ஸ்ரீராம ஜெயம் என்றால்?

ram

இலங்கையிலே ராமனுக்கும், ராவணனுக்கும் போர்… அசோகவனத்திலே இருந்த சீதாதேவியின் மனத்திலும் போர்… தன் கணவர் வெற்றிவாகை சூடிவிட்டாரா… தகவல் ஏதுமில்லையே என்று! அப்போது, சீதாதேவி முன்னால் வந்து நின்ற அனுமன், “ஸ்ரீராம ஜெயம்’ என்று ஆர்ப்பரித்தார்.

ராமன் ஜெயித்துவிட்டார் என்பதை ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விட்டார். அதனால்தான், அவர் சொல்லின் செல்வர் ஆனார். பல சந்தர்ப்பங்களில், அவர் தனது சுபமான வார்த்தைகள் மூலம் சீதாராமருக்கு உயிரூட்டி இருக்கிறார்.

“ரா’ என்றால் “அக்னி பீஜம்’. “பீஜம்’ என்றால் “மந்திரம்’. அது அகங்காரத்தை அழிக்கும் தன்மை யுடையது. “மா’ என்றால் “அமிர்த பீஜம்’. அது மனதில் அன்பை நிறைக்கிறது. அகங்காரத்தை நீக்கி, மனதில் அன்பை நிறைப்பதே ராமநாமம்.

“ராம’ என்று சொன்னால் ஒரு செயலில் வெற்றி கிடைத்து விடும். அதனால் தான் “ராம’வுடன் “ஜெயம்’ (வெற்றி) சேர்க்கப்பட்டது. அனுமனின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா? அவர் 33 கோடி தடவை “ராம’ நாமம் சொல்லியிருக்கிறார்.

அதிலும், பலனை எதிர்பாராமல் அந்த நாமத்தைச் சொன்னதால், இன்றும் நம்மோடு வாழும் சிரஞ்சீவியாக இருக்கிறார். ராமபாணம் எதிரிகளை வீழ்த்தும். “ஸ்ரீராம ஜெயம்’ எதிரிகளை நம் அருகிலேயே வரவிடாமல் தடுத்துவிடும். வடஇந்தியாவில் உள்ள பக்தர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என அனுஸந்திப்பதை மூச்சுக்காற்றாகக்கொண்டுள்ளனர்….

ஸ்ரீராம ஜெயம்! ஸ்ரீராம ஜெயம்! ஸ்ரீராம ஜெயம்🙏🏻🌷

கீரப்பாக்கம் பாபா ஆலயம்

Tamil-Daily-News-Paper_80376398564_zps15f1b7122017 அக்டோபரில் கீரப்பாக்கம் பாபா ஆலயக் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், கோயில் திருப்பணிகள் வேகமாக நடைபெறத்துவங்கியுள்ளன.

பக்தர்கள் ஆலயத்திருப்பணிகளுக்கு உதவி செய்ய நினைத்தால் ஆலயப்பணிகளை நேரில் பார்வையிட்ட பிறகு கூட உதவலாம்.

பக்தர்கள் அவர்களது விருப்பத்திற்க்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு கைங்கர்யத்தை எடுத்து செய்யலாம், பொருட்களாகவும் அளிக்கலாம்.

ஸ்ரீ சாய் மிஷன் ஆலய கட்டுமான பணிகளைச் செய்வதால், நேரில் வர இயலாதவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் தங்களது கைங்கர்யத்தை செலுத்திட கேட்டுக்கொள்கிறோம்.

SRI SAI MISSION (REGD), BANDHAN BANK, TAMBARAM BRANCH, CURRENT ACCOUNT No.10170001962463 IFSC CODE: BDBL 0001613.

காசோலை மற்றும் பணவிடை மூலம் கைங்கர்யத்தை அனுப்புவோர் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.

SRI SAI MISSION (REGD), 3E/A, 2ND STREET, BUDDHAR NAGAR, NEW PERUNGALATHUR, CHENNAI – 600063.

மேலதிகத்தகவல்கட்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்

98412 03311 மற்றும் 90940 33288

 

நான் எங்கும் இருப்பேன்!

sai18

சிருஷ்டியின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். கிட்டவோ, எட்டவோ ஏழுகடல் தாண்டியோ செல்லுங்கள். எனது பக்தர்களின் மேல் உண்டான எனது பிரேமை எல்லை அறியாதது. ஆகவே, கவலையின்றி எங்கும் செல்லுங்கள். நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களுக்கு முன்பாகவே சென்று, நான் அங்கு இருப்பேன்.

ஷீரடி சாய்பாபா.

பாபாவின் பாதம் பணிவோம்!

22061707

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில், மகிழ்ச்சியையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திய பாபா, இப்போதும் கற்பனைக்கு எட்டாத, நினைத்துப் பார்க்க முடியாத அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அவரை நம்பி, அவர் பாதங்களை இறுகப்பற்றி கொண்ட ஒவ்வொரு வரும், இந்த பிறவியை இன்னலின்றி கடப்பது உறுதி.

