து படித்து முடித்த ஏழாவது நாளில்  , ஒரு  ஏழை அல்லது ஆதரவற்ற ஒருவருக்கு உணவளிக்க வேண்டும்.  .
4. ஏதாவது ஒரு கோயிலில்,   தனிமைப்படுத்தப்பட்ட மூலையில் அல்லது பாபா சிலை அல்லது புகைப்படம் / ஓவியம் முன்னால் உட்கார்ந்து படிக்க வேண்டும் . மற்ற மக்கள் இருந்தால்,  குழு வாசிப்பு முறையில்  எப்போதும் அவற்றை படிக்கவும் ஊக்குவிக்க வேண்டும் .
5. எப்போதேல்லாம் அல்லது எங்கெங்கெல்லாம் சாத்தியப்படுகிறதோ அந்த கோவில்களில் விசேட நாட்களில் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை தொடர்ந்து படிக்க வேண்டும்.  அங்கு வரும் பக்தர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு பக்கத்தினை படிக்கச்செய்யலாம். நாம ஜெபம் செய்ய ஊக்குவிக்கலாம். கோவிலுக்கு வரும் குழந்தைகளை சாயி சத்சரித்திர  புத்தகத்தை படிக்க வைக்க ஏற்பாடு செய்யலாம். ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தினை  அடிப்படையாக வைத்து கேள்வி பதில் போட்டிகள் கோவில்களில் ஏற்பாடு செய்து நடத்தலாம்.

6. வயதானவர்கள், உடல் நலிவு அடைந்தவர்கள் மற்றும் முதுமையால் மரணத்தினை நெருங்குபவர்கள் அருகமர்ந்து சாயி சத்சரித்திரத்தினை வாசிக்க அவர்கள் அனைவருக்கும் மன அமைதி கிடைக்கும். 
7. ஸ்ரீ சாய் சத்சரித்திரம் புத்தகம் எளிய  நியாயமான விலையில் பல் மொழிகளிலும் ஷீரடியில் எளிதாக கிடைக்கும் . எனவே , ஷீரடி சென்று வரும் பக்தர்கள்,  இலவசமாக மக்கள் மத்தியில் விநியோகிக்க அவருடன் சில பிரதிகளை வாங்கி கொண்டு வர வேண்டும்
8. மன வேதனை மற்றும் பிரச்சனைகளில் உள்ள ஒருவர் மனத்தூய்மையுடன் சாயி சத்சரித்திரத்தினை படிக்கும் போது அவரது பிரச்சனைகட்கு உண்டான பதில்கள் மட்டுமல்ல,  மிகப்பெரிய மன ஆறுதலும் அவருக்கு கிடைக்கும்.  மேலும் , அவருக்கு  பாபா மேல் உள்ள  நம்பிக்கை மேன்மேலும் வளரும்.
9. சாயி சத்சரித்தினை எழுதிய ஹேமாட்பந்து எப்படி சாயிபாபாவினால் ஈர்க்கப்பட்டு பாபாவின் அருளுக்கு பாத்திரமானாரோ , அதே போன்று சாயி சத்சரித்திரம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பாபா அவர்களின்  தெய்வீக அனுபவம் கிடைக்கும் மற்றும் பாபா அவர்களின் அருளுக்கும் பாத்திரமாவோம்.  .

ஸ்ரீ சாயி சத்சரித்திரம் சாயி பக்தர்களால்  கீதை மற்றும் பைபிள் போன்று கருதப்படுகிறது.
(ஆதாரம் : திரு சி.பி.சபாபதி அவர்கள் எழுதிய “சீரடி சாய்பாபா அண்ட் அதர் பர்பெக்ட் மாஸ்டர்ஸ் எனும் புத்தகம்)

(Source: ‘Shirdi Sai Baba and other Perfect Masters’ written by Respected Guruji Shri C.B.Satpathy,)

சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் – பாகம் 7சீரடி சாய்பாபா  ஒரு அற்புத மகான் – பாகம் 7

தேனி. எம். சுப்பிரமணி


(முதல் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
(இரண்டாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(மூன்றாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(நான்காம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
(ஐந்தாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(ஆறாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
            உண்மைப் பொருள்களைப் பகுத்துணரும் விவேகம்நிலையற்ற பொருட்களின் மேல் பற்றின்மை போன்ற தத்துவத்தை தனது தட்சிணைஉதி ஆகியவற்றின் வழியாக அவர் தெளிவாகவே அறிவுறுத்தினார். தட்சணையை அவர் கேட்டுப் பெற்றார். உதியை அதற்குப் பதிலாகத் திருப்பி அளித்தார். அதாவது தட்சணை மூலம் இவ்வுலகத்தின் மேல் பற்றின்மையையும்உதி மூலம் உண்மையை உணர்ந்து கொள்ளவும் வழிகாட்டினார். 

