சாயி பக்தர் தீட்சித்!

sai sym தீட்சித்தின் வார்த்தைகளில்………

1-9-1930 முதல் 9-4-1932 வரை நான் தீவார் மாநிலத்தின் வரிவசூல் அதிகாரியாகப் பணிபுரிந்தேன். பின் 1932 ஆகஸ்ட் 1933 வரை சுர்கானா மாநிலத்தின் கார்வாரியாய் இருந்தேன்.

ஒவ்வொரு முறையும் நாசிக் வந்தால் சும்மா இல்லாமல் வக்கீல் தொழில் செய்துவந்தேன். இதனால் நொடித்துப் போன எனது வருமானமும் பெருகியது.

ஒருநாள் மதியம் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். திடீரென எனது அறையில் சுர்கானா மாநிலத்தின் தலைமை அதிகாரி நுழைந்தார். இதை நான் எதிர் பார்க்கவில்லை. அவரை உட்காரச் சொல்ல சரியான இருக்கை இல்லை. இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். இதையெல்லாம் கண்டுகொள்ளாத அவர் அடுத்த அறைக்குச் சென்றார்.

அங்கு மாட்டப்பட்டிருந்த பாபாவின் படத்தைப்பார்த்தார். என்னிடம் வந்தார். எனக்கு உடனடியாக ஐம்பது ஞபாய் சம்பளத்திலிருந்து உயர்த்தித் தரச்சொன்னார்.

நான் வேலையில் சேர்ந்து இரண்டு வாரம் தான் ஆகிறது. நான் சம்பள உயர்வு கேட்கவில்லை. இது யார் செய்தது? என் பூஜை அறையில் இருந்த பாபா அல்லவா செய்தார்- குழந்தையின் தேவையை தாய்தானே கவனிக்கவேண்டும்? என்னே என் பாபாவின் கருணை!

பூஜைக்காக பாபாவின் படத்தையும் வண்ணப்படத்தையும் வைத்திருந்தேன். எங்கு சென்றாலும் இவற்றை எடுத்துச் செல்வேன். தீவாரில் சமையற்காரரும், நாசிக்கில் எனது உறவினரும் பாபாவின் போட்டோவை அங்கேயே வைத்துவிட்டுச் செல்லச்சொன்னார்கள். பாபாவிடம் சீட்டுப் போட்டுப் பார்த்தபோது அவைகளை நான் என்னுடன் எடுத்துச்செல்ல வேண்டும் என வந்தது. அதிலிருந்த ராதா கிருஷ்ண ஆயியின் படத்தை நான் மிகவும் விரும்பினேன். ஒரு படத்தில் பாபா மிக ஆழ்ந்த சிந்தனையோடு நின்றுகொண்டிருந்தார்.

இந்தப் படங்களை எடுத்துக்கொண்டு ஆயியின் வீட்டிலிருந்து மசூதிப்பக்கம் சென்றபோது என்னைக்கூப்பிட்டு படத்தைக் காட்டி ”என்ன?” என்றார்.

நான், ”நீங்கள்தான்!” என்றேன்.

”கொடு” என்றார். கொடுத்தேன்.

வாங்கி கொஞ்ச நேரம் வைத்திருந்து முன்னும் பின்னும் பார்த்தார். பின் என்னிடம் கொடுத்து, வைத்துக்கொள்ளூ” என்றார்.

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். பாபாவும் என் எண்ணத்தை நிறைவேற்றினார். இதுதான் எனக்கு பாபாவின் பரிசு. இவற்றை பயபக்தியோடு பூஜிக்கிறேன். இதுவே என் பூஜை முறை. இதுமட்டுமல்ல, பாபா எனக்கு வேறு பொருள்களும் தந்தார்.

பாபா முதன்முறையாக என்னிடம் இரண்டு ரூபாய் தட்சணையாகப் பெற்று, திருப்பிக் கொடுத்து ”இதை பத்திரமாக வைத்துக்கொள். செலவு செய்யாதே! யாரிடமும் கொடுக்காதே” என்றார்.

இதேபோல் எனக்கு இரண்டு ரூபாய், இருபது ரூபாய், பதினைந்து ரூபாய், முப்பது ரூபாய் என மொத்தம் அறுபத்து ஒன்பது ரூபாய் கொடுத்தார். இவற்றையும் நான் பத்திரமாகப் பாதுகாத்தேன்.

நானும் பூட்டியும் பாபாவிடம் சென்றபோது பூட்டியிடமிருந்து இருபது ரூபாய் பெற்று என்னிடம் கொடுத்தார். மற்றொரு முறை எனக்கு முப்பது ரூபாய் கொடுத்தார்.

