பாபா பக்தர்களை அழைத்து அநுக்கிரகம் செய்கிறவர்:

25129

நீங்கள் பாபா கோயிலுக்கு அல்லது சீரடிக்குப்போவதாக நினைத்தால் அது தவறானது. அவர் அழைக்காமல் யாரும் அவருடைய ஆலயத்திலோ, தபோ பூமியான சீரடியிலோ கால் வைக்கமுடியாது.

”யாருடைய பாவங்கள் விலக்கப்பட்டு விட்டனவோ, அந்தப் புண்ணியசாலிகளே என்னை அறிந்து கொள்கிறார்கள், என்னை வழிபடுகிறார்கள்ள” என்று சத் சரித்திரம் பதி்ன்றாவது அத்தியாயத்தில் பாபா கூறியிருக்கிறார்.

”சாயி சாயி என்று எந்நேரமும் ஜபம் செய்து கொண்டிருப்பீர்களானால் நான் என்னுடைய அருளால் உங்களுக்கு ஏழு கடல்களையும் அளிப்பேன், ஏழு கடல்களுக்கு அப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன், எவர்கள் என்னுடைய இந்த வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள்.

”எனக்கு அஷ்டோபசார பூiஜயோ, ஷோடசோபசார பூஜையோ வேண்டாம். எங்கே திடமான பக்தியிருக்கிறதோ அங்கே நான் இருக்கிறேன்” என்றார் பாபா.

சாயி தரிசனம் என்பது நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்து. இவ்வுலக சுகங்களையும் மேல் உலக சுகங்களையும் அளவின்றி அளிக்கும் சக்தி வாய்ந்தது.

அவருக்கு கோழியோ ஆடோ பலியிடத் தேவையில்லை. பணமும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேர்மையான அன்புக்காகவும் விசுவாசத்திற்காகவுமே அவர் பசி கொண்டார். அதன் பிறகு அவர்களுடைய சங்கடங்கள் அனைத்தும் தொலைந்து போயின என்கிறது பதினோறாவது அத்தியாயம்.

”நான் எனது பக்தர்களின் பிடியில்தான் இருக்கிறேன், அவர்களின் பக்கத்தில் நிற்கிறேன், எப்பொழுதும் அவர்களுடைய அன்பை தாகத்துடன் நாடுகிறேன். துன்பத்தில் அவர்கள் கூப்பிடும்போது ஓடி வருகிறேன்” என்று உத்தரவாதம் தந்தவர் பாபா.

நேர்மையானவன், பக்தியுள்ளவன், துன்பத்தில் இருந்தாலும் அவர் மீது மாறாத நம்பிக்கையுள்ளவன் ஆகியோருக்கு அவர் செய்கிற பலன் மிக அதிகம்.

பூர்வ ஜென்மங்களில் சம்பாதித்த பாக்கியமே அவரது பொன்னடிகளுக்கு நம்மை இழுத்துள்ளது என்பதை உணர்ந்துகொண்டு, அவர் மீது மாறாத நம்பிக்கை உள்ளவர்களாக இருங்கள்.

நம் பாபா எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்துகிறவர். பாரபட்சமில்லாமல் அருள் தருகிறவர். அவருக்கு மேலோர்-கீழோர் எல்லாம் ஒன்றுதான். பாவி மனம் திருந்தினால் அவனை புண்ணியசாலியாக்கி அருள் செய்வார். நாம் புண்ணிசாலிகள். ஆகவே பாபா பக்தர்களானோம். வாழ்நாள் முழுதும் மாறாமல் சாயி பாதங்களில் தொடர்வோம்.

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s