இதை அனுபவி..மற்றவை சரியாகும்!

புகழ் பெற்ற வக்கீலான கபர்தே கஷ்ட காலத்தில் பாபாவிடம் தஞ்சமடைந்தார். அறிவாளியான அவர் வாயைத்திறந்துகூட பேச மாட்டார். பாபா முன் மவுனம் சாதிப்பார். அவரிடம் பாபா சொன்னார்: கடவுள் உனக்கு கொடுத்ததை வைத்து மனநிறைவுடன் இரு. உனக்கு கிடைக்காதவற்றுக்காக ஏங்காதே.

இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் இரண்டுமே கடவுளின் கொடை என நினைத்து, சாட்சியாக அனுபவி. அதில் சிக்கிக் கொண்டவனாக அல்ல, தூரத்திலிருந்து அதை காண்பவன் போல அனுபவிக்கவேண்டும்.

இதேபோல பாராட்டோ, இகழ்ச்சியோ, நிந்தனை செய்யப்படுவதோ, அவமதிக்கப்படுவதோ எது வாக இருந்தாலும் அது கடவுளால் வருவதாக நினைத்துச் செயல்படு” என்றார்.

கஷ்டத்தை அனுபவமாக மாற்றிக் கொள்ள வேண்டும்; மகிழ்ச்சியை அளவீடாக வைத்துக்கொள்ளவேண்டும். நிந்தனை செய்யப்படும் போது யோசி, புகழப்படும் போது எச்சரிக்கையாக இரு. இதைச் செய்தால் வெற்றி பெறலாம்.

இளம் வயதில் அப்படியாக வேண்டும், இப்படியாகவேண்டும் என்று துடிக்கிறவர்கள் பிற்காலத்தில் போராட்டமான வாழ்க்கையை வாழ்வதைப்பார்க்கிறோம். அவர்கள் துடிப்பு, ஆசை, லட்சியங்கள் என்ன ஆனது? ஏன் அவர்களால் வெற்றிபெறுவது இயலாமல் போனது-.

லட்சியம், ஆசை, துடிப்பு இருந்தால் மட்டும் போதாது, செயல்பட வேண்டும். விதைக்கிற காலத்தில் சோம்பேறியாகப் படுத்திருப்பவன் அறுவடைக் காலத்தில் அரிவாளைக் கொண்டு போனால் என்ன கிடைக்கும்?

செயல்படுகிற எல்லோரும் வெற்றி பெற்று விடுகிறார்களா? ஏன் அப்படியாகிறது? அதற்கு இறைவனின் கருணை வேண்டும். அவன் நினைத்தால் ஒருவன் பணக்காரனாகிறான். பணக்காரன் ஏழையாகிறான். என்னைப் பற்றி அவன் ஏன் நினைக்கவே இல்லை? என யோசிக்கலாமே-

கடவுள் கொடுக்க நினைக்கிறார், கர்மா தடுத்து  விடுகிறது. கர்ம வினையைக் கரைக்க கடவுள் காட்டும் வழிகளில் முக்கியமானவை இரண்டு: நாம ஜெபம், அன்னதானம். இந்த இரண்டையும் செய், பலன் தானாகக் கிடைக்கும்.

கூன் விழுந்து தடியை ஊன்றிய படி வயதான ஒரு கிழவி நடந்ததைப் பார்த்த இளம் பெண் கேட்டாள்: “ஏ, பாட்டி! ஏதாவது விழுந்துவிட்டதா? அல்லது எதையாவது தொலைத்துவிட்டாயா?” என்று.

பாட்டி சொன்னாள்: “வைரத்தைவிட விலை மதிப்பு மிக்க எனது இளமையைத் தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று.

இளமையின் முக்கியத்துவத்தை இளைஞரை விட முதியவர்கள்தான் நன்கறிவார்கள். ஆகவே அவர்கள் இளைஞர்களுக்கு அறிவுரை கூற முற்படுகிறார்கள். அதை ஏற்றுக் கொண்டு நடப்பதுதான் அறிவுடைமை.

