எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும்!

DSC_0005

சாயி நாமம் நமக்குள் பிரதிஷ்டைச் செய்யப்பட வேண்டுமானால், அகிம்சை,, நேர்மை,. திருப்தி, புலனடக்கம் உட்பட அனைத்தும் முக்கியம். இதற்காக சில விக்ஷயங்களைப்பார்க்கலாம். முதலில் அகிம்சை, நேர்மை, திருப்தி அதன் பிறகு புலனடக்கம் பற்றி நேற்று பார்த்தோம். இன்று இறுதியாக எளிமையான வாழ்க்கை……

 எளிமையான வாழ்க்கையை ஏன் வாழவேண்டும் என்றால், இந்த உலகத்தின் பகட்டுகள் என்னும் தூசுகள் நம்மீது ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக. சிறிய வயதில் தனித்து விடப்பட்ட காலத்தில் செருப்பின்றி நடந்தபோது, அந்த நிலையைக்கேவலமாக நினைப்பேன். இப்போது அதைப் பற்றி கவலைப்படுவது இல்லை.

காரணம், அப்போது நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் வித்தியாசத்தை நான் உணர்வது. அந்தக் காலத்தில் என்னிடம் செருப்பு வாங்கக்கூட பணமில்லை. செருப்பில்லாமல் நடந்தால் பிறர் என்னைக் கேவலமாகப் பார்ப்பார்கள், என் வயது ஒத்தவர்கள் என்னை கேலி செய்வார்கள் என்று நினைத்திருந்தேன்.

இப்போது பணம் உள்ளது, எத்தகைய செருப்பையும் வாங்கமுடியும் என்ற நிலையிலிருக்கிறேன். ஆனால் செருப்பு போட விரும்புவது கிடையாது.

தப்பித் தவறி போட்டாலும் செருப்பையே எங்காவது மறந்துவிட்டு வந்துவிடுகிறேன். இப்போது செருப்பில்லாமல் நடப்பதை பெருமையாக, கவுரமாகக் கருதுகிறேன்..

ஐந்து ரூபாய் சம்பாதித்தபோது ஐம்பது ரூபாய்க்கு வந்த ஆசை, ஐயாயிரம் சம்பாதித்தபோது ஐம்பதாயிரத்திற்கு வரும். ஐம்பதாயிரம் வந்தால் ஐந்து லட்சத்திற்கும், ஐந்து லட்சம் வந்தால் ஐந்து கோடிக்கும் தாவுவதுதான் மனித மனம்.

இந்த மனதின் நோக்கம், நாம் எல்லோரை விடவும் மிக உயர்வாக, ஒசத்தியாக வாழவேண்டும் என்ற எண்ணம் நமக்குள் விதைக்கப்பட்டிருப்பதால், அடுத்தவரைவிட ஒரு படி மேலானவர்களாக நம்மைக் காட்டிக்கொள்ள பிரயத்னப் படுவது. இதனால் தேவையற்ற ஆடம்பரங்களை நாம் தேடவேண்டியிருக்கும்.

ஆடம்பர வாழ்க்கையை நாடுகிறவர்கள் தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு வாழ்க்கையை இழப்பது நடைமுறை வழக்கம்.

நாமோ, சாயி பாபாவின் சீரிய பக்தர்கள். நமக்கு இந்த ஆடம்பரம் வேண்டாம். குடிப்பது கூழானாலும் திருப்தி யோடும், நிம்மதியோடும், அடக்கத்தோடும் குடிக்க வேண்டும். தேவையில்லாமல் பேராசைப்படக்கூடாது. இயல்பான வாழ்க்கை வாழவேண்டும். தேவையில்லாத நிலைக்குப் போகக்கூடாது.

இப்படி ஒவ்வொன்றிலும் தரம் பிரித்து தேவைக்கு மட்டும் விரும்பி, தேவையற்றவை மீது மனம் போகாமல் தடுத்து வாழக் கற்றுக்கொள்ளும்போது எளிமை நமது மனதில் வந்துவிடும். எளிமையாக இருக்கும்போது எல்லா குணங்களும் நம்மை வந்து அலங்கரிக்கும்.

எளிமையை மாற்றும்போது, தேவையற்ற குணங்கள் நம்மை ஆட்சி செய்யும். எது நமக்குத்தேவை என்பதை நாம் முடிவு செய்துகொள்வது நல்லது. ஒழுக்கத்தோடு இருந்தால்தான் நாம் ஆன்மீகத்தில் வெகு சீக்கிரத்தில் முன்னேற முடியும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s