அவரது நாமத்தை தினமும் உச்சரிப்பவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். “ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய, ஜெய சாய்” என்ற மூல மந்திரத்தை சொல்பவர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் நிச்சயம் பெறுவார்கள். ஆனால் பாபாவிடம் மாசு மருவற்ற மனதை நாம் ஒப்படைக்க வேண்டும். எத்தனையோ லட்சம் பேர் அந்த பாக்கியத்தைப் பெற்றுள்ளனர்.

பாபாவை அவர்கள் கண்கண்ட தெய்வமாக பார்க்கிறார்கள். அவர்கள் வாழ்வில் பாபா இரண்டற கலந்துள்ளார். பாபாவுக்கு நைவேத்தியம் படைக்காமல், ஆரத்தி காட்டாமல் நிறைய பேர் தண்ணீர் கூட குடிப்பதில்லை. இவர்கள் பாபாவின் அருள் மழையில் நனைபவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

என்னைப் பார்க்க வாரும்!

25124

ராம் லால் மும்பையில் வசித்துவந்த பஞ்சாபி பிராமணர். பாபாவை பார்த்திராத அவரது கனவில் தோன்றி, என்னைப் பார்க்க வாரும் என அழைத்தார் சாயி பாபா.

அந்தக் கனவு அவர் மனதில் பதிந்தது. தன்னை அழைத்தவர் யார்? எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? அவரது குணம் எப்படி? என்னைப்பார்க்க வாரும் என அழைத்தாரே, எப்படி அவரை தரிசிப்பது என நினைத்தார். அவருக்குப் போக விருப்பம்தான். போகும் இடம்தான் தெரியாது.

பிற்பகல் வேளையில் தெரு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு கடையில் படம் ஒன்றைப் பார்த்துத் திடுக்கிட்டார். கனவில் பார்த்த அதே உருவம். கடைக்காரரிடம் விசாரித்த போது, அது சீரடியில் இருக்கும் சாயி பாபா என்பதை அறிந்து நிம்மதி அடைந்தார். சீரடிக்குப் புறப்பட்டுச்சென்றார். பாபா மகாசமாதி அடையும் வரை அங்கிருந்து, பாபாவுடன் வாழும் பாக்கியம் பெற்றார்.

சீரடிக்குப் பக்கத்தில் ரகாதா என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள குசால் சந்த், சந்த்ரபான் சேட் ஆகியோரை பார்ப்பதற்காக பாபா அந்த ஊருக்கு அவ்வப்போது வருவார். ரகாதா செல்லமுடியாத சூழலில் பாபாவுக்குக்கு சால் சந்தைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது.

தீட்சிதரிடம், “குதிரை வண்டியில் ரகாதாவுக்குச் சென்று குசால் பாவுவை அழைத்து வாரும். அவரை சந்திக்க மனம் ஏங்குகிறது. பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டன. பாபா உங்களை சந்திக்க விரும்புகிறார். ஆகவே, வரச் சொல்கிறார் என்று அவரிடம் சொல்லும்” எனக் கூறி அனுப்பினார்.

மதிய வேளைக்குப் பிறகு தீட்சிதர் இந்தத் தகவலை ரகாதா சென்று குசால் சந்த்திடம் கூறினார். உடனே குசால் சந்த், “இப்போதுதான் தூங்கி எழுந்தேன். எனது கனவிலும் பாபா இதைத்தான் சொன்னார். எனக்கும் அவரை சந்திக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தது. எனது குதிரை வண்டி இல்லாமல் என்ன செய்வது என யோசனையாய் இருந்தேன். இந்த விக்ஷயம் பற்றி இப்போதுதான் என் மகனிடம் கூறி அனுப்பினேன். அவன் கிராம எல்லையைக்கூட தாண்டியிருக்கமாட்டான், நீங்கள் வந்துவிட்டீர்கள்!” என்றார்.

”நீங்கள் வருவதாக இருந்தால் எனது குதிரை வண்டி தயாராக இருக்கிறதுளூளூ என தீட்சிதர் கூறியதும், மகிழ்ச்சியுடன் குசால்சந்த் சீரடிக்கு வந்தார். பாபாவும், குசால்சந்த்தும் ஒருவரை ஒருவர் பார்த்து ஆனந்தப்பட்டார்கள். பாபாவின் லீலையை நினைத்து குசால் சந்த் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். உங்களையும் பாபா கூப்பிடுகிறார், செல்லுங்கள்.

