கூட்டுப் பிரார்த்தனை

கூட்டுப் பிரார்த்தனை
e419f-shirdi_saibaba

கோடி நன்மை தரும் கூட்டுப்பிரார்த்தனை

இறைவனுடன் மனம் விட்டுப்பேசுவதுதான் வேண்டுதல். பிரார்த்தனை செய்யும்போது அவரை நெருங்குகிறோம். அவ்வாறு நெருங்கும் போது உடனடியாக நம் கோரிக்கைகளுக்கு அவர் பதில் தருகிறார்.
தொடர் கதையான கஷ்டம் இருப்பதற்க்குக் காரணம், முறையான பிரார்த்தனை வழி முறையினை நாம் அறியாதிருப்பது. இதனால்தான் பிரச்சனை காலத்தில் நாம் துவண்டுவிடுகிறோம். இறைவனுடன் நெருக்கமாக இல்லாத நிலையில் நமக்கும், பகவானுக்கும் இடையே இடைவெளி ஏற்படுவதால், பிரச்சனைகள் வரும்போது நம்மால் நெகடிவ் சக்திகளை எதிர்த்து போரிட இயலாத நிலையும், தெய்வ பலம் கிடைக்காத நிலையும் தொடருகிறது.
உண்மையான நம்பிக்கை மற்றும் விசுவாசத்துடன் பிரார்த்தனை செய்தால் எப்படிப்பட்ட பிரச்சனையும் விரைவில் தீர்ந்து போகும். எந்த நேரத்திலும் கடவுள் கைவிடமாட்டார் என ஆணித்தரமாக நம்புவதே விசுவாசம். இத்தகைய நம்பிக்கையினை ஊட்டி எந்த பிரச்சனை வந்தாலும் எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு என்பதை அனுபவப்பூர்வமாக கற்றுத்தரவும், பல நல்ல ஆத்மாக்கள் சேர்ந்து கஷ்டப்படுவோருக்காக பிரார்த்தனை செய்யவுமே புதுப்பெருங்களத்தூரில் சீரடி சாயிபாபா பிரார்த்தனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு நடக்கும் கூட்டுப்பிரார்த்தனையில் எண்ணற்ற அற்புதங்கள் நடக்கின்றன என்பது பக்தர்களின் கண்கூடான அனுபவம். . சாயி பாபா பிரார்த்தனை மையத்தில், பிரார்த்தனைக்கு மட்டுமே முதலிடம் தரப்படுகிறது.

இந்த மையத்திற்க்கு வருகிறவர்கள் கோரிக்கைகளை எழுதி பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டு, மவுனமாக அமர்ந்து பிரார்த்தனை செய்தால் போதும். அல்லது செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் நடக்கும் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தாலே போதும். சர்வ சக்தியுள்ள சாயியிடம், பிறருக்காக பிரார்த்தனை செய்வதையே வாழ்க்கையாக வைத்திருக்கிற சாயி வரதராஜன் அருகிலிருந்து கூட்டுப்பிரார்த்தனையை நடத்துகிறார்.
அற்புதங்களின் அணிவகுப்பினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுபவித்துச் செல்கிறார்கள். நீங்களும் இதில் இலவசமாக பங்கு பெறலாம். பெருங்களத்தூர் சீரடி சாயி பாபா தியான மையத்தில் தனிப்பட்ட உங்கள் பிரார்த்தனையையும் வைக்கலாம். பாபா செய்யும் அற்புதத்தினை நீங்களும் அனுபவிக்கலாம்.
இதுவரை வாழ்வில் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்தவர்களும், கோரிக்கை வைத்து இது வரை நடக்கவில்லை என்பவர்களும் ஒருமுறை இம் மையத்திற்க்கு வந்து ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்துவிட்டு செல்லுங்கள். உங்கள் வாழ்க்கை மாறுவதை நீங்களே கண்கூடாக காண்பீர்கள்.
ஜெய் சாயிராம்

விபரங்களுக்கு

ஷீரடி சாயி பாபா பிரார்த்தனை மையம்

கல்கி தெரு, (கிருஷ்ணா ரோடு அருகில்),

புதுப்பெருங்களத்தூர்,

சென்னை – 600 063.