ஒருமுறை பூட்டியிடம் முப்பது ரூபாயைப்பெற்று இரண்டு கைகளிலும் வைத்துப் பிரித்து ஒரு கையிலிருந்ததை பூட்டியிடமும் இன்னொரு கையிலிருந்ததை என்னிடமும் கொடுத்தார். நாங்கள் தங்கும் விடுதிக்குச் சென்று அதை எண்ணிப்பார்த்தபோது ஒவ்வொருவரிடமும் பதினைந்து ரூபாய் இருந்தது. கொடுப்பவரும் அவரே, வாங்குபவரும் அவரே.

இப்படி தட்சணையாகப் பெறுவதன் மூலம் பாபா நமக்குச் சில உண்மைகளை உணர்த்துகிறார். அது நமக்குப் பின்புதான் புரியவரும்.

சிலரிடம் இருக்கும் பணம் முழுவதையும் தட்சணையாகப் பெற்றுவிடுவார். என்னிடமும் அப்படி செய்துள்ளார். ஆனால் அதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. அது மட்டுமல்ல, பாபா என்னை என்றுமே பணக்கஷ்டத்தில் விட்டதில்லை.

ஒருமுறை பாபாவை தரிசித்த போது என்னிடம் இருந்த எல்லா பணத்தையும் தட்சணையாகப்பெற்றுக் கொண்டார். மீண்டும் ஏழு ரூபாய் கேட்டார். இல்லை என்றேன். யாரிடமாவது கேட்டு வாங்கி வா என்றார். அப்போதுதான் புரிந்தது,

சமூகத்தில் நான் உயர்ந்தவன் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள். பிறரிடம் சென்று யாசிக்கக்கூடாது என்ற அகங்காரம் என்னை விட்டு நீங்க வேண்டும் என்றே பாபா என்னிடம் அவ்வாறு கூறினார்.

அது மட்டுமல்லாமல், பாபா மகாசமாதியடைந்த பிறகு சீரடி சென்று, பாபா எந்தெந்த வீடுகளில் சென்று உணவை யாசித்தாரோ, அங்கெல்லாம் சென்று உணவை யாசித்தேன். ஆகவே, பாபா “யாசித்து வா” என்ற கட்டளை எனது கர்வத்தை அடக்குவதற்குத் தான். இல்லையேல் எனது அகங்காரம் எல்லையில்லாமல் போயிருக்கும்.

இன்னொரு முறை பாபா என்னிடமிருந்த பணத்தை தட்சணையாகப் பெற்றபின், மீண்டும் ஐம்பது ரூபாய் கேட்டார். தீர்ந்துவிட்டது என்றேன். யாரிடமாவது வாங்கி வா என்றார். கேட்டேன் கிடைக்கவில்லை. ராவ் பகதூர் சாதேயிடம் சென்று வாங்கி வா என்றார். அவரிடம் கேட்டேன், அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி.காரணம் சொல்லவில்லை.

சாதேவின் ஓய்வூதியம் தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஐம்பது ரூபாய் அதிகம் தரவேண்டும் எனக் கேட்டிருந்தார். அந்த ஐம்பது ரூபாய் அதிகப்படுத்தி அன்றுதான் அவருக்கு ஆணை வந்தது.

பாபா தட்சணை கேட்ட நாளும் அவருக்கு ஆணை வந்த நாளும் ஒரே நாள். அதனால்தான் சாதே மகிழ்ச்சியால் துள்ளினார்.

எல்லாம் அறிந்த சத்குரு சாயி, தன் பக்தர்களிடம் மாறாத அன்பு கொண்டவர். ஆனால் நமக்குத்தான் சில நேரங்களில் சில நிகழ்வுக்குக் காரணம் தெரிவது இல்லை.

சீரடியில் சாயி பக்தர் ஆறுபேரை கிரிமினல் கேசில் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள் அல்லவா? அதில் நான் மேல் முறையீடு செய்து அந்த ஆறுபேரையும் நீதிபதி எதுவும் கேட்காமலே விடுதலை செய்தார்கள். அதற்காக எனக்கு முன்னூறு ரூபாய் தந்தார்கள்.

நான் சீரடி திரும்பியவுடன் பாபா அந்த முழு தொகையையும் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார். அதில் எனது செயல் ஒன்றுமில்லை. ஆகவே,எனக்குச் சேரவேண்டிய பணமும் இல்லை. பாபா செய்வது சரியாகத்தானே இருக்கும்.