நீ வெற்றி பெறுவாய்!

sai18

தினத்தியானம் 7
நீ வெற்றி பெறுவாய். சோர்வு வேண்டா. தெம்பாகவும், அமைதியாகவும் பரீட்சை எழுது. பாபாவினை முழுமையாக நம்பு என்று சொல்லவும் சத்சரித்திரம் 29:11
நீ வெற்றி பெறுவாய்!
மும்பையின் புறநகர்ப் பகுதியான பாந்த்ரா என்ற நகரத்தில் ரகுநாத் ராவ் தெண்டுல்கர் என்ற சாயி பக்தரும், அவரது மனைவி சாவித்ரி, மகன்கள் அனைவரும் சாயி பக்தர்கள்.
மூத்த மகன் பாபு மருத்துவம் படித்துவந்தான். தேர்ச்சி பெறவேண்டும் என்பது அவனது லட்சியம். ஆனால் ஜோதிடரை அரூகி, தேர்ச்சி பெறுவேனா என்று கேட்டான்.
ஜோதிடர் பாபுவின் ராசி, நட்சத்திரம், கிரகங்கள் அமர்ந்திருந்த இடம் ஆகியவற்றைப் பார்த்து, அடுத்த ஆண்டு தேர்ச்சி பெறுவாய், இந்த ஆண்டு கிரக நிலை சரியில்லை என்று கூறிவிட்டார். சிரமப்பட்டு படித்தது எல்லாம் பயனின்றிப் போய்விடப்போகிறது என்றால், பரீட்சைக்கு அமர்வதில் அர்த்தம் என்ன என்று பாபு மனம் உடைந்தான்.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் பாபுவின் தாயாரான சாவித்ரி, க்ஷPரடிக்கு பாபாவை தரிசிக்க வந்தபோது, பாபாவின் பாதங்களில் தலை வைத்து, ஜோதிடர் சொன்ன விக்ஷயங்களை சொன்னாள்.
இதைக் கேட்டு் “நான் சொல்வதை மட்டுமே அவனை செய்யச் சொல்லுங்கள். ஜாதகத்தை சுருட்டி மூலையில் வைத்துவிட்டு, அமைதியான மனத்துடன் பரீட்சை எழுதச் சொல்லுங்கள். வேறு யார் சொல்வதையும் கேட்க வேண்டாம். ஜாதகத்தை எவரிடமும் காட்ட வேண்டா என்று பையனிடம் சொல்லவும். பையனிடம் நீ வெற்றி பெறுவாய், சோர்வு வேண்டா, அமைதியாகவும் தெம்பாகவும் பரீட்சை எழுது, பாபாவை முழுமையாக நம்பு என்று சொல்லவும்” எனக் கூறி அனுப்பினார்.
பாபாவே சொல்லிவிட்டார் என்ற சந்தோக்ஷத்தில் பையன் தேர்வு எழுதச் சென்றான். கேள்விகள் சுலபமாக இருந்தன. நன்றாக எழுதிவிட்டான். ஆனால் வாய்வழியாக கேட்கப்படும் தேர்வுக்குப்போக மட்டும் பயம். இதனால் தேர்வுக்குப் போகாமல் இருந்துவிட்டான்.
தேர்வு நடத்திய அதிகாரிக்கு பாபு வராமல் போனது ஆச்சரியமாக இருந்தது. பாபுவின் நண்பர் ஒருவரை அழைத்து, பாபு தேர்ச்சி பெற்றுவிட்ட விக்ஷயத்தைச் சொல்லி, வாய் வழி தேர்வுக்கு வராமல் நின்றுவிட்ட தற்கான காரணத்தைக் கேட்டு, அதில் கலந்து கொள்ளுமாறு சொல்லிஅனுப்பினார்.
நண்பர் வந்து சொன்னதும், அதிக சந்தோக்ஷம் அடைந்த பாபு, தாமதிக்காமல் வாய் வழித் தேர்வில் கலந்துகொண்டு, அந்த ஆண்டு வெற்றி பெற்றான்.
ஆகவே, என் அருமை குழந்தையே!
நீ பாபாவின் மீது நம்பிக்கை வைத்து, சந்தேகப்படாமல் தேர்வை எழுது. பாபா வெற்றி தருவார். எழுதிவிட்ட தேர்வு முடிவைப் பற்றி கலக்கப்பட்டுக் கொண்டிருக்காதே. பாபா பார்த்துக்கொள்வார்.
அதற்காகத்தானே அவர் உனது இல்லத்திலும், உள்ளத்திலும் இருக்கிறார். உனது வேலை அடுத்த தேர்வுக்குத் தயாராவது மட்டும்தானே தவிர, பயப்படுவது அல்ல. இந்த சரித்திர வார்த்தைகள் பள்ளிக்கூட தேர்வுக்கு மட்டும்தான் பொருந்தும் என நினைத்துக் கொள்ளாதீர்கள், வாழ்க்கை என்ற பாடத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் சோதனை என்ற பரீட்சைக்கும் பொருந்தும்.
சோதனை வரும்போது மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் எதிர்கொள்ளுங்கள். வருவது வரட்டும் என நினையுங்கள். பாபா பார்த்துக்கொள்வார். அவர் மீது முழுமையான நம்பிக்கையை மட்டும் வையங்கள். அனைத்தும் சுபமாக, சுகமாக முடியும்.
பிரார்த்தனை
சமர்த்த சத்குருவே, தேர்வுக்காகப் படிக்கிற இந்த வேளையில் அனைத்தையும் நினைவில் நிறுத்த, படித்தவை தேர்வில் வந்து, நான் நல்லமுறையில் எழுதி தேர்ச்சி பெற துணையிருக்குமாறு உம்மிடம் வேண்டிக் கொள்கிறோம். அருள் செய்வீராக.