அலைபேசி: 90940 33288. 9841203311

வண்டலூருக்கு முன் ஸ்டாப்பில், சென்னையிலிருந்து காரில் வருவோர் பெருங்களத்தூர் சிக்னலில் திரும்பி முதல் கேட் வழியாக உள்ளே நுழைய வேண்டும். இடது பக்கத்தில் காமாட்சி அம்மன் கோயில் எங்கு உள்ளது எனக்கேட்டு, அங்கு வந்த பின் கல்கி தெரு, பாபா ஆலயம் என வழி கேட்டால் சரியாகச் சொல்வார்கள்.
செங்கல்பட்டு பக்கம் இருந்து வருவோர் முதல் கேட் வழியாக உள்ளே நுழைந்து நேராக வந்து இடப்பக்கம் திரும்பினால் கிருஷ்ணா ரோடு வருகிற்து. அதன் அருகிலுள்ள பாபா கோயிலைக்கேட்டு வரலாம்.
பேருந்தில் வருவோர் பெருங்களத்தூரில் இறங்கி மேற்சொன்ன வழியிலேயே வரலாம். தாம்பரம் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் தாம்பரத்திற்க்கும் வண்டலூருக்கும் இடையே பெருங்களத்தூர் உள்ளது. மின் தொடர் வண்டி ரயில் நிலையமும் உள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து மின் தொடர் வண்டி ரயில் நிலையத்தினை கடந்து நடந்து சென்றால் ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரம்தான்.

வயோதிகர்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் ஆட்டோவில் செல்லலாம். மற்றவர்கள் சாயி நாமத்தினை உச்சரித்தபடி நடக்கலாம்.

ஜெய் சாயிராம்

பிரார்த்தனை மையம் திறந்திருக்கும் நேரம்

காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை

Advertisements

7 comments on “கூட்டுப் பிரார்த்தனை

 1. தங்கள் பாபா கோவில் வரும் வழியை நன்கு விளக்கியுள்ளீர்கள். நன்றி. ஒரு சிரு sketch map போட்டு இருந்தால் பக்தர்களுக்கு மேலும் நலம் பயக்கும் என எண்ணுகின்றேன். நன்றி.

  Like

  • தங்களது மேலான ஆலோசனைக்கு நன்றி! தற்போது வரைபடம் இணைக்கப்பட்டுவிட்டது. இத்தளத்தினை மேம்படுத்த அளிக்கப்படும் அனைத்து ஆலோசனைகளும் எங்களுக்கு மேலும் உதவியாக இருக்கும்.
   ஜெய்சாய்ராம்

   Like

   • ஓம் சாய் ராம்.. எங்ளது அனுபவங்கள் மற்றும் எங்களுக்காக பிரார்த்தனைக்கான தகவல்களை எவ்வாறு தங்களுக்கு தெரிவிப்பது. மெயில் ஐடி தெரிவிக்க..

    Like

 2. Sai ram. Enakku marriage agi one year aguthu innum kuzhanthai ilia. enakkaga koottu piraththanai seinga appa. please…. Baba mattum nambi irukkum abalai penn.
  Nan Thursday Thursday perungalathur piraththanai mayam varukiren. yen venduthalai baba yetru kolvara…

  Like

  • சாய்ராம்,
   பெருங்களத்தூர் மையத்தில் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் பிரார்த்தனையின் போது பாபாவின் பாதங்களில் தங்களது வேண்டுதலை சமர்ப்பியுங்கள். பாபா நிச்சயம் கருணை புரிவார்
   சாய்ராம்

   Like

 3. sai ram,my name is selvi. i’m in erode. i’ll try to lot of times in bank exam but not selected ,i’ll confident this time baba hands to me, coming sunday (27-07-2014) attend the sbi clerk exam,so pls pray for me and than my age is 31 not married, asetro coming but yeathuvama shoot agalla,yeathu yeaduthallum thadukall akkuthu,yenna reason therialla.Appa,Amma rommba kavallai padurraka,yennalla avarkal kastapaduvathai parka mudiyalla, avanni 30kulla yennoda marriage mudivagannum,yennaka pray pannuka pls. yennoda tholvil errunthu yennaku vettri keedaikannum,yennkalluku help panna yarrum yella,so pls baba help for my family.

  JAI SAI RAM

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s