                          உலகத்தின் உறவுகளிடம் பற்று கொண்ட வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இறைவனை அடைய வழிகாட்டிய சாயிபாபாசீரடிக்கு வரும் போது தன்னுடன் கொண்டு வந்த செங்கல்லை மட்டும் மசூதியில் பாதுகாப்பாக வைத்திருந்தார். மசூதியில் இரவு நேரத்தில் அந்த செங்கல் மீது சாய்ந்து கொண்டுதான் இருக்கையில் அமர்வார். அவர் இதை பல ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டிருந்தார். 
            ஒரு நாள் சாயிபாபா இல்லாத நேரத்தில்தரையைப் பெருக்கிக் கொண்டிருந்த ஒரு பையன் அந்த செங்கல்லைத் தன் கையில் எடுத்தான். அது அவனிடமிருந்து கை தவறிக் கீழே விழுந்து இரண்டாக உடைந்தது. இதை சாயிபாபா அறிந்ததும்அந்த செங்கல்லின் இழப்பு குறித்து பெரிதும் கவலை கொண்டார்.

                            இன்று உடைந்தது சாதாரண செங்கலல்ல. எனது விதியே துண்டுகளாக உடைந்து விட்டது. அது எனது ஆயுட்கால நண்பன். அதன் துணையுடன் நான் எப்போதும் ஆன்மத் தியானம் செய்தேன். அது என் உயிரைப் போன்று பிரியமானது. இன்று அது என்னை விட்டு நீங்கிவிட்டது” என்று புலம்பி அழுதார். ஒரு ஜடப்பொருளான செங்கல்லுக்கு சாயிபாபா ஏன் இவ்வளவு வருத்தம் கொள்கிறார் என்று சிலர் நினைத்துக் கொண்டனர். ஆனால் அவரிடம் யாரும் இது குறித்துக் கேட்டுக் கொள்ளவில்லை. 

                                    மனிதனாகப் பிறந்தவன் இறக்கும் நிலையில் அவன் மனதை இந்த உலக விசயங்களிலிருந்து மீட்டு ஆன்மிக விசயங்களில் நிலைத்திருக்கச் செய்யும் மத சம்பந்தமான நூல்கள் பாராயணம் செய்யப்படுவது இந்து சமயத்தினரிடையே வழக்கத்திலிருக்கும் ஒன்று. கடவுளின் அவதாரமாக இருந்த சாயிபாபாவிற்கு இது தேவையற்றது எனினும் மக்களுக்கு வழிகாட்டும் விதமாக இவ்வழக்கத்தை அவரும் பின்பற்றினார். தாம் விரைவில் மரணமடையப் போகிறோம் என்பதை உணர்ந்துவஜே என்பவரை அழைத்துதம் முன்பு ராம விஜயத்தைப் படிக்கும்படி கட்டளையிட்டார். 

                                   வஜே முதலில் வாரம் ஒருமுறை அதைப் படித்தார். பின்னர் இரவும்பகலும் அதையே படிக்கும்படி சொன்னார். அவர் மூன்றே நாட்களில் இரண்டாவது பாராயணத்தை முடித்தார். இப்படி பதினொன்று நாட்கள் சென்றன. பின்னர் மூன்று நாட்கள் படித்தார். ஆனால் வஜே மிகவும் களைப்பு அடைந்து விட்டார். அதன் பிறகு சாயிபாபா அவரைப் போகச் சொல்லி விட்டார். அதன்பிறகு ஆத்ம போதத்தில் மூழ்கியவராய் தன் மரணத்தை எதிர் கொண்டார். அன்றிலிருந்து தனது காலை சஞ்சாரத்தையும்பிச்சை பெற்று வரும் நியமத்தையும் நிறுத்தி மசூதியிலேயே தங்கி விட்டார். அந்த சமயத்தில்அவருடைய பக்தர்களில் சிலர் அவருடனேயே இருந்தனர்.

