மாற்றம்!

baba6

சத்குரு சாயி அவர்கள் எப்படி சாயிபக்தர் ஒருவரை மாற்றுகிறார் என்பதைப் பார்க்கலாம்.

வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் ஒரு சாயி பக்தர், 2012ல் என்னிடம் வந்தார்.

”குடும்பப் பிரச்சினையால் மனைவி மகள் பிரிந்து சென்றுவிட்டனர். மகளைப் பார்க்க முடியவில்லை, என்னைப் பற்றி தவறான அபிப்பிராயத்தைக் கூறி மகளின் மனதை மாற்றிவிட்டார்கள். இதனால் நல்லவனாக, அன்பான தந்தையாக இருந்தும் என்னை தவிர்க்கிறாள். நான் பாசத்தால் தவிக்கிறேன், என் மகள் என்னோடு அன்பாக இருக்க, என்னுடன் பேச சாயியிடம் வேண்டுங்கள்” என்றார்.

அவர் வரும்போதெல்லாம் பாபா இப்படி செய்வார், அப்படி செய்வார் என்று சொல்லிக் கொண்டே இருந்தேன்.. தொடர்ந்து சாயி நாம தியானத்தை செய்யுங்கள், மகள் தாமாக வருவாள் என்றேன். அவரும் சாயி நாம தியானத்தில் ஈடுபட்டு, இப்போது எந்த நேரமும் சாயி சாயி என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார். இன்று சாயி தனக்காக என்ன செய்தார் என்பது பற்றி பட்டியல் போட்டு எழுதி வருவதாகவும், இதுவரை 354 அற்புதங்களைச் செய்திருக்கிறார் என்றும் கூறினார்.

”உங்கள் மகள் வந்து பார்த்தாளா?” என்று கேட்டபோது, ”அவள் வந்தாலும் வராமல் போனாலும் பரவாயில்லை என்பது போல மனம் மாறுதலடைந்து விட்டது.. அதைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவது கிடையாது!” என்றார்.

எந்த ஒன்றுக்காக அவரிடம் வருகிறோமோ, அந்த ஒன்று நிலையற்ற தன்மையுடையது. அதற்காகவா நீ வருத்தப்படுகிறாய்? நிலையானதை நான் கொடுக்கிறேன் என்று முன் கூட்டியே சொல்லாமல், கேட்பதைத் தருகிறேன் வா எனக் கூட்டிவந்து, மனதிற்குள் மாற்றத்தை உண்டாக்கி, அதை மறக்கச்செய்துவிடுவதுதான் பாபாவின் செயல் முறை. இது ஆன்ம ஞானத்திற்கான அஸ்திவாரம்.

இதுவரை தன்னை உணராததால் நிலையற்ற ஒன்றுக்காக நாம் அலைகிறோம். விக்ஷயத்தை உணர்ந்த பிறகோ, அதாவது தன்னுடைய உண்மை நிலையை உணர்ந்த பிறகு, அலைவதும் நிற்கிறது, துயரமும் போகிறது என்பதுதான் உண்மை. இதை அந்த வங்கி மேலாளருக்கு உணர்ந்துகொள்ளச் செய்தார் பாபா.

ஆரம்பத்திலேயே பாபா அற்புதத்தைச் செய்திருந்தால், இந்த மேலாளருக்கு பாபாவின் மகிமை அவ்வளவாகத் தெரிந்திருக்காது. தன்னை அவர் உணர்ந்திருக்கவும் முடியாது.

பண்படாத நிலத்தில் விதைத்திருந்தால் விளைச்சலை எதிர்பார்த்திருக்க முடியாது, இப்போதோ அவர் பண்பட்ட நிலமாக மாறியதால், அவரைப் பார்த்து அவரது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என அனைவரும் சாயி பக்தர்களாக மாறியிருக்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s