உடனே சீரடிக்கு வாரும்!

baba2

தினத்தியானம் 6

பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதும், அவர்களை தரிசனத்திற்கு அழைத்து அவர்களுடைய உலகியல் தேவைகளையும், ஆன்மீகத் தேடல்களையும் நிறைவேற்றி வைப்பதுமே பாபாவின் மனோரதமாக இருந்தது.

(அத்: 30!114)

உடனே சீரடிக்கு வாரும்!

சத்சரித்திரம் முப்பதாவது அத்தியாயம் 114 வசனத்தில், பாபாவினுடைய சித்தம் அதாவது மனவிருப்பம் பற்றி எழுதப்பட்டுள்ளது. பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வது, அவர்களை தரிசனத்திற்கு அழைத்து அவர்களுடைய உலகியல் தேவைகளையும், ஆன்மீகத் தேடல்களையும் நிறைவேற்றி வைப்பது. இதுதான் பாபாவின் விருப்பம். வேண்டிக்கொண்டதுமே உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாக ஆரம்பிக்கும். ஆனால், உங்கள் தேவைககளைப் பெறுவதற்கு ஒருமுறையாவது நீங்கள் சீரடிக்குப் போய் வரவேண்டும். சீரடிக்குச் சென்று திரும்பி வந்தால் ஒரு சிறப்பானத் துவக்கம் நிச்சயமாக ஏற்படும்.

நங்கநல்லூரைச் சேர்ந்த ரமேஷ், அவரது மகள் ரேகாவுடன் என்னுடன் சீரடிக்கு வந்தார்கள். தொழில் செய்து, சிலரிடம் சிக்கிக் கொண்ட பணத்தை திரும்பப் பெறமுடியாமல் பணக்கஷ்டத்துடன் காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தார் ரமேஷ்.

என்னோடு வரும்போது, ”நீங்கள் சீரடிக்குச்சென்று பாபா அற்புதத்தைப் பெற விரும்பினால், அவர் எனக்கு உதவி செய்வார் என ஆழமாக நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை நிச்சயம் நமக்கு மிகப்பெரிய மாற்றத்தைத் தரும்!” எனக் கூறினேன்.

எல்லோரும் எனது வார்த்தையை ஏற்றுக்கொள்வார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், யாருடைய கஷ்ட காலங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளதோ, யாருக்கு பாபாவின் ஆசீர்வாதம் பலன் தரவேண்டும் என அவரால் முடிவு செய்யப்பட்டிருக்கிறதோ அவர் நிச்சயமாக என் வார்த்தையை ஏற்றுக்கொள்வார் என்பது எனக்குத் தெரியும்.

பூனா ரயில் நிலையத்திற்கு வெளியே எங்களுக்காகக் காத்திருந்த பேருந்தில் நள்ளிரவு 12 மணி நேரத்திலும் இதைத்தான் வலியுறுத்தினேன். அப்போது ரமேஷ்: ”பதினெட்டு ஆண்டுகளாக வராத பதினெட்டு லட்ச ரூபாயில், பாதியளவு தொகை என் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வந்துள்ளது” என்றார்.

சீரடிக்கு வந்து தான் விருப்பங்கள் நிறைவேற வேண்டிய அவசியம் இல்லை. அதற்குள் தந்து விடுவதுதான் சாயி பாபாவின் லட்சியம். தனது பக்தர்கள் தன்னிடம் வேண்டிக் கொண்ட பிறகு அவர்களைக் காக்க வைக்க அவரால் முடியாது.

ஆகவே, அவர்கள் வேண்டிக்கொண்டதும் பலன் தர ஆரம்பித்து விடுகிறார். ரமேஷ் சீரடிக்குள் கால் பதித்த அன்று, மொத்த தொகையில் 75 சதவிகிதம் அளிக்கப்பட்டதாகத்தகவல் வந்தது. மிகவும் உற்சாகமாகிவிட்டார்.

சனி தோக்ஷ நிவர்த்தி யாகம் செய்தபோது, வன்னி சமித்துகளை ரமேஷ்தான் ஏற்பாடு செய்து தந்தார். இப்போது தீவிர ஆன்மீகவாதியாகி விட்டார்.

சாய் ராம், நான் எவ்வளவோ முறை வேண்டுதல் செய்திருக்கிறேன், உங்களோடும் சீரடி வந்துள்ளேன், ஆனால் என் வேண்டுதல்கள் ஏன் கேட்கப்பட வில்லை எனக் கேட்பாரும் இருப்பார்கள் அல்லவா?

இறைவன் கொடுக்கிறான், கர்ம வினை தடுக்கிறது என நான் அடிக்கடி கூறுவேனே, அது தான் உங்கள் விக்ஷயத்திலும் நடந்துவருகிறது. கர்ம வினையின் தாக்கம் பொடிப்பொடியாக தீவிரமாகப் பிரார்த்தனை செய்யவேண்டும்.

தரிசனத்திற்கு அழைக்கிறார்

பாபாவின் அனுமதியில்லாமல் யாரும் சீரடியில் கால் வைத்துவிட முடியாது. அவரது அனுமதி பெற்றவர்கள் செல்வதை யாரும் தடுக்கவும் முடியாது. போகும் வழியிலேயே அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, பிரச்சினைகளை, மன வருத்தங்களை உண்டாக்கி அழைத்துச் சென்று, முழுமையான நிவாரணத்தை அளிப்பார்.

சீட் கிடைக்காது, சரியான பராமரிப்பு கிடைக்காது, பேருந்தில் இடம் கிடைக்காது, தரிசனத்தின் போது பிறர் இடிப்பார்கள்.. இப்படியெல்லாம் பல தொல்லைகள் வரும்போது நாம் எரிச்சலடைந்து விடுவோம். இது தவறானது. இப்படிப்பட்ட சின்னச்சின்ன விக்ஷயங்களைக் கொடுத்து பாபா நமது பாவங்களை பாதி வழியிலேயே விலக்குகிறார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டால்,நடக்கிற அனைத்தையும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வோம்.

பாபா கூப்பிட்டு நாம் சென்றுவந்த பிறகு, அவரது நினைவிலேயே இருப்போமானால், வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

பிரார்த்தனை

சமர்த்த குருவே, உங்களை தரிசிக்க நான் சீரடிக்கு வருகிறேன். எனது கஷ்டங்கள்அனைத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து விடுவீராக. இன்னல் சூழ்ந்த நிலையை மாற்றி ஆசீர்வதிப்பீராக.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s