என்னை அடைய, நீ வாழ, ஒரே வழி! சரணாகதி!

nagasai

”எனக்கு ஒன்னும் தெரியாது பாபா! நீ பார்த்துக்கொள்! இந்த எளிய வேண்டுகோள்தான் உயர்ந்த சரணாகதி தத்துவம். இதைத்தான் பாபா் ”என்னிடம் சரண் அடைந்துவிடு. பாரத்தை என் மேல் வைத்துவிடு, அமைதியாய் இரு. நம்பிக்கை யுடனும், பொறுமையுடனும் இரு. உங்களிடம் வேண்டுவது இரண்டே வார்த்தைகளைத்தான் அளவற்ற பொறுமை, அசையா நம்பிக்கை!” என்கிறார்.

இதை ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய் மொழியில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

”தாள்அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால்

வைகுந்தம் கொடுக்கும் பிரான்!”

என திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளை பார்த்து சொல்கிறார். தாள் அடைதல் என்றால் சரணாகதி அடைதல்.

பாபாவின் பாதத்தை நாம் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளவேண்டும். தாத்யா பாட்டீல், மகல்சாபதி, சியாமா, ஹேமத் பந்த், தாசகணு மகராஜ் ஆகிய பாபாவின் அடியார்கள் பாபாவே கதி என்று சரண் அடைந்தார்கள். சரண் அடைந்தாலே எதிலும் ஆசை இருக்காது.

பற்றற்ற வாழ்க்கை வாழ வழி பிறக்கும். என்னால் எதுவும் ஆகாது, எல்லாம் இறைவன் செயல் என்ற எண்ணம் வந்துவிடும்.

இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்தது வெறும் ஆடம்பர வாழ்க்கையை வாழவும், மனைவி மக்கள் என்ற பாசப் பிணைப்போடு வாழவும், மனம் போன போக்கிலே வாழவும் அல்ல! இந்தப் பிறவியின் நோக்கமே மீண்டும் பிறவாமைக்காகவும், சேவை மூலம் பிறருக்கு உதவவும்தான்.

சரணாகதியின் மூலம் மீண்டும் இறைவனை அடையவேண்டும். அதுதான் இந்தப் பிறவியின் உயர்ந்த லட்சியமாக இருக்க வேண்டும். இதுதான் நம் மண்ணில் யுகம் தோறும் அவதாரம் செய்யும் அவதாரப் புருக்ஷர்கள் சித்தர்கள், மகான்கள், ஞானிகள் ஆகியோர் நமக்குக் கற்றுத் தந்த பாடம்.

நீங்கள் ஜபம், தியானம், பூஜை என்று எந்த செயலையும் செய்ய வேண்டாம். கலியுகத்தில் பகவானின் நாமத்தை சொன்னாலே உங்கள் பாவங்கள் தொலைந்து, நற்கதி அடைய பாபா வழி காட்டுவார்.

பிறருக்குத் தீங்கு செய்யாமல் எல்லோரிடமும் அன்பு காட்டினால் உங்களை உய்விக்க பகவான் பாபா ஓடோடி வருவார்.

அன்பே சிவம்! அன்பிலே உங்கள் வாழ்வைத்தொடங்குங்கள். எல்லோரிடமும் அன்பாகப் பேசுங்கள். அன்பாகப் பழகுங்கள்.

இதை நம் வாழ்வில் கடைப்பிடித்தாலே பாபா நம்மை அவருடைய நல்லாசியால் மேன்மை அடையச் செய்துவிடுவார்.

ஆன்மீகம் என்பது மிகப்பெரிய சமுத்திரம், அதில் சரணாகதி தத்துவம் என்பது ஆழ்கடலின் நடுவில் சலனமற்ற அலைகளற்ற அமைதியான சமுத்திரத்திற்கு ஈடானது. சரணடைந்தால் மனம் அமைதி பெற்றுவிடும்.

எனவே, பாபாவின் பாதங்களை சரண் புகுவோம்.

பாபாவின் நாமத்தை உச்சரிப்போம். பாபாவே கதி என்று அவர் தம் தாள்அடைவோம்.

பெரியநம்பி வி. ஜெயராமன்,

மதுரை-10

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s