சாயி புத்ரன் பதில்கள்

sai59

பெரும்பாலான மனிதர்கள் இறைவனின் அருளைப்பெற காரணமாக இருப்பது எது?

(வி. நரேஷ், சென்னை – 26)

நம்பிக்கையும், பிரார்த்தனையும்.

13307992-zen-basalt-stones-and-bamboo-on-the-wood

உண்மையான குருவையும் போலி குருவையும் நான் எப்படி அறிந்துகொள்ள முடியும்?

(வி. மணிமேகலை, திருச்சி)

உண்மையான குரு உங்களுக்கு ஏற்ற நேரத்தில் ஏற்றவற்றைக் கூறி காப்பாற்ற வருவார். போலி குரு, உங்களுக்கு ஏற்ற சமயத்தில் தனக்கு ஏற்றதைக்கூறி உங்களிடமிருந்து திருடவருவார். பலனை எதிர்பார்ப்பவர் போலி குரு. எதிர்பாராதவர் மெய்யானகுரு என்பதை அறியலாம்.

Advertisements

மகான்களுக்கான இலக்கணம் என்ன?

Tamil-Daily-News-Paper_80376398564_zps15f1b712

மகான்களுக்கான இலக்கணம் என்ன?

( ஆர். காயத்திரி, கோயமுத்தூர்)

யாரைப் பார்க்க வேண்டும் என மனம் அடிக்கடி ஏங்குகிறதோ, யாரைப் பார்த்ததும் மனம் ஒரு முகப்பட்டு குவிகிறதோ, யாருடைய தரிசனம் கிடைத்த உடனே மனம் கனிந்து கண்களில் நீர் சுரக்கிறதோ அவர் மகான். இறைவன்.

ஒரு மகான் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட மாட்டார். யார் அவரைப் புரிந்துகொண்டவர்களோ அவர்களால் மட்டுமே அறியப்படுவார். யார் அவரை உணர்ந்தவர்களோ அவர்களுக்கே பரவச உணர்வு ஏற்படும். கண்ண பரமாத்மா கடவுள் என பாண்டவர்கள், பீஷ்மர் உட்பட பலர் நம்பினர், அவரை அவ்வாறு நம்பாதவர்களும் இருந்தார்கள்.

இயேசு கிறிஸ்து மகான் என்பதை உள்ளூர் மக்கள் நம்பவில்லை. ஒரு தீர்க்கதரிசி தனது ஊராலும், தனது மக்களாலும் புறக்கணிக்கப் படுவான் என அவர் கூறினார். இறைவனிடம் வேண்டும்போது, இந்த மக்களுக்காக என்னை அனுப்பினீர். ஆனால் அவர்களோ என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்று கூறியிருப்பதை கவனியுங்கள்.

ரமணர் வந்தார். வள்ளலார் வந்தார். அவர்களை அனைவரும் ஏற்றுக்கொண்டர்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இவ்வாறே, பாபாவை பைத்தியக்காரன் என்றும், பக்கிரி என்றும், காசு ஆசைப் பிடித்தவன் என்றும், இன்னும் பலவிதங்களிலும் வசைபாடியவர்கள் அதிகம்.

ஆனால், அத்தகைய மக்களின் விமர்சனங்களைக்கடந்தும் அவர்கள் வாழ்கிறார்கள். இதுதான் மகான்களின் இலக்கணம்.

பரிகாரம்!

naga-thosam

சாயிராம், என் குழந்தை பிறந்த நேரம் சரியில்லாமல் போனதால்தான், என் கணவர் குடும்பம் கஷ்டத்திற்கு ஆளானதாக பேசிக் கொள்கிறார்கள். இதனால் என் மாமியார், நாத்தனார்கள், கணவர் உட்பட குழந்தையை வெறுக்கிறார்கள். இவ்வாறு நடப்பது உண்மையானதுதானா? இதற்குப் பரிகாரம் உண்டா?

