70 ஆண்டுகளாக வீட்டிலேயே கோயில்!

baba2

சென்னையில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த நான், தற்போது நாக்பூரில் வசிக்கிறேன். அது எனது சொந்த ஊர். என்னுடைய மகன் பாலாஜி. இந்த ஊரில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுகிறான்.

நான் குடியேறிய தெருவுக்குப் பக்கத்தில் விஜூ பாபா என்ற பெரியவர் இருப்பதாகவும், எழுபது ஆண்டுகளாக வீட்டிலேயே கோயில் வைத்து பாபாவை வணங்கி வருகிற அவரை தரிசித்து வரலாம் என்றும் எனது தம்பி மனைவி அழைத்துச் சென்றிருந்தார்.

வீடு என்று கூற முடியாத அளவுக்கு இருந்தது. பாபா விக்ரமூம் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேர்த்தியாக பூஜைகள் நடந்துவருகின்றன. சுவற்றில் பல படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் லட்சுமி பாய் அம்மையாருடன் ஒரு வயதான பெண்மணியும் ஓர் இளைஞனும் இருக்கும் படமும் இருந்தது.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு காத்திருந்து அந்த மகானை தரிசித்தோம்.

அப்போது என் கையில் சாயி தரிசனம் பத்திரிகை இருந்தது. பத்திரிகையை வாங்கி அதன் அட்டைப்படத்தில் இடம் பெற்றிருந்த பாபாவையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவர், பத்திரிகை பற்றி விசாரித்தார்.

தமிழ்நாட்டில் சென்னை நகரில் ஸ்ரீ சாயி வரதராஜன் என்ற சாயி அடியாரால் இந்தப் பத்திரிகை வெளியிடப்படுகிறது. சாயி பக்தர்களின் அனுபவங்கள் மற்றும் பாபாவின் அற்புத மகிமைகள் பற்றிய செய்திகளைத்தாங்கி வெளிவருகிறது எனக் கூறினேன்.

அவரும் தன் அனுபவங்களையும் கூறினார். எழுபது ஆண்டுகளாக தனது வீட்டையே கோயிலாக மாற்றி வழிபட்டு வருவதைப் பற்றி அவர் தெரிவித்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

பாபாவிடமிருந்து ஒன்பது நாணயங்களைப் பெற்ற லட்சுமி பாய் அம்மையாருடன் அவர் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவைக் காட்டி தனது அற்புத அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

சத்சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு சம்பவம் பற்றி கூறினார். பக்தர்கள் ரூபாய்களை பாபாவிடம் கொடுத்து ஆசீர்வதிக்குமாறு வேண்டுவார்கள். பாபா ஆசீர்வதித்து அந்த ரூபாய்களை திரும்பித் தந்துவிடுவார். இவ்வாறு ஒரு பக்தர் ஒரு நாணயத்தைக் கொடுத்து அதை ஆசீர்வதித்துத் தருமாறு பாபாவிடம் வேண்டுவார்.

பாபா அந்த நாணயத்தை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துவிட்டு, சாமாவிடம் கொடுத்து இதை பத்திரமாக வைத்துக்கொள் எனக்கூறிவிடுவார். நாணயம் தந்தவருக்கு ஏமாற்றம். அதை எப்படியேனும் திருப்பித் தந்துவிடுமாறு சாமாவிடம் வேண்டுவார். சாமா இதுபற்றி பாபாவிடம் கூறியபோது, அவர் இதற்கு பதில் இருபத்தைந்து ஞபாய் தருவாரா எனக் கேட்பார். அவரும் சரி எனக் கூறினார்.

அப்படியும் அந்த நாணயத்தை பாபா தரவில்லை. சாமா இதை நீயே வைத்துக்கொள். இது விலை மதிக்கமுடியாதது எனக் கூறினார்.

அந்த நாணயத்தில் ஒரு பக்கம் அனுமன் மறு பக்கம் சீதாராமன் லட்சுமணனோடு இருக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. இதை சாமா பத்திரமாக வைத்துக்கொண்டார்.

சாமாவுக்குப் பிறகு அந்த நாணயம் அவரது மகன் வசம் வந்தது. இதை சீரடி சன்ஸ்தான்

கேட்டபோது, பாபா உத்தரவு அளித்தால்தான் தருவேன் என சாமாவின் மகன் கூறிவிட்டார். பாபா, சாமா மகனின் கனவில் வந்து, நாக்பூரில் வசிக்கும் தனது அடியவனிடம் இந்த நாணயத்தைக் கொடுத்து பாதுகாக்குமாறு கூறு என சொன்னார். அதே நேரத்தில் நாக்பூரிலிருந்து வந்த விஜூ பாபா, சீரடியில் ஒரு லட்சுமி பாய் அம்மையாருடன் விஜூ பாபா கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்.

எதேச்சையாக அவரைப் பார்த்த சாமாவின் மகன், இவர்தான் நாக்பூரிலிருந்து வந்த அடியாராக இருக்கவேண்டும் என நினைத்தார். விசாரித்து தெரிந்துகொண்ட பிறகு, தன் வீட்டிற்கு வருமாறு அடியாரை அழைத்து, தான் யார் என்பதையும், பாபா தன் கனவில் கூறியதையும் எடுத்துக் கூறினார். பிறகு ஒரு பெட்டியை எடுத்துவந்து பட்டுத் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த சிறிய டப்பாவை எடுத்து, அதிலிருந்த நாணயத்தை விஜூ பாபாவிடம் தந்துவிட்டார்.

பாபாவின் ஆணைப்படி விஜூ பாபா இந்த நாணயத்தைப் பெற்றுக்கொண்டு மேளதாளத்துடன் மரியாதையோடும், பக்தியோடும் அந்த நாணயத்தை தன் இருப்பிடம் கொண்டுவந்தார்.

அந்த அருள்காசு இப்போதும் தன்னிடம் இருப்பதாகக் கூறிய அவர், அதை எல்லா நேரத்திலும் வெளியே எடுக்க மாட் டேன், ஒவ்வொரு ராம நவமியின் போது தான் எடுப்பேன் எனக் கூறினார்.

இதற்காக, நான் ராம நவமிவரை காத்திருந்து மகிமை மிகுந்த அந்த நாணயத்தைப் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றேன். என் மகன் என்னை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். ஸ்ரீ சாயி பாபாவின் அருளைப் பெற்ற அந்த செல்லப் பிள்ளையான விஜூ பாபா எங்கள் ஊரில் உள்ளார் என்பதை நினைத்துப் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

திருமதி. கமலா,

நாக்பூர்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s