ஏன் எல்லோரும் பயன்பெறுவதில்லை?

DSC_0005

எல்லோரும் சாயி நாம தீட்சை பெற்று உயர விரும்புவதில்லை. அவர்களுக்கு அவர் தருகிற அற்புதங்கள் மட்டுமே போதும், அவர் வேண்டாம். அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டாம்.

சீரடி டயரிக் குறிப்பு என்ற புத்தகத்தை எழுதிய காபர் தே பற்றி படிக்கிறோம். அவர் பாபாவிடமிருந்து நிறைய அற்புதங்களை அனுபவித்தார்.

கஷ்ட காலத்தில் பாபாவே தஞ்சம் எனக்கிடந்தார். கஷ்டம் விலகியபோதோ, மீண்டும் வக்கீல் தொழில் செய்யச் சென்றுவிட்டார்.

அதன்பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து ஒருமுறை வந்து பாபாவை தரிசித்துச் சென்றார். லவுகீகத்திற்காக மட்டுமே பாபாவை நாடுகிறவர்கள், சீசனுக்காகக் கூடுகிற பறவைகள் போன்றவர்கள். கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து கடுமையான விரதமிருந்து நாற்பத்தெட்டு நாட்கள் கழிந்து சபரி மலைச் சென்று ஐயனை தரிசித்து விட்டு, திரும்பும் போதே அவரை விட்டுவிடுகிற தற்காலிக பக்தர்களைப் போன்றவர்கள். இதோடு அடுத்த ஆண்டு கார்த்திகை மாதத்தைதான் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். இவர்கள் பூத்துக் காய்த்து முற்றும் பழுக்கிற பக்குவம் இல்லாதவர்கள்.

சாயி பக்தனான நீ அப்படியிருக்காதே! எப்போதும் சாயி பக்தி உள்ளவனாக இரு. எந்த நிலையிலும் அவருடன் சேர்ந்து வாழ்.. அதுதான் பழுக்கிற நிலை. இந்த நிலையைப் பெறுவதற்கு பக்தியும் உண்மையான நம்பிக்கையும் உன் மனதில் இருக்கவேண்டும்.

பணிவோடும், தன்னலமற்ற குணத்தோடும், சேவை மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும். தூயவனாகவும், களங்கம் இல்லாதவனாகவும் உன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இவற்றோடு நீ சாயி சாயி என்று சதா நேரமும் சொல்வாயானால் உனக்கு மேன்மை நிச்சயம்!

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s