பாபாவே மகாலட்சுமி!

200px-Sai_Baba

பக்தர்கள் குழுமியிருந்தபோது, திருமதி தார்கட் டெண்டுல்கர் என்ற பெண்மணியிடம் பாபா, ”தாயே! நான் உன் வீட்டிற்கு தினமும் மூன்று முறை வரவேண்டி யிருக்கிறது, அல்லவா?” எனக்கேட்டார் பாபா.

பக்கத்திலிருந்த உள்ளூர் பெண்மணிக்கு ஆச்சரியம்! தினமும் பாபா சீரடியில்தானே இருக்கிறார். பிறகு எப்படி பாந்த்ராவுக்கு தினமும் செல்வதாகக் கூறுகிறார்? இது விநோதமான பேச்சாக இருக்கிறதே என நினைத்தாள்.

”நான் பொய் பேசுவதில்லை. நான் மகா லட்சுமி. தாயே! உன் இல்லத்திற்கு வருகிறேன், நான் புசிக்க பண்டங்களை அளிக்கிறாய், உண்மைதானே?”.

”ஆமாம்” என்றார் திருமதி டெண்டுல்கர்.

அவரது மகனிடமும் இதே கேள்வியைக்கேட்டார் பாபா. அவனும் ”ஆமாம்,வருகிறீர்கள்” என்றான்.

உடனே பாபா, உள்ளூர் பெண்மணியிடம், ”ஆமாம் தாயே! இவர் வீட்டிற்குப் போகிறேன். வழியில் ஒரு சுவர். அதன் மீது ஏறித்தாண்டினால், ரயில்வே தண்டவாளம். அதற்கு அப்பால் இவர்கள் வீடு” என அந்த வீட்டைப்பற்றிச் சொன்னார். அந்த வீட்டிற்குப் போக சுவர்களையும் பள்ளங்களையும் தாண்ட வேண்டியிருக்கிறது என்றும் சொன்னார். கேட்டவர்களுக்குத் திகைப்பு உண்டானது.

                        lakmi

                                                                                                                                                                                                                                                                                                                            (பாபா மகாலட்சுமி என்பதால்தான் அவரது மந்திரத்தில் ஸ்ரீ சாயி என்கிறோம். அது மட்டுமல்ல, மகாலட்சுமி அஷ்டோத்திரத்தில் குரு சொரூபிணி என்று அம்மையை அழைக்கிறார்கள். அதாவது குரு வடிவானவள் மகாலட்சுமி என்று பொருள்.

குருவை வணங்கினால் எல்லாவித செல்வங்களையும் பெறலாம் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s