குழந்தாய், எதையும் வாங்க முடியாத பிச்சைக்காரன் ஆடம்பரமின்றி வாழ்வதிலும், ஊனமுற்ற ஒருவன் பணிவோடு நடப்பதிலும், கிழவி கற்புள்ள கன்னியாக இருப்பதாலும் என்ன பயன்?

பணமிருந்தும் ஆடம்பரமின்றி வாழவேண்டும். கைகால்கள் திடகாத்திரமாக இருந்தும் பணிவுடன் வாழவேண்டும். இளமையிலும் கற்புத் திறனை காக்கவேண்டும். அதில்தானே உயர்வு உண்டு.

இதுவரை உனது பெற்றோர் உனக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நீ உன் வாழ்வை தேடிக்கொள்ள இன்னும் கொஞ்ச காலம்தான் உள்ளது. ஆகவே, அதுவரை அவர்களுக்காகவாழ இந்த நேரத்தைச் செலவிடு. அவர்கள் மனம் மகிழ்ச்சியடையும் மார்க்கத்தைத் தேடு. அவர்களுடன் நிறைய நேரத்தைச் செலவிட ஓய்வான இந்த நேரத்தைப் பயன்படுத்து.

வேலை, வாழ்க்கை, வழி போன்ற எல்லாம் இறைவன் கையில் இருக்கிறது. திறமை இருந்தும் பாழாய் போகிறதே என பயப்படாதே! சரியான நேரத்தில் சரியான விதத்தில் இதைசாயி பயன்படுத்தும் வாய்ப்பைத் தருவார். எல்லாம் கடவுள் செயல் என அமைதியாய்இரு.. மன இறுக்கத்தை மனதில் இருந்து விரட்டு. இப்போதுள்ள சூழ்நிலையை அனுபவி. மற்றவை சரியாகும்.

Advertisements

உன்னிடம் கடன் வாங்கியவர் தாமாக வந்து தருவார்

பாபாவின் பக்தர் ஜோக், அவுரங்காபாத்தில் வாழ்ந்தவர். ஒருவருக்கு 1400 ரூபாய் கடன் கொடுத்திருந்தார். நீண்ட நாட்களாகியும் கடன் திரும்பவரவில்லை. கொடுத்த கடனை திரும்பக் கேட்டுச் செல்ல நினைத்தார். இதை அறிந்த சாயி பாபா, “கடனை வசூலிக்க நீ செல்லவேண்டாம்; கடன் வாங்கியவரே இங்கே தாமாக வருவார்” என்றார்.

“நேரில் போய்க்கேட்டும் தராதவன், தானாக எப்படி வந்து தருவான்?” என ஜோக் பாபாவிடம் கேட்டார்.

“உன் பணம் எங்கே போய்விடும்? போய் வீட்டில் அமைதியாக இரு, தாமாகத் திரும்பவரும்” என்றார் பாபா.

ஜோக் வருத்தத்துடன், “நான் மூவாயிரம் ரூபாயை இழக்கவேண்டும் என்கிறீர்களா?” என்று கூறிவிட்டு, பணமில்லாமல் நாளை முதல் நான் எப்படி வழிபாடு, ஆரத்தி, பூஜை போன்றவற்றை செய்வது? பணம் இல்லாமல் எப்படி வாழ்வது? நான் நேரில் சென்றாலே தராதவன், தானாக எப்படி வருவான்? ஒரு வழக்குத் தொடுத்தாலன்றி அவன் வழிக்கு வரமாட்டான்” என்றார்.

“சரி, இப்போதைக்கு அந்த விஷயத்தை மறந்துவிடு” என்றார் பாபா. ஜோக் அதைப்பற்றி பேசவில்லை.

சில நாட்கள் சென்றதும், கடன் வாங்கியவர் வந்து ஜோக்கிடம் தான் முதலை மட்டும் தந்து விடுவதாகவும், வட்டியைத் தர இயலாது என்றும் கூறினார். வட்டியையும் சேர்த்துத் தந்தால்தான் வாங்குவேன் என்றார் ஜோக்.