                                   1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் மகான் சாயிபாபா இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். சாயிபாபா மறைவுச் செய்தி சீரடி மக்களையும் அவர் மேல் அன்பும் பக்தியும் கொண்டிருந்த பகதர்களையும் வருத்தத்திற்குள்ளாக்கியது. இந்நிலையில் சாயிபாபாவின் உடலை எப்படி அடக்கம் செய்வதுஎன்ற கேள்வி எழுந்தது. சிலர் சாயிபாபாவின் உடலை திறந்த வெளியில் அடக்கம் செய்து அதன் மேல் சமாதி கட்ட வேண்டும் என்றனர். சிலர் வாதாவைத் தவிர வேறு எந்த இடத்திலும் அடக்கம் செய்யக் கூடாது என்றனர். இந்தக் கருத்து வேறுபாடு முப்பத்தாறு மணி நேரம் தொடர்ந்து நீடித்தது. இறுதியாக வாதாவில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர் உடல் வாதாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்முறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய இறுதிச் சடங்குகள் அனைத்தும் பாலாசாஹேப் பாடே மற்றும் சாயிபாபாவின் மேல் அதிகமான பற்றுடைய அவருடைய பக்தர்களில் ஒருவரான உபாசினி ஆகியோராலும் செய்யப்பட்டது. 

                               சாயிபாபாவை இந்துக்களும்இசுலாமியரும் அற்புத மகானாகப் போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. 


                              சாயிபாபா நோய் தீர்க்கும் அற்புதங்களை நிகழ்த்தினார். குழந்தையில்லாத பலருக்கும் குழந்தை கிடைக்க அருளினார் என்றும்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர் தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு செய்த பல வகையான அற்புதங்கள் கணக்கிலடங்காதவை. இவையனைத்தும் சாயி அற்புதங்கள் (சாயிலீலைகள்) என்று இன்றும் போற்றப்படுகின்றன. அவர் இவ்வுலகை விட்டுச் சென்று விட்டாலும்தன்னிடம் (சீரடி) தேடி வருபவர்களுக்கு இன்றும் அவர் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி வருகிறார்.
             ஜெய் சாயிராம்!
(நிறைவு)
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில் வெளியான தொடரின் ஐந்தாம் மகான்

சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் – பாகம் 6


சீரடி சாய்பாபா  ஒரு அற்புத மகான் – பாகம் 6
தேனி. எம். சுப்பிரமணி

(முதல் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
(இரண்டாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(மூன்றாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(நான்காம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
(ஐந்தாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
            இதுபோல், கோபர்காங்வின் ஆய்வாளராக இருந்த கோபால்ராவ் குண்ட் என்பவருக்கு மூன்று மனைவிகள் இருந்தும் அவருக்குக் குழந்தை இல்லாமல் இருந்தது. அவருக்கு சாய்பாபாவின் அருளினால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த மகிழ்ச்சியினால் 1897ல் அவருக்கு சீரடியில் சிறப்பான ஒரு திருவிழா கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. இதைச் சீரடி சாயிபாபா பக்தர்களாக இருந்த சிலரிடம் தெரிவித்தார். அவர்களும் இதற்கு சம்மதித்தனர். இதை பாபாவிடம் தெரிவித்து அதற்கான அனுமதியையும் ஆசியையும் பெற்றனர். இந்த விழாவை இசுலாமிய சமயத்தைச் சேர்ந்த சாய்பாபா பக்தர்களுக்கும் சேர்ந்த ஒரு பொது விழாவாக அமைக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். இசுலாமியப் பண்டிகையான உரூஸ், ஸ்ரீ ராம நவமி தினத்தன்றுதான் வருகிறது என்பதைப் பாபாவிடம் பேசி முடிவு செய்தனர். இவர்கள் திருவிழா கொண்டாட விரும்பிய நிலையில், சீரடி ஊருக்குத் தண்ணீர் அளித்துக் கொண்டிருந்த இரண்டு கிணறுகளில், ஒன்றில் தண்ணீர் வற்றிப் போய் விட்டது. வற்றிப் போன அந்தக் கிணற்றில்தான் நல்ல தண்ணீர் இருந்தது. இன்னொரு கிணற்றுத் தண்ணீர் உப்பு நீராகும். சாயிபாபாவிடம் இது பற்றித் தெரிவித்தனர். அவர் அங்கிருந்து அந்த உப்புத் தண்ணீர் கிணற்றுக்குச் சென்றார். அந்தக் கிணற்றில் சில மலர்களை வீசினார். அந்தக் கிணற்றுத் தண்ணீர் நல்ல தண்ணீராக மாறியது.
                          திருவிழா ஊர்வலத்துக்காக கோபால்ராவ் குண்ட் சாதாரணமான ஒரு கொடியைத் தயாரிக்கச் சொல்லி இருந்தார். அதே சமயம் நானா சாஹேப் என்பவர் அழகிய பூ வேலைப்பாடுகளுடன் மற்றொரு கொடியைத் தயாரிக்கச் சொல்லி இருந்தார். இரண்டு கொடிகளுமே தயாரிக்கப்பட்டு விட்டதால் திருவிழாவில் இரண்டு கொடிகளும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சாயிபாபாவினால் துவாரகமாயிஎன்று அழைக்கப்பட்ட மசூதியின் இரு மூலைகளிலும் அந்தக் கொடிகள் ஊன்றப்பட்டன. 
                               இத்திருவிழாவில் கோர்ஹாலாவைச் சேர்ந்த சாயிபாபாவின் இசுலாமியப் பக்தரான அமீர்சக்கர் தலாலுக்கு சந்தனக்கூடு ஊர்வலம் நடத்த வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. சாயிபாபாவை முகமதிய ஞானியராகச் சிறப்பிக்கும் வகையில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் சந்தனக் குழம்பும், சந்தனப் பொடியும் தாலிஎனும் தட்டுக்களில் வைத்து, இசையுடனும், நறுமணப் பொருட்களின் வாசனையுடனும் எடுத்து வரப்பெற்று கிராமம் முழுக்கக் கொண்டு சென்றனர். கடைசியாக மசூதிக்குச் சென்று திரும்பி அந்த சந்தனப் பொருட்களை நிம்பாஎன்னும் குழிகளில் கொட்டினர். 
                                 இப்படி ஒரே நாளில், இந்துக்களின் கொடி ஊர்வலமும், இசுலாமியர்களின் சந்தனக்கூடு ஊர்வலமும் எவ்விதப் பிரச்சனைகளுமின்றி அருகருகே கொண்டு செல்லப்பட்டன. இந்த விழா வருடந்தோறும் படிப்படியாக மாற்றமடைந்து ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 8ல் தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறும் திருவிழாவாக மாறிவிட்டது. 
                                பாபா இந்துவா அல்லது இசுலாமியரா என்ற கருத்து வேறுபாடு பலருக்கும் இருப்பது உண்டு. இந்துக்களின் ஸ்ரீ ராம நவமித் திருவிழாவைப் போல் இசுலாமியர்களின் சந்தனக்கூடு விழாவையும் அவர் அனுமதித்தார். கோகுலாஷ்டமியின் போது கோபால்காலாதிருவிழாவை உரிய முறைப்படி செய்வித்தார். ஈத்திருவிழாவின் போது இசுலாமியர்களின் நமாஸ் தொழுகையை தமது மசூதியில் அனுமதித்தார். அவருக்கு இந்து வழக்கப்படி காது குத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர் இசுலாமியர்கள் வழக்கப்படி சுன்னத் செய்து கொள்ளவில்லை. ஆனால் சுன்னத் செய்யும் வழக்கத்தை அவர் ஆதரித்தார். இசுலாமியர்களுக்கான மசூதியில் அவர் வாழ்ந்தார். இந்துக்களைப் போல் துனிஎனும் அகண்ட நெருப்பை எப்போதும் மசூதியில் வைத்திருந்தார்.

                              மேலும் இசுலாமிய சமயத்திற்கு விரோதமான மூன்று வழக்கங்களைக் கடைப்பிடித்தார். அதாவது திருகையில் அரைப்பது, சங்கு ஊதுவது, மணியடிப்பது. இதுபோல் நெருப்பில் ஆகுதி செய்தல், பஜனை, தண்ணீரால் சாயிபாபாவின் பாதத்தைக் கழுவி வழிபாடு செய்தல் போன்றவையும் அனுமதிக்கப்பட்டன. 