யாராவது பாபாவிடம் கடவுள் கடவுள் என்று கடவுள் பற்றி பேசினால், ஏன் எப்போதும் கடவுள் கடவுள் என்று பேசுகிறார்கள்.

கடவுள் என் சட்டைப் பையில் இருக்கிறார் என்பார். ஏனென்றால் அவரே தத்தர், மும்மூர்த்தி. ஆக்குபவர், காப்பவர் அழிப்பவர். நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு தானே சமையல் செய்து பரிமாறுவார் பாபா. சமையல் பாத்திரத்தில் உலை கொதித்துக்கொண்டிருந்தது. அங்கு வந்த ஒரு பக்கிரிக்கு மாமிச உணவு பிடிக்கும்.

மாமிசத்தை கொதிக்கும் பாத்திரத்தில் போட்டார். சைவம் அசைவம் ஆகியது.

பாபா தன் பாட்டுக்கு சமையல் செய்துகொண்டிருந்தார். இதைக்கண்ட பாபாவின் பக்தர் பாலா சாகேப் மிரிக்கர் சங்கடப்பட்டார். “ஓர் உயிரைக்கொன்றுதான் நாம் வயிறை நிரப்ப வேண்டுமா? ஏன் இந்த கொடூரம்?” என பாபாவிடம் கேட்டார்.

பாபா சொன்னார்: “அழிப்பவர்தான் ஆக்குபவர். ஆக்குபவரே அழிப்பவர். இதுதான் மும்மூர்த்திகளின் செயல்” என்றார்.

அதுவும் சத்புருக்ஷர்களின் திருவடிகளிலோ அல்லது அருகாமையிலோ மனிதனோ அல்லது மற்ற பிராணிகளோ உயிர் விட்டால் அவை நற்கதி அடைகின்றன. அதனால்தான் பாபா சைவம் அசைவம் பற்றி எதுவும் சொல்லாமல் உணவு விக்ஷயத்தில் மனிதன் உடலாலும் மனதாலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். எதிலும் ஓர் அளவு வேண்டும் என்றார்.

எனது நண்பர் காகா சாகேப் தீட்சித். மும்பையில் சிறந்த சட்ட நிபுணர். பெரும் பணக்காரர் சீரடியில் தங்கியிருந்தபோது முப்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். திருப்பிக் கொடுக்க இன்னும் நான்கு நாட்களே இருந்தன.

பணம் எங்கிருந்து வரும்? எப்படி வரும்? எனத் தெரியவில்லை. அன்று இரவு கனவு கண்டார். கடன் காரர் கடனைக் கேட்டு தொந்தரவு செய்கிறார், தீட்சித் கடன்காரரிடம், ”கடனைத் திருப்பித் தரமாட்டேன் என பயம் வேண்டாம். எனக்கு சர் சிமன்லாலை தெரியும், எக்ஸை தெரியும், ஒய்யைத் தெரியும்” என்கிறார்.

கனவிலிருந்து விழித்தார். கனவில் நடந்ததை நினைத்தார். என்ன முட்டாள் தனம்! என்ன நன்றி கெட்டத்தனம்! இந்த மனிதர்களா தன்னை காப்பாற்ற முடியும்? இவர்கள் கடைசி நேரத்தில் கைவிட்டு விட மாட்டார்களா? பாபாவின் படத்தின் முன் சென்று அழுதார். மன்னிப்பு கேட்டார்.

தனது ஒரே காப்பாளர் பாபா மட்டுமே. அவர் தன் பக்தனை என்றும் கைவிட்டதில்லை. இனி தன்னை காப்பது அவர் பொறுப்பு என்றிருந்தார். நாட்கள் நகர்ந்தன. ஆனால் பணம் வரும் வழி தெரியவில்லை. கெடு நாளுக்கு முன் தினம் தீட்சித் தன் அலுவலகத்தில் அமர்ந்து ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது நண்பரின் மகன் முப்பதாயிரம் பணத்தோடு வந்து தீட்சித்திடம் இதை எப்படி முதலீடு செய்யலாம் என ஆலோசனைக் கேட்டான். முதலீட்டில் உள்ள சாதக பாதகத்தைச் சொன்னார். மேலும் தனக்கு இப்போது முப்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. தன்னிடம் முதலீடு செய்யலாம். நண்பரின் மகன் என்பதால் எவ்வித சலுகையும் காட்டத் தேவையில்லை. பணத்தை குறிப்பிட்ட நாளில் திருப்பிக் கொடுக்கமுடியாமலும்போகலாம். ஆகவே தனக்குக் கொடுப்பதை கடைசி வாய்ப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று ஒளிவு மறைவில்லாமல் கூறினார்.