“அவசியம் இருந்தால் ஒழிய வட்டி வாங்கவேண்டாம். அதனால் அனைத்துப் பலன்களும் போய் விடும்” என்றார் பாபா.

பிரார்த்தனைக்கு வருவோரில் பலர், “கணவருக்கு தெரியாமல் கடன் வாங்கிக் கொடுத்தேன். வாங்கியவர் ஏமாற்றி விட்டார்” என்றோ, எனது மனைவிக்குத் தெரியாமல் கொடுத்தேன், ஏமாற்றிவிட்டார்” என்றோ, எங்களிடம் வாங்கியவர் ஏமாற்றிவிட்டார்” என்றோ கூறுவார்கள்.

அவர்களிடம், “பொறுமையாக இருங்கள், பணத்தை அவர் ஏமாற்றவில்லை, பாபா வாங்கி வைத்திருக்கிறார். உரிய நேரத்தில் தந்துவிடுவார்”  என்று கூறி அனுப்புவேன்.

எனக்கே இந்த மாதிரி இழப்புகள் நிறைய ஏற்பட்டுள்ளன. பாபாவின் பணம் சுமார் பதினோறு லட்ச ரூபாய் இப்படி வெளியே இருக்கிறது. என்னை ஏமாற்றவேண்டும் என்றோ, என் மூலம் பிறரை ஏமாற்ற வேண்டும் என்றோ கணக்குப்போட்டு வேலை பார்த்தவர், கையிருப்புகளைத் தொலைத்துவிட்டு கடன்காரனாகச் சுற்றுவதை பாபா காட்டுவார்.

என்னிடம் சொல்வார்: “உனக்கு கையிருப்பு, சேமிப்பு, எதிர்காலத் திட்டம் இவையெல்லாம் வேண்டா. கடந்த காலத்தில் ஏற்பட்டவைகளை நினைத்து என் மீது பாரத்தை வை. நானே உன் நிகழ்காலத்தை கவனிக்கிறேன், எதிர்காலத்தைபொறுப்பு எடுத்துக்கொள்கிறேன். வருவாய்இல்லாதது போலிருந்தாலும் பத்திரிகையைத்தொடர்ந்து நடத்த உதவுகிறேன். இதைத் தாண்டி உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்பார்.

அதேபோல, “உன்னிடம் பெற்றவர் திரும்பத்தராதவரையில் அவருடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை வைத்துக்கொண்டே இருப்பேன்” என்றும் கூறுவார். இதனால்தான் உண்டியல்பணத்தை கூட கோயில் செலவு போக, மீதியை கீரப் பாக்கத்திற்காக செலவிட்டு வருகிறேன்.

என்னை ஒழிப்பதாக நினைத்துக் கொண்டு அவதூறு பரப்பி, அதன் மூலம் ஒருசிலரை எனக்கு எதிராகச் செய்தவர்கள் கூட எந்த ஒரு பலனையும் அனுபவிக்க முடியாதபடி பாபா பார்த்துக்கொள்கிறார். எனக்குச் செய்த அதேபாபா உங்களுக்கும் செய்வார், பொறுமையோடுகாத்திருங்கள்.

உனக்கு வந்த சோதனைதான் சாதனையாக மாறப்போகிறது!

நான் பாபாவை எனக்கு தெரிந்த அளவில் நன்றாகத்தான் வணங்குகிறேன், ஆனால் அவர் எனக்கு மட்டும் சோதனையைத்தான் தருகிறார். இது ஏன் எனத் தெரியாமல் பாபாவினை வணங்கும் பல பக்தர்கள் தவிக்கிறார்கள்.  சோதனைகள் என்பவை ஆளாளுக்கு ஏற்றாற்போலத்தான் வரும். ஆன்மிக வாழ்க்கையில் நுழைய வேண்டும் என்று இருக்கிறவர்களுக்கு உலக வாழ்க்கையில் விரக்தி ஏற்படவேண்டும் என்பதற்காக சோதனை வரும்.