                              சாயிபாபாவின் அற்புதங்களைக் கண்ட, இந்து சமயத்தில் அதிகமான பற்றுடையவர்கள் (பிராமணர்கள், வேத சாத்திரங்கள் கற்ற அறிஞர்கள்) பலர் சாயிபாபா முன்பு தங்கள் வைதீக முறைகளை விட்டுவிட்டு, அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினர். சாயிபாபா தன்னிடம் அருளாசி பெற வருபவர்களிடமிருந்து தட்சிணையைப் பெற்றார். தட்சிணை மூலம் பெறப்பட்ட பணத்தில் பெரும்பகுதியை தர்மத்திற்கும், மீதமுள்ள தொகையை விறகு வாங்குவதற்கும் செலவழித்தார். அவர் விறகை எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருக்கும் துனிஎனும் புனித நெருப்பில் போட்டு வந்தார். இந்நெருப்பிலிருந்து வரும் சாம்பல் உதிஎன்று அழைக்கப்பட்டது. அவரைக் காணவரும் பக்தர்கள் சீரடியை விட்டுச் செல்லும் போது உதி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

                              இந்த உதியின் மூலம் சாயிபாபா எதைத் தெரிவித்தார்? இவ்வுலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் நிலையற்றது. பஞ்சபூதங்களால் அமைக்கப்பட்ட நம் உடல் அனைத்து இன்பங்களையும் அடைந்த பின்னர் இறுதியில் சாம்பலாக்கப்படும். இந்த உடல் சாம்பலாகப் போகும் உண்மையைத் தன் பக்தர்களுக்கு உணர்த்தவே அவர் உதியை வழங்கினார். பிரம்மம்ஒன்றே உண்மையானது. பிரபஞ்சம் எனப்படும் இவ்வுலகம் நிலையற்றது என்றும், தாய், தந்தை, மக்கள் என நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகள் அனைத்தும் உண்மையில் நம்முடையது அல்ல. இவ்வுலகிற்குத் தனியாக வந்த நாம், தனியாக இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

(தொடரும்)
நன்றி:  தினத்தந்தி – ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில் வெளியான தொடரின் ஐந்தாம் மகான்

சாயி பிரேரணா – பாகம் 11

சாயி பிரேரணா – பாகம் 11

(Translated into Tamil by Santhipriya)

நான் பேசிய ஒவ்வொரு சொல்லையும், உலகத்துக்கு எடுத்துரைத்தால் என்னுடைய வார்த்தைகள் உனக்கு மன அமைதி தரும்
நீ மனதார , இதயபூர்வமான சிரத்தையுடன் என்னை வணங்கி வந்தால், உனக்கு ஆன்மீக சந்தானத்தை தருவேன்
கங்கை நதிபோன்ற என்னைப் பற்றிய நினைவில் மூழ்கினால், இந்த உலகின் சம்சாரக் கடலில் இருந்து உன்னை கரை ஏற்றுவேன்
குரு மந்திரத்தை என்னுடைய புனித இடத்தில் ஓதி வந்தால், ஒவ்வொரு மந்திரத்திலும் குருவைக் காண முடியும்
நீ கண் உறங்காமல் சீரடியில் என்னை இரவு முழுவதும் பூஜித்தால், அதன் பயனை உனக்கு நான் உணர்த்துவேன்
என் முன் அமர்ந்துகொண்டு உன் துயரத்தைக் கூறினால், உன்னுடைய அனைத்து துயரத்தையும் ஆனந்தமயம் ஆனதாக மாற்றுவேன்
எனக்கு ஒரு மாலை ரோஜாவை அணிவித்தால், உன் வாழ்க்கையை மணமுள்ளதாக மாற்றுவேன்
என்னுடைய புனித இடத்தில் வந்து தீபம் ஏற்றினால், உன் வாழ்விலும் ஒளியை ஏற்றுவேன்
என்னுடைய அனைத்து பக்தர்களுக்கும் நீ பிரசாதம் தந்தால், உன்னை நல்லொழுக்கம் உள்ளவனாக்குவேன்
என்னுடைய புனிதக் கட்டைவிரலை நீ துதித்தால், குருபூர்ணிமா என்ற புனித பண்டிகையின் பலனைத் தருவேன்
என் முன் நின்று ஓம் என்ற மந்திரத்தைக் கூறினால், இந்த உலகின் அனைத்து ஆனந்தத்தையும் உனக்கு நான் தருவேன்

சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் – பாகம் 5


சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் –  பாகம் 5
தேனி. எம். சுப்பிரமணி

(முதல் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
(இரண்டாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(மூன்றாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(நான்காம் பகுதியினை படிக்காதவர்கள் இங்குசொடுக்கவும்)
          பாபா சீரடியில் கோதுமை மாவை அரைத்த நிகழ்வு சாதாரணமானதாக இருந்தாலும் அது மிகப்பெரும் தத்துவத்தை உணர்த்துகிறது. அவர் கோதுமையை அரைக்கவில்லை, பாவங்கள், உள்ளம், உடல் போன்றவற்றின் துன்பங்களையும், தன் அடியவர்களின் தொல்லைகளையும் அரைத்துத் தீர்த்தார். கர்மம், பக்தி என்ற இரு கற்கள் அவர் திருகையில் இருந்தது. இதில் கர்மம் கீழ் கல்லாகும். பக்தி மேல் கல்லாகும். திருகையின் கைப்பிடி ஞானமாகும். சத்துவ, ராஜச, தாமச எனும் மூன்று குணங்களைச் சேர்ந்த நமது எல்லா உணர்ச்சிகள், ஆசைகள், பாவங்கள், அகங்காரம் போன்றவைகளைத் துகள்களாக்கி முன்னோடி வேலையாக அரைக்கப்பட்டாலன்றி ஞானம் அல்லது தன்னை உணர்தல் என்பது முடியாதென்பதே பாபாவின் கருத்தாகும்.
                     ஒருநாள் சீரடியில் பலத்த மழையும், காற்றும் சேர்ந்து அடித்தது. பாபாவின் மேல் பற்று கொண்ட மகல்சபாதிக்கு தூக்கம் வரவில்லை. பாபா எப்படி இருக்கிறாரோ என்ற கவலை அவருக்கு ஏற்பட்டது. அவர் கொட்டும் மழையில் நனைந்தவாறு பாபா அமர்ந்திருக்கும் வேப்ப மரத்தடிக்கு வந்தார். 
         அங்கு பாபாவின் உடல் மணலாலும், இலைகளாலும் மூடியிருந்தது. இதைக் கண்டு பதறிப்போன மகல்சபாதி பாபாவின் உடலை மூடியிருந்த மணல் மற்றும் இலைகளை அகற்றினார். அங்கு பாபா நடந்த எதுவும் தெரியாமல் தியானத்தில் இருந்தார். பாபாவை நிஷ்டையில் இருந்து எழுப்பினார். இதைப் பார்க்க மக்கள் அங்கு கூடிவிட்டனர். 
                        பாபா, நீங்கள் கொட்டும் மழையில் இந்த வேப்பமரத்தின் அடியில் இருப்பதற்குப் பதிலாக அருகிலுள்ள மசூதியில் கூட தங்கியிருக்கலாமே…?” என்றார்.

                             உடனே பாபா, “எனக்கு எல்லாம் இடமும் ஒன்றுதான். எனக்கு என்று தனி இடம் எதுவும் தேவையில்லைஎன்று மறுத்தார்.

                          நீங்கள் இப்படிச் சொன்னால், நாங்களும் எங்கள் வீட்டிற்குச் செல்லாமல் உங்களுடனே இருக்கிறோம்.என்று அவர்கள் சேர்ந்து சொன்னார்கள். அவர்களின் அன்பிற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பாபா மசூதியில் தங்க சம்மதித்தார்.
          மசூதியில் தங்கியிருந்த சாயிபாபா இளம் பருவத்தில் தம் தலைமுடியை வளர்த்து வந்தாலும் அதை வெட்டி ஒழுங்கு படுத்திக் கொள்வதில்லை. தன் உடலைப் பற்றிய பாதுகாப்பிலும் அதிக ஆர்வம் காட்டிக் கொள்வதுமில்லை. ஆனால், அவர் தங்கியிருந்த இடத்தினருகில் மலர்த் தோட்டம் ஒன்றை உருவாக்க விரும்பினார். இதற்காகச் சில மலர்ச் செடிகளை நட்டு வளர்க்கத் தொடங்கினார். அந்தச் செடிகளுக்குத் தேவையான தண்ணீர் கொண்டு வருவதற்காக வாமன் தத்யா என்பவரிடம் இரண்டு மண்பானைகளை இலவசமாகப் பெற்றார். கிணற்றிலிருந்து நீர் இரைத்து, மண் பானைகளில் ஊற்றி அவரே சுமந்து கொண்டு வந்து ஊற்றி மலர்ச் செடிகளைப் பாதுகாப்பாய் வளர்த்து வந்தார். 