(பிரமிளா தேவி, கோயமுத்தூர்)

அந்தக் காலம் தொட்டு இப்படிப்பட்ட நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. ஒரு குடும்பம் நன்றாக இருப்பதும், கெட்டுப் போவதும் பூர்வ புண்ணியங்களின் அளவைப்பொறுத்தே நடக்கின்றன என்று திடமாக நம்புகிறோம்.

அதேபோல, ஒருவர் செய்கிற பாவம் ஏழு தலைமுறைகளை பாதிக்கும் என நம்புகிறோம். உங்கள் கணவர் குடும்பத்தாரில் ஏழு தலை முறையில் யார் இப்படி பாவம் செய்தார்களோ, அந்தப் பாவத்தின் விளைவை உங்கள் கணவர், பிள்ளை வரை அனுபவிக்கிறார்கள். பிறந்த குழந்தைக்கு மட்டும் இதில் பங்கிருப்பதாக சொல்ல முடியாது.

தன்னம்பிக்கை வேண்டும்

எல்லா இதழ்களிலும் சாயி பக்தி, தன்னம்பிக்கை என்று வலியுறுத்திக் கொண்டே இருக்கிறீர்களே, இது உங்களுக்குப் போரடிக்கிற விக்ஷயமாகப் படவில்லையா?
(ஆர். காண்டீபன், சென்னை – 33)
உலகப்பற்றில் உழன்று கிடப்பவனிடம் சிறிது சிறிதாக வைராக்கியத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் அவனுக்கு உலகப் பற்று கொஞ்சம் கொஞ்சமாகத் தணிகிறது. என்று பகவான் ராமகிருஷ்ணர் கூறுவார்.
நான் மீண்டும் மீண்டும் இதை வலியுறுத்தும்போது, பக்தி குறைவானவர்களுக்குக் கூடுதல் தன்னம்பிக்கை ஏற்பட்டு வலிமை ஏற்படுகிறது.

சாயி புத்ரன் பதில்கள்

நல்லவர்களுக்கு சோதனை ஏன்?

நல்லவர்களுக்கு மட்டும் சோதனைக்கு மேல் சோதனை, கஷ்டங்கள் வருவது ஏன்?
( கே.பி. பவித்ரா, விருத்தாச்சலம்)
நல்லவர்கள் கெட்டவர்கள் என யாரையும் பேதம் பார்த்து கஷ்டம் வருவதில்லை. கஷ்டப்படுகிறவர்களுக்கு அனுபவத்திற்காகவும், பிறருக்குப் பாடமாக அமைவதற்காகவும் கஷ்டங்கள் வருகின்றன.
நான் ஒருமுறை, என் வீட்டுச் சுவரை உளி வைத்து உடைத்துக்கொண்டிருந்தேன். உளி மழுங்கிவிட்டது. கொல்லனிடம் கொடுத்து, பழுக்கக் காய்ச்சி கூராக்கி எடுத்து வந்து மீண்டும் உடைத்தேன். உளியின் தலையில் சுத்தியல் பட்டு, அது தலைப் பக்கத்திலும் பிசிறுகள் சிதறின.
அப்போது, அந்த உளி என்னிடம், நீ சுவரை உடைப்பதற்காக என்னை ஏன் இப்படி அடித்து, நெருப்பிலிட்டுக் காய்ச்சி வடித்து, மீண்டும் மீண்டும் அடிக்கிறாய்? நான் தப்பிப் போகாதபடி என்னை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு என் தலையிலேயே அடிக்கிறாயே நீ தலையில் அடிக்கிற வேகத்திற்கு, என் கால்கள் கடினமான காங்க்ரீட் ஜல்லியில் இடி படுகிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் தாங்கமுடியாத அளவுக்கு அடிபடுகிறேன் என்று சொல்வது போல இருந்தது.
என்ன செய்வது? எனக்குத்தேவையில்லாத ஒன்றை நீக்குவதற்காகவே, பெரிய இரும்பாக இருந்த நான் உன்னைத் துண்டாக வெட்டியெடுத்து உளியாக  வடித்தேன். இப்போது உன்னைச்சிரமப் படு;த்தினால்தான் தேவையற்ற ஒன்றை என்னால் நீக்க முடியும் என்பதால் உன்னை அடிக்கிறேன் என்று சொன்னேன்.
மாமல்லபுரத்திற்குச் சென்ற போது, கல்லின் மீது உளியைப் பொருத்தி, சுத்தியலால் ஒருவன் அடித்து அடித்து கல்லை உடைப்பதைப் பார்த்தேன். கல் உடைந்து சிலையாக வேண்டுமானால், உளி அடிபட்டுத்தான் ஆகவேண்டும்.
பிறர் நன்மை பெற வேண்டுமானால் நாம் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
நீண்ட இரும்புக் கம்பியாக இருந்த ஒன்றை துண்டாக வெட்டி உளியாக்கி பயன்படுத்துவதைப் போல, பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்களாய் இருந்த உன்னை, மானுடனாய் கடவுள் பிறக்க வைத்தது, அவன் தன் தேவைகளை உன்னை வைத்துப்பூர்த்தி செய்து கொள்ளவே!
நாம் பயன்படுத்துகிற அழகு சாதனம் முதல், அணிந்து கொள்ளும் நகைகள், கட்டுகிற கடிகாரம் உட்பட அனைத்துமே அடிபட்டதால் உருவானவை. அனுபவிக்க மட்டுமே நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது, எதற்காக என்று கேள்வி கேட்க நமக்கு உரிமையில்லை.
கேட்டாலும் இறைவன் நம்மை விடமாட்டான் என்பதைப் புரிந்து கொண்டேன் நான். எதற்காகவோ இந்தக் கஷ்டத்தை கடவுள் அனுமதித்து இருக்கிறான் என நினைத்து சகித்துக் கொள்ளுங்கள்.. அதிலும் சந்தோக்ஷம் இருக்கத்தான் செய்கிறது.