அவர்கள் எதை சாதிக்க விரும்புகிறார்களோ அந்த சாதனையை வெற்றியாக்க சோதனைகள் தரப்படும். சுகத்திற்குப் பிறகு துக்கம் வரும் என்பதை புரியாதவர்கள்தான் சுகம் வந்தபோது அதை இன்முகத்தோடு ஏற்று களிக்கிறார்கள். துக்கம் வந்ததும் தாளாமல் அழுகிறார்கள்.  துக்கத்திற்குப் பிறகு வருகிற சுகம் கடைசி வரை நிலைத்து நீடிக்கும். அதை தக்க வைத்துக் கொள்ளும் படிப்பினையைத் தருவதற்காக பாபா தன் பக்தனுக்குத் சோதனைகளைத் தருகிறார்.

நமக்கு வர வேண்டியவைகளை வரவேற்றாலும், அல்லது முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், நடப்பது நடந்தே தீரும். அதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை கற்றுத் தருவதே சோதனையின் நோக்கம். சோதனைகள் நம்மை திடப்படுத்த வருகின்றன என்பதை உணர்ந்திட வேண்டும். உதாரணக் கதை ஒன்று கூறுகிறேன் கேளுங்கள்:

ஒரு திருடன் தனது மகனுக்குத் திருட்டுத்தொழிலைக் கற்பிக்க விரும்பினான். மகனுடன் சேர்ந்து ஒரு சேட்டுக் கடையில் நகையைக் கொள்ளையடிப்பது என முடிவு செய்து அந்தக் கடைக்குச் சென்று சத்தமே வெளியில் கேட்காதவாறு சுவரில் ஓட்டை போட்டார்கள்.

பையன் சொன்னான்: “அப்பா நான் போய் திருடிவருகிறேன்” என்று. மகனை ஆசீர்வதித்து விட்டு வெளியே காவலுக்கு நின்றான் அப்பா. பையன் திருடியதை மூட்டை கட்டுவதற்குள் அப்பா திடீரென ’திருடன், திருடன்’ என சத்தம் போட்டான். இதைக் கேட்டு திகைத்த பையன் திருட்டு மூட்டையுடன் பக்கத்திலிருந்த ஒரு பெரிய பெட்டியில் படுத்துக்கொண்டான்.

சத்தம் கேட்டு கதவைத் திறந்து உள்ளே வந்த உரிமையாளர், அந்தப் பெட்டியின் மீது  அமர்ந்து கொண்டான். இனி தப்பிக்க முடியாது என்பது தெரிந்து போன நிலையில் பையன் பெட்டிக்குள்ளிருந்து எலி வருடுவதுபோல பெட்டியை வருடினான். பெட்டியின் உள்ளே எலி இருப்பதாக நினைத்து உரிமையாளன் பெட்டியைத் திறந்தபோது, அந்த பையன் சர்ரென எழுந்து பொருளோடு தப்பி ஓடினான். உரிமையாளர் திகைத்தான்.

நேராக வீட்டுக்கு வந்தான் பையன். அங்கே ஓய்வாக இருந்த அப்பாவிடம், “ஏம்பா என்னை காட்டிக்கொடுத்துட்டு ஓடி வந்துட்டே?” எனக்கேட்டான். “அப்படி செஞ்சதாலதானே நீயா தப்பிக்கிற வழியைக் கண்டுபிடிச்சு தப்பிச்சு வந்தே –  இல்லேன்னா திருடத் தெரிந்த உனக்கு தப்பிக்கும் வழி தெரியாமல் போயிருக்குமே!” என்று பதில் சொன்னான் அப்பா.

கதை புரிகிறதா?