                          மண்பானைகளை அவர் தங்கியிருந்த வேப்பமரத்தடியில் வைத்திருப்பார். அந்த மண்பானைகள் நெருப்பில் சுடாத பானைகள் என்பதால் அது மறுநாள் பயன்படுத்த முடியாதபடி உடைந்து போய்விடும். இப்படியே தத்யா மூன்று ஆண்டுகளுக்கு தினமும் சுடப்படாத மண்பானைகளைக் கொடுத்து வந்தார். பாபா, சுடப்படாத மண் பானைகளில் நீர் கொண்டு வந்து அந்த இடத்தை அழகியப் பூந்தோட்டமாக உருவாக்கினார். அந்த இடத்தில்தான் தற்போது பாபா சமாதி மந்திர்உள்ளது.

                         சாயிபாபா பொதுவாக மக்களுடன் கலந்து பேசுவதில்லை. அவரிடம் யாராவது கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்வார். பகற்பொழுதில் வேப்பமரத்தடியில்தான் அமர்ந்திருப்பார். சில சமயம், கிராம எல்லையிலுள்ள வாய்க்கால் அருகிலிருக்கும் ஆலமரத்தடிக்குச் சென்று அமர்ந்திருப்பார். மாலை நேரங்களில் குறிக்கோளின்றி நடந்து செல்வார். 

                         பாபா பகற்பொழுதில் அவருடைய பக்தர்களால் சூழப்பட்டிருந்தார். இரவில் உதிர்ந்து கொட்டும் மசூதியில் படுத்திருந்தார். இந்த சமயத்தில் பாபாவிடம், ஹூக்கா, புகையிலை, ஒரு தகர டப்பா, நீண்ட கஃப்னி, தலையைச் சுற்றி ஒரு துண்டு துணி, ஒரு குச்சி போன்ற சிறு சிறு உடமைகள் மட்டுமே இருந்தன. தலையிலுள்ள அச்சிறு துணி நன்கு முறுக்கப்பட்ட முடியைப் போல் இடது காதிலிருந்து முதுகில் தொங்கியது. இத்துணி பல வாரங்களாகத் துவைக்கப்படாமல் இருக்கும். காலணி எதுவும் அவர் அணிவதில்லை. பெரும்பான்மையான நாட்கள் சாக்குத் துணி துண்டே அவருடைய ஆசனமாகும். ஒரு கௌபீனத்தை (கோவணத்தை) அணிந்திருந்தார். குளிரை விரட்டுவதற்காக புனித நெருப்பின் முன்னால் இடதுகையை மரக்கட்டைப் பிடியின் மேல் வைத்தபடி தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். எப்போதும் கடவுளே ஒரே உரிமையாளர்எனும் பொருளில் அல்லா மாலிக்என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

                                பாபாசாஹேப் என்பவரின் தம்பி நானாசாஹேப் என்பவருக்கு இரண்டாவது திருமணம் முடிந்தும் குழந்தைகள் எதுவுமில்லை. இதனால் பாபாசாஹேப், தன் தம்பி நானாசாஹேப்பை பாபாவிடம் ஆசி பெற்று வரும்படி அனுப்பினார். பாபாவிடம் அவர் ஆசி பெற்றுச் சென்ற ஒரு வருடத்திற்குள் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனால் பாபாவின் சக்தி பற்றிய செய்தி அஹமத் நகர் வரை பரவியது. அதன் பிறகு சாயிபாபாவைப் பார்க்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 
(தொடரும்)
நன்றி:  தினத்தந்தி – ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில் வெளியான தொடரின் ஐந்தாம் மகான்