சாயி புத்ரன் பதில்கள்

போலித் துறவறம்!

நான் எல்லாவற்றையும் துறந்துவிட்டேன் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களிடம் நிறைய பகட்டு, ஆடம்பரம் இருக்கிறது. இது எதைக் குறிக்கிறது?
( சாயி சம்பத், வேலூர் 2)
போலித் துறவறத்தைக் குறிக்கிறது.
ஆந்திராவில் பரத்வாஜ் சுவாமிகள் இருந்தார். மெத்தப்படித்தவர், சாயியின் தீவிர பக்தர். அந்தப் பகுதியில் நிறைய சாயி கோயில்கள் அமையத் தூண்டுகோலாக இருந்தவர், பலரை சாயி பக்தியில் வழிநடத்தியவர். வசதியுள்ளவர். ஆனால், அவர் மிக எளிமையாக வாழ்ந்து சமாதியானார். சட்டையைக் கூட அயர்ன் செய்து போட மாட்டாராம். அப்படிப்பட்ட மகான் வாழ்ந்த ஆந்திராவிலேயே, இன்னொரு சாயி சாமியார் இருக்கிறார். ருத்ராட்க்ஷ கொட்டையில் தங்கத்தைச் சேர்த்து மாட்டியிருக்கிறார். துறவிக்கு தங்கமும் தகரமும் ஒன்றாக இருக்க வேண்டும். ருத்ராட்சை துறவின் அடையாளம். அதில் தங்கம் கலப்பது லவுகீகப் பெருமை.
பெண்கள் ஒரு புடவை எடுத்தால் அதற்கு மேட்சிங் ப்ளவுஸ் எடுப்பார்கள். அது போல சில துறவிகள் மொட்டை அடித்துக்கொள்கிறார்கள். அதற்கு மேட்சிங்காக மண்டை நிறைய பட்டையும் அடித்துக்கொள்கிறார்கள்.
புத்தகத்தைப் படித்து துறவியானால் இந்த நிலை நீடிக்கும். அனுபவத்தின் மூலம் துறக்கவேண்டும். அப்போதுதான் எதன் மீதும் ஆசையிருக்காது.
துறவிகள் எப்படியிருந்தால் நமக்கென்ன, நாம் சாயியை மட்டுமே பார்த்து, அவரது போதனைப்படி வாழ்ந்தால் போதுமானது.

சாயி புத்ரன் பதில்கள்