ஒரு பிரச்சினையிலிருந்து நீயாகத் தப்பிக்கவே சோதனையை கடவுள் அனுமதிக்கிறார். சோதனை நேரத்தில் சாயி பற்றி சொல்லிக் கொண்டிருப்பவர்களின் சங்கத்தை நாடும்போது, அச்சம், தயக்கம் போன்றவை நீங்கி உபாயம் பிறக்கிறது. இதனால்தான் துன்பம் வரும்போது இறை அடியார்களின் சத்சங்கத்தை நாடுங்கள் என நமது சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

சோதனை என்பது உனக்குக் குழந்தை இன்னும் பிறக்க வழியில்லாமல் கோயில் குளங்களைச் சுற்றுவதாக இருக்கலாம். குழந்தைப் பேற்றுக்காக மருத்துவமனைக்கு அலைந்து லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து இன்னும் பலன் கிடைக்காத நிலையாக இருக்கலாம். தைரியத்தை விடாதே! அவரைப் பற்றிக்கொள், நிச்சயம் பலன் கிடைக்கும்.

சில ஆண்டுகளுக்கு ஏற்பட்ட கடனாக இருக்க லாம்; கடன் தந்தவர் கழுத்தை நெறிக்க என்ன செய்வது எனத் தெரியாமல் விழி பிதுங்கி இருக்கலாம்; பயப்படாதே! அவர் உன்னோடு இருந்து அதை அடைப்பதற்கான வழியைக்காட்ட சோதிக்கிறார் என்பதைப் புரிந்துகொள். பணத்தை பெருக்க இன்னும் தீவிரமாக உழை.  கிடைத்ததை செலவழிக்காமல் சேமித்து வை.

வீடு கட்ட முடியாத நிலையாக இருக்கலாம். அதனால் என்ன? கடன் வாங்கி வீடு கட்டி பிறகு கஷ்டப்படுவதைவிட பொறுமையாக இருந்து கடனே இல்லாமல் வீட்டைக் கட்டி முடிக்க அவர் இந்த சோதனையைத் தருகிறார் என்பதை உணர்ந்து கொள், வாழ்க்கை இனிமையாகும்.

வேலையில் பிரச்சினை என்கிற வடிவில் இந்த சோதனை வருவதாக இருக்கலாம். இந்த வேலைக்காகவா படைக்கப்பட்டாய்? இல்லையே! இதை விட நல்ல வேலையைத் தேடுவதற்கு உன்னை தயார்படுத்திக்கொள். அல்லது இதுவே நல்ல வேலை என்றால், எதற்காக உனக்குப்பிரச்சினை தரப்படுகிறது என்பதை யோசித்து அதற்கு ஏற்ப சமயோசிதமாக நடந்து கொள். விட்டு ஓட வேண்டும் என நினைக்காதே!

ஜெயித்தே ஆகவேண்டும்…

அதற்காகத்தான் இந்த சோதனை. இதிலிருந்து எப்படி மீள்கிறாய் என்று பார்க்க சுவாமி இதை அனுமதித்து இருக்கிறார். நீச்சல் கற்றுத் தரும்போது இடுப்பில் துணியைக் கட்டி விட்டு குழந்தையை தண்ணீரில் இறக்கி விடுவதைப் போலத்தான் பாபா உன்னைப் பிடித்துக்கொண்டு சோதனையில் நடமாட விட்டிருக்கிறார். இதை புரிந்துகொண்டால் நீ ஜெயித்து விடுவாய்.

ஸ்ரீராம ஜெயம் என்றால்?

ram

இலங்கையிலே ராமனுக்கும், ராவணனுக்கும் போர்… அசோகவனத்திலே இருந்த சீதாதேவியின் மனத்திலும் போர்… தன் கணவர் வெற்றிவாகை சூடிவிட்டாரா… தகவல் ஏதுமில்லையே என்று! அப்போது, சீதாதேவி முன்னால் வந்து நின்ற அனுமன், “ஸ்ரீராம ஜெயம்’ என்று ஆர்ப்பரித்தார்.

