குழந்தை பிறக்கும்!

foursai

தினத்தியானம் 5
”இப்பாதங்கள் மிகவும் தொன்மையானவை, புனிதமானவை. இப்போது உனக்குக் கவலையில்லை. என் மீது முழு நம்பிக்கையையும் வை. நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்” (அத் ; 48)


குழந்தை பிறக்கும்!


சோலாப்பூர் மாவட்டம் அக்கல்கோட் என்ற ஊரைச் சேர்ந்தவர் சபட்ணேகர். ஒரு வக்கீல்.
திருமணம் நடந்து பத்தாண்டுகள் கழித்தபிறகு. அவரது மகன் திடீரென காலமான பிறகு, வாழ்க்கையில் நிம்மதியை இழந்த அவர், பல புனிதத்தலங்களுக்குப் போய் வந்தார். அப்படியும் மனதிற்கு சமாதானம் கிடைக்கவில்லை.
சீரடிக்கு வந்தார். பாபாவோ ”வெளியே போ” என விரட்டிவிட்டார். மனம் நொந்து திரும்பிய சபட்ணேகர், மறு ஆண்டும் வந்தார். அப்போதும் பாபா ”வெளியே போள” என விரட்டினார். இதனால் அவர் போக்கிடம் இல்லாமல் கலங்கினார்.
ஒரு நாள் அவரது மனைவிக்கு ஒரு கனவு. நீர் எடுக்க கிணற்றுக்குச் செல்கிறாள், அங்கே வேப்ப மரத்தடியில் ஓர் துறவி அமர்ந்துகொண்டு,இவரைப்பார்த்ததும், ”தாயே எதற்கு ஆயாசம்? நான் நிரப்பித் தருகிறேன்” எனக் கேட்கிறார். அவரைப் பார்த்து பயந்து ஓடி வந்த போதும், அந்தத் துறவி, இவளை தொடர்ந்து துரத்துவது போல கனவு கண்டாள்.
கனவைப் பற்றி கணவரிடம் சொன்னபோது, ”நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டது” என்று கூறி, பாபாவிடம் மீண்டும் சீரடிக்கு வந்தார். இப்போதும் பாபா, “வெளியே போ” என்றுதான் சொன்னார். இந்த முறை சபட்ணேகர் போகவில்லை.
பாபாவின் பாதங்களின் மீது தலையை வைத்து, அவரது பாதங்களை மெதுவாக வருடிக் கொடுத்தார். தாயன்பு மிக்க பாபா, அவரை ஆசீர்வதித்து, ”இறந்த குழந்தைக்கு வருந்தாதே! அதை மீண்டும் இதே கருப்பையில் வைக்கிறேன் இப்பாதங்கள் மிகவும் தொன்மையானவை, புனிதமானவை. இப்போது உனக்குக் கவலையில்லை. என் மீது முழு நம்பிக்கையையும் வை. நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்” என்றார்.
சபட்ணேகர் சீரடியில் தங்கி தினமும் பாபாவை தொழுவார். அடிக்கடி நமஸ்காரம் செய்துகொண்டே இருப்பார். இதை கவனித்த பாபா, “நீ ஏன் அடிக்கடி வணங்குகிறாய். பணிவுடனும் அன்புடனும் செய்யும் ஒரு நமஸ்காரமே போதும்!” என்றார்.
அவர்கள் விடைபெறும்போது, ஒரு தேங்காயை எடுத்துக் கொடுத்து, “இதை உன் மனவியின் சேலை முந்தானையில் போட்டுவிட்டு எவ்விதக் கவலையும் படாமல் சவுகரியமாகப் போய் வா!” என ஆசீர்வதித்தார். அவருக்கு அடுத்த ஆண்டே முரளிதரன் என்ற பெயருடைய மகன் பிறந்தான்.
சபட்ணேகர் சாயி பக்தியோடு வாழ்ந்தார். பாபா, வெளியே போ என அதட்டி விரட்டியது அவரையல்ல, அவருக்குள் இருந்த கவலையை, மன இறுக்கத்தை, கர்மாவை, அவநம்பிக்கையை. நீங்கள் நம்பிக்கையோடு பாபாவிடம் வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டிக் கொண்டதில் உறுதியாக நில்லுங்கள். நிச்சயமாக உங்களுக்குக் குழந்தைப்பிறக்கும். புதிய தேவைகள், வசதி வாய்ப்புகள் போன்ற அனைத்தும் உருவாகிக் கிடைக்கும்.
பிரார்த்தனை
எங்கள் மீது எப்போதும் அன்பு கொண்டுள்ள சமர்த்த கடவுளான சாயி பாபாவே, உங்கள் திருவடித்தாமரைகளை வணங்குகிறோம்.
எங்களுடைய பாரங்கள் அனைத்தையும் உங்கள் மீது இறக்கிவைக்கிறோம். தேற்றுவார் இல்லாததாலும், மருத்துவர்கள் கைவிட்டதாலும், குழந்தைப்பேறு மிகவும் கடினமானதாக இருப்பதாலும் நாங்கள் குழம்பியிருந்தோம். இதனால் உங்கள் மீது நம்பிக்கை வைப்பதில் சிரமமாக இருந்தது. எங்கள் சிரமத்தைப்போக்கி, குழந்தை வரம் அருளவேண்டும் எனப்பிரார்த்திக்கிறோம். அருள்வீராக.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s