வேலை மீண்டும் கிடைக்கும்!

sai59

பாஸ்கர் சதாசிவ சதாம் காவல்துறையில் போலீசாக சேர்ந்தார். 1930-ல் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று மும்பை லாமிங்டன் ரோடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் நாகேஷ் ஆத்மராம் சமந்த் என்ற நண்பரை சந்தித்தபோது பாபாவைப் பற்றி இவரிடம் கூறினார். அப்போது சீரடி செல்லவேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் செல்லவில்லை.

1940-ல் இவரும் சமந்தும் நர்காம் பயிற்சிப்பள்ளியில் இருந்தனர். துரதிருஷ்டவசமாக அப்போது சதாசிவ சதாம் 16-2-1940-ல் இடைநீக்கம் செய்யப்பட்டார். பாபாவைத் தொடர்ந்து பிரார்த்தித்து வந்தார்.

அப்போது அவருக்கு சீரடியில் இருந்து உதியும் பிரசாதமும் தேவைப்பட்டது. இவற்றை சகுண் மேரு நாயக் அனுப்பி வைத்தார். பிரசாதம் மட்டும் கிடைத்தது, உதி கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவர் 28-2-1940 -ல் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சமயத்தில் இவர் நண்பர் சமந்த், உடனடியாக சீரடி செல்லச் சொன்னார். எந்த நிபந்தனையும் இல்லாமல் அவரும் தன் மகனுடன் ராம நவமியன்று சீரடி சென்றார். இரண்டு நாட்கள் தங்கினார். பாபாவிடம் பிரார்த்தித்தார்.

மும்பை திரும்பியபோது தாதரில் மற்றொரு போலீஸ்காரர் இவருக்கு மீண்டும் வேலை கொடுத்து லாமிங்டன் ரோடு காவல் நிலையத்தில் போட்டுள்ளார்கள் என்றார். ஆனால் அப்படி எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை. சதாசிவ சதாம் 28-4-1940 அன்று மேல் முறையீடு செய்தார். 14-5-1940 அன்று லாமிங்டன் ரோடு காவல் நிலையத்தில் பணிபுரியச்சொல்லி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை தாதர் காவலர் மூலம் இரண்டு மாதத்திற்கு முன்பே பாபா இவருக்கு உறுதி செய்துவிட்டார்.

அவருக்கு கடன் ஏற்பட்டுவிட்டது. பாபாவிடம் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தார். முடிவில் எல்லா கடனும் அடைந்துவிட்டது. மனநிறைவோடு வாழ்ந்த அவர், இந்த நிறைவும் மகிழ்;ச்சியும்தான் தனக்கு நீடிக்க வேண்டும் என பாபாவிடம் பிரார்த்தனை செய்துவந்தார்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s