காகா சாகேப் தீட்சித் பாபாவின் சொல்லை வேத வாக்காகக் கருதி வாழ்ந்தவர். நானா சாகேப் சந்தோர்க்கரும், தாசகணுவும் பாபாவை இறை அவதாரம் என நம்பாதபோது, தீட்சித் பாபாவை இறை அவதாரம், தனது சத்குரு என எண்ணி வாழ்ந்தவர். அதனால்தான் ஆட்டை வெட்டு என பாபா சொன்னபோது, தான் பிராமணராக இருந்தும் கத்தியை எடுத்து ஓங்கி வெட்ட ஆயத்தமானார்.

இது பாபா அவருக்கு வைத்த கடும்சோதனை. சோதனையில் வெற்றியும் பெற்றார். நேர்மையானவர், மும்பையில் புகழ்பெற்ற வக்கீல், செல்வந்தர். அவருக்கு இப்படிப்பட்ட இக்கட்டான நிலை எல்லாம் பாபாவின் லீலைதான்.

தீட்சித்தின் வார்த்தையைக் கேட்ட நண்பரின் மகன் நெகிழ்ந்து அந்த நேரத்தில் தான் அவருக்கு உதவவில்லை என்றால், தன் தந்தைக்கு தான் உண்மையான மகனாக இருக்கமுடியாது என பணத்தை தீட்சித்திடம் கொடுத்துவிட்டான். இதை வைத்து மறுநாளே அதாவது குறித்த நாளில் தீட்சித் கடனை அடைத்துவிட்டார்.

தீட்சித்தின் தம்பி சதாசிவ் சட்டம் படித்தவர். தனது தொழிலை நாக்பூர், மும்பை, கண்ட்வா ஆகிய இடங்களில் துவங்கி எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் வருந்தினார். உடனே பாபாவிடம் சீட்டு போட்டுப் பார்த்தார் தீட்சித்.

அதன்படி தம்பியை மும்பையிலுள்ள தனது அலுவலகத்திற்கு அழைத்து வேலை கொடுத்தார். அங்கேயும் தம்பிக்குத் திருப்தியில்லை. ஆகவே, ஊர் திரும்புவதாக அண்ணனிடம் கூறினார்.

தீட்சித்துக்கு ஆச்சர்யம்- பாபாவிடம் சீட்டு போட்டுப்பார்த்துதானே மும்பைக்கு அழைத்தேன். பாபாவின் வழிகாட்டல் எப்படி பொய்யாகும்? என நினைத்தார். தம்பியிடம் தீபாவளி விடுமுறை கழித்து ஊர் திரும்பலாம் என்றார்.

தீட்சித்தின் நண்பர் அவரை அணுகி கட்ச் மாநிலத்தின் வங்கியை நிர்வகிக்க குஜராத்தி மொழிதெரிந்த நேர்மையான ஒருவர் தேவை எனக் கேட்டார்.

உடனே தீட்சித் அவரிடம் தனது தம்பி அதற்கு ஏற்றவரா எனக் கேட்டார். நண்பருக்கு மகிழ்ச்சி. அவரது தம்பி ஏதோ ஒரு வேலையில் இருப்பார் என நினைத்தார். உடனே நண்பரும் தம்பியை சிபாரிசு செய்தார்.

அந்தக் காலத்தில் மாதச்சம்பளம் ஆயிரம் ரூபாய். அதுமட்டுமல்லாமல் அதே வங்கியில் வெகு காலம் வேலை பார்த்தார்.

பாபாவிடம் அசைக்கமுடியாத, சற்றும் சலனம் இல்லாத நம்பிக்கை கொண்டவர் தீட்சித். அப்படிப்பட்டவருக்கு சாதாரணமாகவா செய்வார் பாபா.

கொஞ்சம் தாமதமானாலும் அவரின் தம்பிக்கு நீண்ட நாளைக்கு எது நன்மை தரும் என்று ஆராய்ந்து அற்புதமான உயர் பதவியை அல்லவா அளித்துவிட்டார் பாபா-

தீட்சித்தின் தம்பிக்கு மட்டுமல்ல, தனது ஒவ்வொரு பக்தனுக்கும் அவர் அப்படித்தான் செய்கிறார். அவர் கருணை அப்படிப்பட்டது- ஆனால், நாம் செய்யவேண்டியதெல்லாம் அவர் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை.

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s