ராமன் ஜெயித்துவிட்டார் என்பதை ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விட்டார். அதனால்தான், அவர் சொல்லின் செல்வர் ஆனார். பல சந்தர்ப்பங்களில், அவர் தனது சுபமான வார்த்தைகள் மூலம் சீதாராமருக்கு உயிரூட்டி இருக்கிறார்.

“ரா’ என்றால் “அக்னி பீஜம்’. “பீஜம்’ என்றால் “மந்திரம்’. அது அகங்காரத்தை அழிக்கும் தன்மை யுடையது. “மா’ என்றால் “அமிர்த பீஜம்’. அது மனதில் அன்பை நிறைக்கிறது. அகங்காரத்தை நீக்கி, மனதில் அன்பை நிறைப்பதே ராமநாமம்.

“ராம’ என்று சொன்னால் ஒரு செயலில் வெற்றி கிடைத்து விடும். அதனால் தான் “ராம’வுடன் “ஜெயம்’ (வெற்றி) சேர்க்கப்பட்டது. அனுமனின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா? அவர் 33 கோடி தடவை “ராம’ நாமம் சொல்லியிருக்கிறார்.

அதிலும், பலனை எதிர்பாராமல் அந்த நாமத்தைச் சொன்னதால், இன்றும் நம்மோடு வாழும் சிரஞ்சீவியாக இருக்கிறார். ராமபாணம் எதிரிகளை வீழ்த்தும். “ஸ்ரீராம ஜெயம்’ எதிரிகளை நம் அருகிலேயே வரவிடாமல் தடுத்துவிடும். வடஇந்தியாவில் உள்ள பக்தர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என அனுஸந்திப்பதை மூச்சுக்காற்றாகக்கொண்டுள்ளனர்….

ஸ்ரீராம ஜெயம்! ஸ்ரீராம ஜெயம்! ஸ்ரீராம ஜெயம்🙏🏻🌷

கீரப்பாக்கம் பாபா ஆலயம்

Tamil-Daily-News-Paper_80376398564_zps15f1b7122017 அக்டோபரில் கீரப்பாக்கம் பாபா ஆலயக் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், கோயில் திருப்பணிகள் வேகமாக நடைபெறத்துவங்கியுள்ளன.

பக்தர்கள் ஆலயத்திருப்பணிகளுக்கு உதவி செய்ய நினைத்தால் ஆலயப்பணிகளை நேரில் பார்வையிட்ட பிறகு கூட உதவலாம்.

பக்தர்கள் அவர்களது விருப்பத்திற்க்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு கைங்கர்யத்தை எடுத்து செய்யலாம், பொருட்களாகவும் அளிக்கலாம்.

ஸ்ரீ சாய் மிஷன் ஆலய கட்டுமான பணிகளைச் செய்வதால், நேரில் வர இயலாதவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் தங்களது கைங்கர்யத்தை செலுத்திட கேட்டுக்கொள்கிறோம்.

SRI SAI MISSION (REGD), BANDHAN BANK, TAMBARAM BRANCH, CURRENT ACCOUNT No.10170001962463 IFSC CODE: BDBL 0001613.

காசோலை மற்றும் பணவிடை மூலம் கைங்கர்யத்தை அனுப்புவோர் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.

SRI SAI MISSION (REGD), 3E/A, 2ND STREET, BUDDHAR NAGAR, NEW PERUNGALATHUR, CHENNAI – 600063.

மேலதிகத்தகவல்கட்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்

98412 03311 மற்றும் 90940 33288

 

நான் எங்கும் இருப்பேன்!

sai18

சிருஷ்டியின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். கிட்டவோ, எட்டவோ ஏழுகடல் தாண்டியோ செல்லுங்கள். எனது பக்தர்களின் மேல் உண்டான எனது பிரேமை எல்லை அறியாதது. ஆகவே, கவலையின்றி எங்கும் செல்லுங்கள். நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களுக்கு முன்பாகவே சென்று, நான் அங்கு இருப்பேன்.

ஷீரடி சாய்பாபா.