மகளுடைய படிப்பை பாபா தொடர்வார்!

25129

சென்ற ஆண்டு எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரது தொழிலில் நட்டம் ஏற்பட்டு விட்டது. ரஷ்யாவில் மருத்துவம் படிக்கிற எனது மகளின் கல்விக் கடனுக்காக இந்த ஆண்டு விண்ணப்பித்தோம். அதுவும் தாமதமாகிக்கொண்டே வந்தது. அவள் ரஷ்யா செல்லும் நாள் நெருங்கிக்கொண்டே வந்த நிலையில், சென்னையிலிருந்த எனது மாமா கோபால் எனக்குப் போன் செய்து, பாரதிக்குப் பணம் கட்ட என்ன செய்யப் போகிறீர்கள்? எனக் கேட்டார்.

பாபாதான் அவளுக்கு டாக்டராகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அவர் மீது எல்லா பாரத்தையும் போட்டுவிட்டு நான் நம்பிக்கையுடன் பொறுமையாகக் காத்திருக்கிறேன் என்று கூறினேன்.

என் மகள் கிளம்புவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அவளது தோழி எனக்குப் போன் செய்து, “அம்மா எனது படிப்பிற்கு ஒரு வருடத்திற்குத் தேவையான முழு தொகையையும் என் வீட்டில் தந்துவிட்டார்கள். அவ்வளவு தொகையை என்னால் அங்கு பாதுகாக்க முடியாது. எனவே, இந்த வருடம் நான் பாரதிக்கு பணம் கட்டிவிடுகிறேன், அடுத்த வருடம் எனக்கு நீங்கள் கட்டுங்கள்” என்று கூறினாள். ஓடிச் சென்று பாபாவின் பாதத்தைப் பற்றிக் கொண்டேன்.

பக்தர்களை பாபா கைவிட மாட்டார் என்பதை நிரூபித்து விட்டார். பாபா அதோடு நின்றுவிடவில்லை. மேலும் பலஅற்புதங்களை எனக்கு நிகழ்த்தினார். எங்கள் நிலைமை தெரிந்த குடும்ப நண்பர் ஒருவர் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தார்கள். உங்களுக்கு எப்பொழுது பணம் வருகிறதோ அப்பொழுது கொடுத்தால் போதும் எனக் கூறினார்கள்.

எனது மகள் கிளம்பும் நாளும் வந்தது. அவளது மொபைல் போன் பழுதாகிவிட்டது. என்ன செய்வது எனப் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் மாப்பிள்ளை அவளை வழியனுப்ப வந்தவர், ”பாரதிக்கு புது மொபைலை பரிசாகக் கொடுக்க வாங்கி வந்திருக்கிறேன்!” எனக் கூறிக்கொடுத்தார். பாபாவின் அற்புதம் மகத்தானது.

எல்லாம் பேக் பண்ணி, வெயிட் பார்த்தால் கொண்டு போகும் அளவைவிட பத்து கிலோ அதிகமாக இருந்தது. சூட்கேஸை அவளால் நகர்த்தக்கூட முடியவில்லை. ஒரு வருடத்திற்குத்தேவையான அனைத்துப் பொருட்களையும் கொடுத்து திருச்சியிலிருந்து ஏற்றி அனுப்பி வைத்தோம். டெல்லி ஏர்போர்ட்டில் இறக்கி எப்படி வெளி நாட்டு ஏர்போர்ட் வரை கொண்டு போகப் போகிறார்களோ என்ற கவலையுடன் திரும்பினோம்.

நீங்கள்தான் பாபா அவளை பத்திரமாகக் கூட்டிச் செல்லவேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்தோம். மறுநாள் காலை என் மகள் போன் செய்தாள். ”அம்மா நாங்கள் பத்திரமாக வந்து விட்டோம். ரயிலில் இரண்டு அண்ணன்கள் வந்தார்கள். ஆர்மியில் இருக்கிறார்களாம், எங்கள் லக்கேஜை எல்லாம் பத்திரமாக இறக்கி எடுத்து டாக்சியில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள்” எனக் கூறினாள்.

ஏர்போர்ட்டிலும் எங்கள் லக்கேஜை வெயிட் போடவில்லை. ஸ்டேன்ஸ் விசா ஓகே.. நீங்கள் போகலாம் எனக் கூறினார்கள்.

”ஒரு பைசா கூட வரி கட்டவில்லை!” என்று கூறினாள்.

அவள் கிளம்பிய ஒவ்வொரு நிமிடமும் பாபா அவள் கூடவே இருந்து அவளை வழிநடத்தி கூட்டிச் சென்றார். பாண்டிச்சேரி சாரதா மாமி, ”உன் மகளுக்கு லோன் இல்லாமலேயே பாபா கொடுப்பார்” என்று கூறியிருந்தார். அது உண்மையாகிவிட்டது.

பாபா எப்படிப்பட்ட சொந்தங்களை பாபா நமக்கு அறிமுகம் செய்தார் என நினைத்து இன்றளவும் வியந்துகொண்டிருக்கிறேன். எங்களுக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. தனது எழுத்துக்களால் எங்களுக்கு நம்பிக்கையையும், பலத்தையும் கொடுத்துக்கொண்டிருக்கும் குருநாதர் அவர்களை வணங்கி நன்றியை சமர்ப்பிக்கிறோம்.

அமுதா குணசேகரன், திருச்சி – 7

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s